Monday, March 26, 2018

பட்டினத்தார் பாடல்கள்
திருக்கோயில் அகவல்- 1
நினைமின் மனமே! நினைமின் மனமே! சிவபெரு மனைச் செம்பொனம் வலவனை நினைமின் மனமே! நினைமின் மனமே! அலகைத் தேரின் அலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க! இங்கு அலகைத் தேர் என்பது கால் நீர் அலமருகுகால் என்பது சுழலும் காற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றின மறையும் மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறையும் மறைந்தன உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம் என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும் பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும் அனைத்தும் நினைக்கொன்றன. தின்றனை அனைத்தும் அனைத்து நினைத் தின்றன பெற்றனை அனைத்தும் அனைத்து நினைப் பெற்றன ஒப்பினை அனைத்தும் அனைத்து நினை ஒப்பின செல்வத்துக் களித்தனை தரித்திரத்து அழுங்கினை சுவர்க்கத்து இருந்தனை நரகில் கிடந்தனை இங்கு ஒப்பினை என்பது பாதுகாத்தன அழுங்கினை என்பது வருத்தம் அடைந்ததாய் என்று பொருள்படும். 9017_1207229626829_4640545_nஇன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை அன்றொன்று ஒழியாது உற்றனை அன்றியும் புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை இதனுள் இங்கு இருநிலம் என்பது பெரும் பூமி ,புற்புதம் என்பது நீர்க்குமிழி ,குரம்பை என்பது சிறு குடிசை ,இருவினைக்கூட்டை என்பது நல்வினை தீவினை ஆகிய பறவைகள் தங்கும் கூடு என்பது குறிப்பிடத்தக்கது. பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி மீளுங் குறும்பியும் வெளிப்படும் ஒருபொறி சளியும் நீரும் தவழும் ஒருபொறி உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி வளியும் மலமும் வழங்கும் ஒருவழி 5295_1207229346822_2288866_nசலமும் சீயும் சரியும் ஒருவழி ஒள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை ஒள்ளுறத் தேர்ந்து கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை பொறி என்பது ஐம்பொறி, சட்டகம் - உடல் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment