அவர்களில் அனேமானவர்கள் கிரகஸ்த நிலையை அடைந்தே வானபிரதிஸ்டம், சன்னியாச நிலைகளை அடைந்தனர். உறவில் துறவைக் கொண்டு பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்து உடல் சார்ந்தெழும் விடையங்களைக் கட்டுப்படுத்தி அத்மா சந்த விடையங்களை கடைப்பிடித்து உலகியலை வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். இவர்கள் உலகப்போக்குக்கு மறுபட்டவர்கள். சிந்தனை செயல் அனைத்துமே உலகியல் விடுதலையே. ஆசை காமமாக மாறி பற்றுற்ரு அதை அடைய முடியாமையினால் ஆணவம் ஏற்பட்டு பொறாமை வஞ்சகம் சூதாகி மனம் அழிந்து போவதிலிருந்து தடுத்து நிறுத்தி பிறவாமையை ஏற்படுத்காக எப்போதும் சிந்தித்து தன்னை அடைந்தவர்களுக்கு வழிகாட்டுவதே அவர்களின் பணி. அலைபாயும் சித்தத்தை அடக்கி ஒருநிலைப்படுத்தி சித்தி பெற்று பூரணமானவர்கள். அடைதற்கரியவர்கள். அவகளை காண்பதே அரிது. “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் இயம்பியுள்ளார். பிராத்தம் தேவை. எம்நிலை அறிய அவன் அருள் தேவை. எவன்னெருவன் அவனது ஆத்மாவை உணருகின்றானோ அவனை ஆத்மா தான் அடைய வேண்டியதை நோக்கி வழிநடத்தும். எம்முள்தான் ஆத்மா இருக்கின்றது. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை அடைய என்னும் போது உடல் அனுபவிக்கும் விடையங்களை விட்டு நீங்க தயாரில்லை. இங்கு அத்மாவுக்கும் உடலுக்கும் போர் நடக்கின்றது. வெற்றியும் தோல்வியும் மனத்தில் தங்கியுள்ளது. இங்கு தான் வைராக்கியம் தேவை. உடலை வெல்லுவது என்பது. “குதிரைக் கொம்புக்கு” ஒப்பானது. இதை வென்றவர்கள் சித்தர்கள்;. “திருவருள் பெற குருவருள் தேவை”. “குருவில்லா வித்தை பாழ்” என்று கூறுவர்.
சித்தர்களின் வரலாற்றை நோக்கும் போது மூலர்மரபு, பாலமரபு, கைலாய மரபு என சிலர் கூறுகின்றன். தமிழ்நாட்டு சித்தர்களை பதினெண் சித்தர்கள் என்று கூறுகின்றனர். சித்தர்களின் பெயர்களைக் கூறுகையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இருப்பனும் காலத்துக்கு காலம் உலகதேவையின் பொருட்டு மீண்;டும் மீண்டும் சித்தர்கள் அவதாரம் எடுக்கப்பதுண்டு.
அந்தவகையில் கருவூரர் எழுதிய அட்டமா சித்து என்ற நூலில் பதினெண் சித்தர்களின் வரிகையில் 1.கும்பமுனி 2.நந்திமுனி 3.கோரக்கர் 4.புலிப்பாணி 5.புகண்டசிஷி 6.திருமூலர் 7.தேரையர் 8.யூகிமுகி 9.மச்சமுனி 10.புண்ணாக்கீசர் 11.இடைக்காட்டார் 12.பூனைக்கண்ணர் 13.சிவாக்யர் 14. சண்டிகேசர் 15.உரோமரிஷி 16.கட்டநாதர் 17.காலாங்கி 18.போகர். என்றும்
அருணாசல குரு எழுதிய நிஜானந்த போதம் என்ற நூலில் 1.அகத்தியர் 2.போகர் 3.நந்தீசர் 4. புண்ணாக்கீசர் 5.கருவூரார் 6.சுந்தராநந்தர் 7.ஆனந்தர் 8.கொங்கணர் 9.பிரம்மமுனி 10. உரோமரிஷி 11.வாசமுனி 12.அமலமுனி 13.காலமுனி 14. கோரகர் 15.சட்டைமுனி 16. மச்சமுனி 17. இடைக்காட்டார் 18.தேரையர்.
அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க்கலைக்களஞ்கியம் 1.அகத்தியர்.
2.போகர் 3. கோரக்கர் 4. கைலாசநாதர். 5. சட்டமுனி. 6. திருமூலர். 7.நந்தி. 8. கூன்கண்ணர் 9. கொங்கணர். 10. மச்சமுனி 11. வாசமுனி.
12. கூர்மமுனி 13. கமலமுனி 14. இடைக்காட்டார் 15. புண்ணாக்கீசர்
16. சுந்தரானந்தர் 17. ரோமருஷி. 18. பிரமமுனி. இவர்களுடன் தன்வந்திரி புலஸ்தியர் புசுண்டர் கருவூரார் இராதமதேவர். தேரையர் கபிலர் முதலியசரும் கூறுவர்.
பிற்காலத்தில் இணைக்கப்பட்ட பட்டியல் 1.அகப்பேய்ச்சித்தர் 2.அழுகுணிக்கித்தர் 3.இடைக்காடர் 4.கடுவெளிச்சித்தர் 5.கஞ்சமலைக்கித்தர் 6.கல்லுளிச் சித்தர் 7.காலாட்டிக்சித்தா 8.முதம்பைச்சித்தர் 9. கவுபாலச்சித்தர் 10. சங்கிலிச்சித்தர் 11.ஞானசித்தர் 12.திருகோணமலைச்சித்தர் 13.தொழுகண்ணிச்சித்தர் 14. நாதாந்தக் சித்தர் 15.நொண்டிக்சித்தர் 16. பாம்பாட்டிச்சித்தர் 17. விளையாட்டுச் சித்தர் 18.மொனசித்தர்.
பத்தொன்பதாம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் வெளியான பதினெண் சித்தர்கள் ஞானக்கோவையில் சிவாக்கியர் முதல் புசுண்டர் வரை பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக அகராதி திருமூலர் முதல் கோரக்கர் வரை பட்டியல் படுத்தியுள்ளது. பொதுவாக நோக்கும் போது இப்பட்டியல் தெரிவுக்கு ஆதாரபூவமான அடிப்படை எதுவும்மில்லை. இருப்பினும் சித்தர்கள் இவர்கள்தான் என்றமுடிவுக்கு வரமுடியும். இவர்களுடன் அத்திரி,பிருகு,மிருகண்டர்,வகிட்டர்,கவுதமர்,அசுவினித்தேவர்,கபிலர்,பராசரர், துருவாசர்,வான்மீகி,சமதக்னி,காசியப்பர் முதலியோரும் சித்தர்களாக கணிக்கப்படுகின்றனர்.
இன்னும் கூறுவதானால் சப்தரிஷிகள் இராஜரிஷிகள் மகரிஷிகள் என்ரெல்லாம் அழைக்கின்றனர். பொதுவாக நோக்கும் போது “ரிஷிமூலம் நதிமூலம்” பார்க்கக்கூடாது என்பது விதி அல்லது மரபு என்பர். இன்றும் காலத்தின் தேவைக்கு ஏற்ப பலர் தொன்றி கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் தோண்றுவதும் காலத்தின் தேவை தான். மனிதன் உயிவாழ உழைத்த காலம் போய் அடம்பர வாழ்கைக்காக வாங்கிய பொருள்களை பராமரிப்பதற்பாக போட்டிபோட்டு உழைக்கவேண்டிய நிற்பதத்துக்குள்ளாகி மனமழிந்து உலகம் அழிந்து கொண்டுடிருக்கின்றது. மனிதத்துவத்தை நிலை நாட்டவும் படைப்பின் இரகசியம் உணர்தவும். சித்தர்கள் பிறந்தும் ஆட்கொண்டும் வருகின்றனர்.
சித்தர்களின் அவதாரம் பற்றி பார்க்கும் போது
இல சித்தரின் பெயர் பிறந்த நாள் நட்சத்திரம் ஜீவ சமாதி
01. மச்சமுனி அடி ரோகிணி திருப்பெருங்குன்றம்
02. பாம்பாட்டிச் சித்தர் காத்திகை மிருகசீரிடம் சங்கரன் கோயில்(மருதமலை)
03. பதஞ்சலி வைகாசி சதயம் எட்டுக்குடி
04. நந்தீஸ்வரர் வைகாசி விசாகம் காசி(திருகாளத்தில் வாழ்தவர்)
05. தன்வந்திரி ஐப்பசி புனர்பூசம் வைத்தீஸ்வரன் கோவில்
06. சுந்தரானந்தர் ஆவணி ரேவதி மதுரை
07. சட்டைமுனி ஆவணி மிருகசீரிடம் திருவரங்கம்
08. கோரக்கர் காத்திகை அவிட்டம் வடக்கு பொகை நல்லுர்
09. குதம்பைச்சித்தர் ஆடி விசாகம் மயிலாடுதுறை
10. கருவுரார் சித்திரை அத்தம் கருவூர்
11. கமலமுனி வைகாசி பூரம் திருவாரூர்
12. இராமதேவர் மாசி புனர்பூசம் அழகர் கோவில்
13. இடைக்காடர் புரட்டாசி திருவாதிரை திருவண்ணாமலை
14 திருமூலர் புரட்டாசி அவிட்டம் சிதம்பரம்
15 புலிப்பாணி புரட்டாசி சுவாதி பழனி
16 போகர் வைகாசி பரனி பழனி
17. அகத்தியர் மார்கழி ஆயிலியம் ஆனந்த சயனம்
சித்தர்கள் வரிசையில் மிக பழையானவராக ஆய்வுகள் கூறுவது திருமூலரையே கி.பி.ஐந்தாம் நுற்றாண்டிண் முற்பகுதியில் வாழ்ந்தராக குறிப்பிடப்படினும் கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் சமணநுல்களிலே முதலில் சித்தர் என்னும் பெயர் முதலில் கானப்படுகின்றது. பழம் பெரும் இலக்கியநூல் தொல்காப்பியத்தில் கூட சித்தன் என்ற பெயர் இல்லை. குறுந்தொகைப் பாடலொன்றில் “நிறை மொழி மாந்தா”; எனும் முறிப் பொன்று உண்டு.
சிவனை சித்தர் என சம்பந்தர் நாவுக்கரசர் போன்றோர் தேவாரங்களில் கானப்படுவதைக்கானலாம். திருவிளையாடல் பூராணம் சிவனை சித்தனாக கூறுகின்றது. மேல் நாட்டவர்கள் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டில் தான் அறிமுகமானதாக டி.ஓ.ரன்ஸ்(னு.ழு.சுரநௌ)என்பவர் குறிப்பிடுகின்றார். ஆய்வாளர் சித்தர்கள் காலம் பற்றி பல கருத்துக்கள் கானப்பாடினும் நாயன்மார்களின் பட்டினலையும் சித்தர்களுக்குள்ளே அடக்குகின்றனர்.
திருமூலர் வாழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் கானப்பட்டாலும் திருமந்திரம் ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒருவர் காலத்தேவைகளின் நிமித்தம் வேறுவேறு பெயர்களில் அவதாரம் எடுப்தாக நம்பப்படுகின்றது. சிரடிசாயிபாபா சத்தியசாயிபாபாவாக அவதாரம் எடுத்தாகவும் இனி பிரேமசாயிபாபாவாக அவதாரமெடுப்பதாகவும் கூறப்படுகின்றது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இராமர், கிருஷ்ணர் ஆகியோரின் இணைந்த அவதாரமாகக் கருதப்படுகின்றது. மகாவிஸ்ணு தசாவதாரத்தில் ஒன்பது அவதாரம் எடுத்து விட்டார். இறுதியான கல்கி அவதாரம் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கலியுகம் தோன்றுவதை அறிய அறிகுறிகளை மகாபாரதம், பகவத்கீதை, புனித விவிலியம், புனித அல்குறான், போன்ற நூல்களும் கலக்ஞாணம் என்று ஸ்ரீ காகபுசுண்டர், ஸ்ரீ வீரப்பிரம்மம், ஸ்ரீ ஈசுவரப்பட்டர் போன்றோர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்டவைகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. சித்தர்கள் திரிகால முனாந்;தவர்கள். நடந்தது, நடக்கின்றது, நடக்கவிருப்பது போன்றவற்றை சுக்குமமாகவும், செய்கைகள் முலமும் உலகுக்கு வெளிப்படுத்துபவர்கள். திரிகரண சுத்தியுள்ளவர்கள். மனம், வாக்கு, காயம் எனும் மூன்று ஒருங்கே செயல்படுபவர்கள்.
சித்தன் என்னும் போது சித்தம் தெளிந்தவன் என்பது பொருள். சித்தம் தெளிந்து தன்னுள் சிவத்தை கண்டு அதை அனுபவித்தவன். என்பது பொருள். எம்மைக் கடந்தும் எம்முள்ளும் இருக்கும் பொருன் ஒன்று உண்டு. அதுவே எம்மையும் பிரபஞ்கத்தையும் இயக்குகின்றது. என்பதை எப்போது மனிதன் உணர்தானோ அப்போதே சித்தன் பூ வுலகில் உதித்து விட்டான். சத்தாகிய பாசத்தால் கட்டுண்ட ஆன்மாவாகிய சதசத் சித்தாகிய பதியை நாடி சத் சித்தாகி ஆனந்தத்தை அனுபவிக்கும். அதை சத் சித் ஆனந்தம் மாகிய “சச்சிதானந்தம்” அதை அடைந்தவர்களே சித்தர்கள். “தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”; என்பதே இவர்களின் தாரகமந்திரம். ஆன்மா நுன்னுடலை நாடி சிவப்பேற்றை அடைய வழிகாட்டுபவர்கள். அவர்களை நாடி இறை இன்பம் பெறுவோம்.
No comments:
Post a Comment