Monday, August 29, 2011

“பாலுக்கு பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் லீந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்”

பாற்கடலை கடைந்து தேவர்கள் அமுதம் பெற்றனர் அசுரருக்கு கிடைக் வில்லை.தேவர்கள் அருந்தும் போது கையால் கீழ் விழுந்ததை அருந்திய இராகு கேது நவக்கிரகங்களானது. 
          பாற்கடல் எங்குள்ளது ? மாந்தாருமலை எங்கே? தேவர்கள் யார்? அசுரர்கள்யார்? என்ற பலகேள்விகளுக்கு பதில் கூற புராணங்கள் விளைகின்றன. இதை அறிவியல் ஏற்கவும்மில்லை  இது கட்டுக்கதை என்று தள்ளிவிட்டன இளைஞர்கள் அவர்கள் எதிகால சந்ததியினர் ஆழ இருப்பவர்கள் இத்தேவையை நிறைவேற்ற இருப்பது ஆலயங்கள் அங்கு இருப்பவர்கள் பூசகர்கள் இவர்கள் பரம்பரையாணவர்கள்  இந்நிலையில் பதில் கூறவேண்டியவர் கள் ஞானிகள் . இப்போது குருகுல வாழ்கையயும் இல்லை. குருவை தேடி அலைபவருமில்லிலை பொருளை தேடி அலையும் உலகில் அருள் ஏது? அருள்தேடி அலைபவன் குருவின் நிழலிவ்; அழியா பொருளுடன் அமைதியின் எல்லையில் திளைத்திருக்க உலப் பொருள் தேடி அலைபவன்  பதட்டத்தின் மத்தியில் அமைதியின்மையின் விளிப்பில் திளைக்கின்றான் புராணம் கேட்க  நேரம் ஏது?  உயிர் வாழ்வதாக்காக உழைத்த காலம் போய் ஆடம்பர தேவைக்காக வாங்கிய பொருட்களை பராமரிப்பதற்காக ஓடி ஓடி ஒய்வற்று உழகை;கும் காலமிது. காலத்தே பயிர் செய்யாது காலம் கடந்து பயிர் செய்யும் காலமிது. 
    பாற்கடல்  எம் முள் உள்ளது.  இங்கு ஆறு ஆதாரங்கள் உண்டு மத்தான மந்தாரு மலையான மேரு தண்;டம்  அதன் இடப்பக்கம் இடகலை நாடியும் வலப்பக்கம் பின்கலை நாடியும்  வாசுகியாக சுழுநா நாடியும் இருக்கின்றது. தேவர்கள் சாத்வீக குணமாகவும் அசுரர்கள் தாமதகுணமாகவும் இருக்கின்றது. இவற்றை செயல் படுத்துவது இராஜத குணமாகும். இங்கு மனம் எனும் புற்றில் இரு பாம்புகள் இருக்கின்றது அதிலொன்று பருவுடல் மற்றையது நுண்னுடல் பருவுடல் உடல சார்ந்தது நுண்னுடல் ஆத்துமா சார்ந்தது .உயிரின  பாம்புக்கு ஐந்து  படங்கள் அவை மெய், வாய், கண் , காது, மூக்கு, இவ் ஐம் பொறிகளினுடே நுகர்தலது மனம் ,சித்தம் புத்தி ,அகங்காரம் எனும் நான்கும்.  பருவுடலுக்காக  ஐந்தாய்  விரிந்தாடிய மனத்தை நுன்னுடலுக்காக ஒடுக்கி ஒன்றாகி  இருக்கும் போராட்டமே பாற்கடல் கடைவின் தத்துவமாகும். இதனை திருமூலர் 
“நாகமும் ஒண்று படம் ஐந்து நாலது
போகமும் உட்புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழித்து
ஏகப்படம் செய்து உடம்பிடமாகுமே” என்றார்.
         மனத்தினுள் அடங்கிய பருவுடலும் நுன்னுடலும் போட்டி போட்டு நுன்னுடம்பு வென்றால் முலாதாரத்துகதில் அடங்கியிந்த குண்டலிணி விளிப்படைந்து ஆறாதரத்தினுடே மேலேறி சகஸ்ராதாரத்தில் அமுதம் செரிவதையே பாற்கடல் தத்துவம் எமக்குனர்துகின்றது. இங்கு பருவுடல் நாடுவது அசுரத்தன்மையானவை உடலை மையமாகக் கொண்டு தாமத இராஜத குனத்தை ஒத்த செயல் படுவதையும் ஆன்மாத்தமானவை தேவர்களின் செயலை ஒத்த சாத்வீக கருமங்களை மையமாகக் கொண்டது. ஒன்றுக் கொன்று முறனானவை இவை களிரண்டும் மேதுகின்ற போது சாத்வீக தேவகுணம் வெல்வதென்றால் வைராக்கியம் தேவை அத்டதுடன் அவதானமும் தேவை அதாவது புத்திவிளிப்படைந்து சித்தம் தெளிய வேண்டும் அதாவது சிற்றினபத்தை பேரின்பம் வெல்ல வேண்டும். கீழ்நோக்கிய இந்திரிய சக்தி; மேல்நோக்கி ஆறாதாரங்களை கடந்து சகஸ்ராதராரத்தில் கீழ்நோக்கிய ஆயிரம் இதழ் கெண்;டதாமரைமலரில் அமுதமாக ஆத்தும இலிங்கத்துக்கு  சொரிய வேண்டும் . இதுவே சக்திக்கு சமரிப்பிக்கும் காள் அல்லது மது கொடுத்தல் என்கிற விடையம் சத்தி வழிபாட்டில் குண்டலிணி சக்தியின் விளிப்பே பிரதானம். சித்தர்கள் ஆதிசக்தியின் அனுக்கிகத்தைப் பொறவே காயத்திரி வழிபாடு ஸ்ரீசக்கர(மாமேரு) வழிபாட்டை பிரதானமாக்கிக் கொண்டனர். குண்டலிணி விழ்ப்பின் முலம் அமிதம் பொற்று  நிஸ்டையில் ஆழ்ந்து திளைக்கின்றனர்.அட்மாசித்துக்களை பெற்றனர். 
“  சத்தியை வேண்டிக் சமத்தோர் கள்ளுன்பர்
   சத்தி அழித்தது தம்மை மறத்தலால்
   சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பபட்டுச்
   சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே” சத்தியிடம் சத்தி வேண்டி பராசத்தியைத் துதிப்பர் சிலர். சத்திக்கு கள் நிவேதனம் செய்து அதை தாம் அருந்தி தன் சத்தியை இழக்கின்றனர்.  சத்தி என்பது சிவஞானமான குண்டலிணி சக்தி அதிலிடுபட்டு சத்திய ஞான ஆனந்தத்தை அடைவதை விட்டு கள் அருந்துகின்றனர். என திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
     இறவாம்மை வேண்டி கடும் தவம் செய்தவர்களுக்கு எம்பிரான் நம்முள் உள்ள பால்கடலை உணர்தி அதை கடையும் யுத்தியையும் உணர்த்தி அஞ்ஞானம் தனை உணர்தி மெய்ஞாம் மூலம் கீழ் நோக்கிய இந்திரியம் மேல் நோக்கி சகஸ்திராகாரச் சக்கரத்தில் சொரியச் செய்யும் இதுவே அமுதம்       
ஓளவைப் பிராட்டியார் அருளிய
 “‘விநாயகர் அகவலில்” 
“ஜம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
 இன்புறு கருணையின்இனிதெனக் கருளி
 கருவிகள் ஒடுங்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
 தலமொரு நான்கும்   தந்தெனக் கருளி 
மலமொரு  மூன்றின ;மயக்கமறுத்தெ
 ஒன்பது  வாயில் ஒரு மந் திரத்தால் 
ஜம்புலக் கதவை அடைப்பதும் காட்டி 
ஆறாதாரத் தங்குச நிலையும்
 பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
 இடை பிங் கலையின் எழுத்தறிவித்துக்
 கடையிற் சுழுமுனைக் கபாலமும்  காட்டி
 முன்று  மண்டலத்தின் முட்டிய தூணின்
 நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக்
 குண்டலி  யதன்pற் கூடிய அசபை
 விண்டெழு  மந்திரம் வெளிப்பட உரைத்து
 மூலாதாரத்தின்  மூண்டெழு  கனலைக் 
காலாலெழுப்புங் கருத்தறி வித்தே…..”
 என மிகதெளிவாக கூறியுள்ளார்.
        திஞானசம்பந்தருக்கு மூன்று வயதில் ஞானப்பால் உட்டியதாக புராணம் கூறுகின்றது. அது அன்று அவருக்கு குண்டலிணி விளிப்பே ஏற்பட்டுள்ளது என்று என்னத்தோன்றுகின்றது. சுந்தரரை தடுத்தாட் கொன்டமை, உயிர்மாய்க்க எண்ணி  கோபுரம் ஏறி குதிக்கையில் அருனகிரி நாதரையை அண்ணாமலையில் தாங்கி குண்டலிணி விளிப்பே ஏற்படுத்தி “முத்தைத்தரு பத்தித்திருநகை......” அடிஎடுத்துக் கொடுத்தமை போன்ற திருவிளையாடல் எல்லாம் பால்கடல் கடைவுதான். மாணிக்கவாசகர் “கன்னலொடு நெய்கலந்தால் போல...” என திருவாசகத்தில் இறைவன் எம்முள் கலந்துள்ளதை அழகாக குறிப்பிடுகின்றார். பால் உறைந்தால் தயிர் தயிர் கடைந்தால் மோர் மோரை கடைந்ததை வடித்து வடித்ததை காச்சி எடுத்தால் நெய். நெய் வெளிப்படையாக தெரிவதில்லை அது பாலில் மறைந்திருக்கின்றது. அவ்வாறே எம்முள் இறைவனை உணத்தும் குண்டலிணி மறைந்திருக்கின்றது. தயிரை கடைவது போல நேர், எதிர் எண்ணங்கள் மோதி நேர் எண்ணம் வெற்றி கண்டு மனம் ஒருநிலைப்பட்டு பிறப்பின் பெருமை அறிவதே பால்கடல் விடையமாகும்;. 
    “பாலுக்கு பாலகன் வேண்டி யழுதிடப்
             பாற்கடல் லீந்தபிரான்
      மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
             மன்னிய தில்லை தன்னுள்
       ஆலக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் 
             பலமே யிடமாகப்
    பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே 
           பல்லாண்டு கூறுதுமே” என ஒன்பதாந் திருமறையில் சேந்தனார் சுவாமிகன் மிகவும் அழகாக பாடியுள்ளார்.
பால்கடல் என்பது ஆராதாரத்தை அடிப்படையாகக் கெண்;ட மேருதன்டத்தை இடகலை பின்கலையினுடாகச் செல்லும் சுளுழுனாவான வாசுகிமூலம் கடையும் போது குண்டலினி ஆன அமுதம் கிடைகின்றது. பதியை பசுவாகிய ஆன்மா  அடைவதனால் முத்தியாகிய  சங்நிதி பதுமநிதி, சக்கரம், திருமகள், அமுதகலசம், போன்ற தெய்வீக பொருட்கள் தோன்றின இது போன்று எம்முள் இவை தோன்றும் என்பது தின்னம். 
ஆலயங்களில் நித்திய நைமித்தி கிரிகைகளில் கானப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே வருடாந்த மகா உற்சவம் நடாத்தப் படுகின்றது. அவ் உற்;சவத்தின் முதல் நாள் கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்த்துசாந்தி, நவக்கிரககோமம், விநாயகர்கோமம் என்பன செய்து உற்சவ ஆரம்ப நிகழ்வாக ஆரோகணமான கொடிஏற்றம் நிகழ்கின்றது. தம்பம் முப்பத்திரண்டு பகுதிகளைக் கொண்டது. அது போலவே எமது முள்ளம் தன்டான மேருதன்டமும் முப்பத்திரண்டு பகுதிகளைக் கொண்டது. அங்கு கொடிஏற்ற கொடிசீலை, தற்பைகையிறு, நூல்கையிறு. என்பனவற்றைப் பயன்படுத்தி கொடிஏற்றுகின்றனர். தற்பைக் கயிறு சூரிய நாடியான பிங்கலைநாடியாகவும், நூல்கயிறு சந்திரநாடியான இடகலைநாடியாகவும், கொடிச்சீலை சுழுமுனை நாடியான குண்டலிணியாகவும் கொள்ளப்;பட்டே ஆரோகணமான கொடிஏற்றம் நிகழ்கின்றது. 
ஆலயங்களை எடுத்துக் கொண்டால் சைவசிதாந்தம் கூறும் கடவுளை அடையும் மார்க்ங்களான சரியை, கிரியை, யோகம், ஞானமாகிய நாற்பாதங்களில் முதன்மையாக சரியை,கிரியை ஆகிய மார்க்கங்கள்  என்பன இங்கு பின்பற்றப்படுகின்றன இதில் கொடியேற்றம் என்பது கிரியை முலம் மக்களுக்கு குண்டலிணி விளிப்பை செய்கை மூலம் காட்டுகின்றது. இதுவே பால்கடல் கடைவு நிகழ்வாகும். ஒரு மனிதன்  யோகம்,  ஞானத்துக்கு வரவேண்டுமானால் முதலில் உடலால் இறை சிந்தனையில் ஆலயத் தொண்டுகளில் ஈடுபட்டு உள்ளம் பண்பட்டு இறை சிந்தையில் நிலைக்க வேண்டும். மக்களுக் செய்யும் சேவையை மகேசன் சேவையாக செய்ய வேண்டும். இதனால்; உடலும் உள்ளமும் சுத்தமடையும்.இதை உணர்த்தவே கிராமசாந்தி முலம் அக்கிராமத்திலுள்ள கெட்டசக்திகளை கிரமத்து எல்லைக்கப்பால் அனுப்பியும் தசவைரவர்களை பிரலேசப் பலி கொடுத்து காவலுக்கு நிறுத்துகின்றனர்.அதன் பின்னர் புத்தியாகிய விநாயகப்பெருமானுக்கு விக்கினங்களை தீர்த்து செய்யும் காரியத்துக்கு இடையுறு எதுவும் வராத வகையில் புத்திவிளிப்புடன் இருந்து சித்தம் தெளிந்து எடுத்தகாரியத்தில் சித்தி பெற பிராத்திக்கப்படுகின்றது. இவை அனைத்தும் புற சுத்தமாகும்.பின் வாஸ்து புருசனை அனைத்து அதாவது வாஸ்து சாந்தி மூலம் இறைவன் இருக்கும் வீடாக கருதப்படும் ஆலயத்தை சுத்தம் செய்வதாகும். இது நமது உடலை காலை, உச்சிக்காலை, மாலை ஆகிய சந்திகளில் வந்தனம் செய்து உடலை  சுத்தம் செய்வதற்கு ஒப்பானது. அதைப் போன்று உடலின் அங்கங்ளை கரணியாசம் மூலமும் அகச்சுத்தமாக்ஆத்ம சுத்தியைச் செய்வதன் மூலமும் செய்கின்றனர். அதன் பின் நவக்கிரங்களினால் ஏற்படும் தடைகளை நிவர்த்திப்படுத்துவதுடன் சந்தோசப்படுத்தி அதன் அனுக்கிரகத்தை பெற்றுக் கொள்ள நவக்கிரக கோமம் செய்யப்படுகின்றது. அடுத்து திசைகளினால் ஏற்படும் தடைகளை நீக்கி திசைகளுக்கு பொறுப்பாக இருக்கும் சக்திகளை சாந்தப்படுத்துவதற்காக திசாகோமங்களும் செய்யப்படுகின்றது. பின்னர் கொடிஏற்றம் என்கின்ற ஆரோகணம் இடம் பெறுகின்றது. பின்னர் அட்டத்திக்கு பாலகர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் இடங்களில் நிறுத்தப்படுகின்றனர். முதலில் பிரம்மாவும் அடுத்து கிழக்கில் இந்திரன் தென்கிழக்கில் அக்னி தெற்கில் ஜமன் தென்மேற்கில் நிருதி மேற்கில் வருனன் வடமேற்கில் வாயு வடக்கில் குபேரன் வடகிழக்கில் ஈசானன் என அனைவரும் அழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டு பலிபொருள் கொடுக்கப்படுகின்றது. பின்னர் இறைவன் எழுந்தருள்கின்றார்.இது கிரியை யாகும். திருவிழாவின் போது பஞ்சகிரித்தியங்களை இறைவன் நடத்துகின்றான். அத்துடன் விம்பம்,தம்பம்,கும்பம் ஆகிய இடங்களில் இறை சக்தி நிறைந்திருக்கின்றது. கொடிறேற்றம் படைத்தல் திருவிழாக்கள் காத்தல் தேர்திருவிழா அழித்தல் தீத்தொற்சவம் அருளல் அமரோகணமான கொடியிறக்கம் மறைத்தல் இவ்வாறு கிரியை மூலமாக விளக்கப்படுகின்றது.

திருவிழா தொடங்கியதும் அவ்வூரில் பருஉடல்சார்ந்த லவ்வீகவிடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது ஆத்மா சாந்த நுன்னுடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆலயத்தைச் சேந்தவர்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள். அப்பகுதியில் திருமாங்கல்லிய தாரணங்கள் இடம் பெறாது. ஆசைவ உணவுகள் தவிக்கப்படும். தாம்பத்திய உறவு தவிக்கப்பட்டு பிரமச்சாரியம் கடைபிடிக்கப்படும். எப்போதும் இறை சிந்தையுடன் தினமும் மூன்று முறை ஆலயத்துக்கே சென்று ஜெபம், தியானம் என்பவற்றில் ஈடுபடுவர். பிரதம குருக்களும் காப்புக் கட்டி ஆலயத்திலே தரித்திருபார்.
இவை அனைத்தையும் அகமுகம் நோக்கி அந்தர் யாகமாக எம்முள்உள்ள இறைவனை(ஆத்மாவை) நோக்கி செய்வதன் மூலமே உண்மை நிலையை அடையமுடியும். எமக்குள் செய வேண்டியதை செய்கை முறையில் காட்டுவதே கிரியை அதையே முடிந்தமுடிவாக என்னினால் அது திரையில் படம்பார்பதை ஒத்தது. படம்பாக்கும் வரை பாத்திரம் ஏற்போம். படம் முடிந்ததும் பப்படமாகி விடும். எனவே படம் பார்பதையும் தற்காலியமாக பாத்திரமேற்பதையும் விட்டு எம்முள் உறைந்துள்ள சத்தியை தியானத்தின் மூலம் உணர்ந்து மேன்படுத்தி நிரந்திர பாத்திம் மேற்போம். “குண்டலிணி விளிபே ஆத்மாவின் தாகம் அதுவே ஆத்தும விடுதலைக்குரிய உபாயம்” இவ் விடயங்கள் அனைத்துமே பாற்கடல் கடைவினையே உணர்துகின்றது.  

Sunday, August 14, 2011

சைவசித்தாந்தம் கூறும் பதி,பசு,பாசம்

 இந்து மதத்தில் பலகொள்கைகள் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது சைவசித்தாந்தமும் வேதாந்தமுமே இதில் பெரும் பாலோனோர் சைவசித்தாந்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை சித்தாந்திகள் என அழைக்கப்படுகின்றனர். வேதாந்தத்தை பின்பற்றுபவர்கள் வேதாந்திககள் என அழைக்கப்படுகின்றனர். சைவசித்தாந்தத்தை நோக்கு வோமானால் அங்கு பதி,பசு,பாசம் எனும் முற்பொருள் உண்மையைப் பெற்றிக்கூறுகின்றது. மெய்ப் பொருளான பரம் பொருள் ,மனிதனனுக்கு அடிப்படையான ஆன்மா, மனிதன் வாழும் உலகம் . இதில்  பதி என்பது இறைவன். பசு என்பது ஆன்மா ஆன்மாவானது பாசத்தால் கட்டுண்டது. பாசமானது மாயை. அது இல்லாததை இருப்பதாகக் காட்டுவது அது கானல்நீருக்கு ஒப்பானது அதனை இயக்குவது ஆணவ மலம் இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர். இதனை அழிக்க முடியாது அடக்க முடியும். இயக்கும் தன்மை கன்ம மலத்தின் தன்மையில் உள்ளது. கன்மம் பிராத்தம், ஆகாமியம், சஞ்சிதம் என மூன்று வகைப்படும். பிராத்தம் என்பது முன் செய்த வினை, ஆகாமியம் செய்து கொண்டு இருக்கும் வினை, சஞ்சிதம் செய்ய இருக்கும் வினை, இவைகளை அனுபவிக்க வைக்க ஒருவர் தேவை அது தானாக அனுபவிக்காது.
             பிரபஞ்சம் அறிவுடையதும் அறிவற்றதுமானது. உயிர் அறிவுள்ள சேதனப் பிரபஞ்சமாகும். பாசம் அறிவற்ற அசேதன பிரபஞ்சமாகும். பதி அறியாமையால் பற்றப்படாததும் பேரறிவுப் பொருள். பசு அறிவற்ற சடமும் அல்ல அறிவுடைய பொருளுமன்று எதைச்சாந்ததோ அதன் தன்மையைப் பெறும். பதி சத்துப் பொருள் பாசம் அசத்து பொருள். பசு எதைச்சாருகின்றதோ அதன் தன்மையைப் பெறுவதால் அது சதசத்து பொருளாகின்றது. பதியைச் சார்தால் சத்தெனவும் பாசத்தைத் சார்ச்தால் அசத்து எனவும் நிலை பெறுகின்றது. சடமாகிய பாசம் அறிவித்தாலும் அறியமாட்டா. பேரறிவான பதி பிறர் அறிவிக்கவேண்டாதது தானே அறியும் தன்மையானது. பசு சிற்றறிவாது சார்ததின் தன்மையை பெறுவது அழியாதது இதனால் பதி, பசு அனாதியான நித்தியப் பொருள். பசு சித்தும்மாகாமலும் அச்த்தாகாமலும் இரண்டுக்கிடையில் நிற்கும் நிலையும் உண்டு. பதி சுக்குமப் பொருள். பரந்தும்  துலப் பொருள் உள்ளடங்கியும்  (வியாபியாகவும் வியாபகமாகவும்) இருக்கும். பதியில் பசு தூலமாகவும் பாசத்தில் சுக்குமமாகவும், பசுவில் பாசம் உள்ளடங்கியதாக இருக்கும். கடல் போன்ற பதியில் கடல்நீர் போன்று பசுவும் நீரில் கலந்துள்ள உவர்ப்பு போன்று பாசமும் கலந்துள்ளது. 
            சதசித்தாகிய ஆன்மா துணையின்றி அறிவு பெறமாட்டா அறிவை ஆணவம் மறைத்து நிற்கும் மறைப்பகல தனு,கரண,புவன,போகம் என்பவற்றை கொண்டு பதி போக்கியருளுகின்றார். பசுவாகிய ஆன்மா மூன்று நிலையில்யுள்ளது. மும்மலங்களான ஆணவம், ,கன்மம் மாயை உள்ளவர்கள் சகலர் எனவும், மாயை நீங்கி ஆணவமும் கன்மமும்  உள்ளவர்கள் பிரளயாகலர் எனவும், மாiயும் கன்மமும் நீங்கி ஆணவம் மட்டுமுள்ளவர்கள் விஞ்ஞானகலர் என கூறுகின்றது. மலங்களில் சேர்க்கையால் ஆன்மா பெறும் அனுபவத்தை அவர்த்தைகளாக குறிப்பிடுகின்றனர். ஆன்மா அனாதியில் ஆணவமலத்துடன் கூடி அனுபவிக்கும் அனுபவம் கேவலாவத்தை எனவும், மும்மலங்களுடன் கூடி அனுபவிக்கும் அனுபவம் சகலாவத்தை எனவும், மும்மலங்களிலிருந்து நீங்கியநிலையில் சுத்தாவத்தை எனவும் கூறுகின்றது.
      சகல நிலையிலும் ஆன்மா ஜந்து அனுபவங்களை ஜந்து இடங்கனில் பொறுகின்றது. ஜந்து அனுபவங்களை முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீனம் எனவும். இடங்கள் முறையே புருவநடு (ஆக்ஞா), கழுத்து (விசுத்தி), இருதயம் (அனாகதம்), நாபி (மணிப்பூரகம்), மூலம் (மூலாதாரம்) கருவிகள் முறையே முப்பத்தைந்து (இதில் ஆத்மதத்துவம், வித்தியாதத்துவம், இருபத்தைந்து, மூன்று, இரண்டு, ஒன்று எனப்படும். பசு அறிவுடை பொருளாதலால் இச்சை செயல் உடையதாகும். இறைவனைப்போலவே பசுவாகிய ஆன்மா இச்சை, ஞானம், கிரியை என்பனவற்றைக் கொண்டது. ஆணவத்தால் பீடீக்கப்பட்டு கேவலத்தில் சிறிது தோண்றாது  இருள் நிலையிலும் சகலத்தில் சிறிது தோன்றி மருள்நிலையிலும் சுத்தத்தில் முற்றாகத்தோன்றி அருள்நிலை  நிற்கும். கேவலம் இருளாயும், சுத்தம் ஒளியாயும் விளங்கும். ஆன்மா கேவலத்தில்  இறைவனின் திரோதானசக்தியாற் சகலத்துக்கு வந்து பிறப்பிறப்பை அனுபவித்து இருவிணையொப்பு, மலபரிபாரம் வந்த பின் இறைவனது அருட்சக்கியால் ஞானம் பெற்று முத்தியடைவர்.
   திருமூலர் திருமந்திரத்தில் பதி,பசு,பாசம் பற்றி குறிப்பிடுகையில்
“விண்ணினைச் சென்று அணுள வியன் மேகங்கள்
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகாப் பசுபாசமே” விண்ணில் மேசங்கள் பரந்திருந்தாலும் ஆகாயத்தோடு ஒட்டுவதில்லை. கண்கள் பல காட்சிகளைக் கண்டாலும் கண்ணில் அவை ஒட்டுவதில்லை. ஆனால் கண்கள் அதில் படிகின்றன. அதுபோல எண்ணம் நினைவுக்கு அப்பாலுள்ள இறைவன் அடையமாட்டாது. பசத்தால் பசுவாகிய ஆன்மா பசுவுள் பதி இருப்பதை அறியா. இதனால் ஆன்மா பதியை உணரா.
சிவமாகுதல் சித்தாந்தம்  “ஒன்றும் இரண்டும் இலதுமாய ஒள்றாக
                             நின்று சமய நிராகர நீங்கியே
                             நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
                                சென்று சிவமாதல் கித்தாந்த சித்தியே” ஒன்றாகவும் இரண்டாகவும், இரண்டல்லாத இரண்டும் ஒன்றாகவும் இருப்பதை உணந்து அதி உன்;னதத்தில் திளைத்து. சமய வேற்றுமைகளை மறந்து. பிறசமய பேதங்களை நீக்கி நிபந்தனைகளை விட்டொழித்து பராபரையை அருட்துணையால் அவள் திருவடியை அடைந்து சிவமாகுதல் சித்தாந்தம்.
சுத்த சைவம் சித்தாந்தம்  “வேடம் கடந்து விகிர்தம்தன் பால்மேவி
                                   ஆடம்பரம் இன்றி ஆபாசம் செற்றுப்
                                   பாடொன்று பாசம் பசுர்துவம் பாழ்படச்
                                            சாடும் சிவபோகர் சுத்தசைவரே” உடலில் அணிந்து கொள்ளும் சிவசின்னங்களாகிய புறவேடங்களை தவிர்த்து. அகவழிபாட்டில் ஈடுபட பகட்டான தோற்றம், நடை, உடை, பாவனை அணுக்கள்  பந்த பாசங்கள் விட்டகன்று துன்பப்பிறவிக்கு காரணமான அகபற்றுக்களான ஆன்மாக்கள் அழிவதைத் தடுத்து சிவத்தை சித்திக்கும் சுத்த சைவர். 
“உடலான ஐந்தையும் ஐராறும் ஐந்தும்
மடலான மாமாயை மாற்றுள்ள நீவப்
படலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தளை உறல் சித்தாந்த மார்க்கமே” ஐம்பூதங்களான உடம்பு ,காமம்,  வெகுளி, பொறாமை, பேராசை, ஆணவம், கர்வம் எனும் ஆறுகுற்றங்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி, ஐம்பொறிகளால் வரும் இச்சைகள் இவை தோன்;ற நிலைக்கழம் உடம்புபாகும். இவைகளால் ஏற்படும் மன அழுக்குகள், குற்றங்கள், மலங்கள் கழிந்து போக இறையருளைப்பெற தடையாக இருக்கின்ற கண்பார்வையை மறைக்கும் படலம் போன்ற ஆணவத்தையும் பாசத்தையும் விட்டொழித்து உள்ளத்துறுதி குறையாதிருப்பதே சித்தாந்த நெறியாகும் என திருமூலர் கூறுகின்றார்.
               புதியின் இருப்பு முறையினை சித்தாந்திகள் “காண்டல் கருதல்”; முறையில் துனிகின்றனர். இப்பிரமானத்தை அடிப்படையாகக் கொண்டு உலகைப் படைக்க ஒருவர் உள்ளார். காணல் என்பது கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் ஆகும். இதில் பல பிரிவுகள் உண்டு. கருதல் என்பது இருப்பதைக் கொண்டு இல்லாததை ஊகிப்பது. இங்கு உதாரணமாக “பானையையும் குயவனையும்” கருகின்றனர். புhனை தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளாது அது முன் உருவாக்கப்பட்ட பொருளுமல்ல அது போல உலகமும் தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளாது அது முன்னர் படைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பொருளுமல்ல பானையை வனைய குயவன் ஒருவன் இருந்தே ஆகவேண்டும். அதேபோல உலகத்தை படைக்க இறைவன் இருந்தே ஆகவேண்டும். எனவே இறைவன் உலகைப் படைக்க காரணன் என்பது தெளிவு. அதே போல பசுவாகிய ஆன்மாவுக்கும் தாம் செய்த வினையையும் அதற்கேற்ற பலனை தாமே  அனுபவிக்கும் வல்லமையும் ஆன்மாவுக்குகில்லை. ஆன்மாவின் வினைக்கேற்ப தனு, கரண, புவன, போகத்தை வழங்க ஒருவன் தேவை அவனே இறைவன். ஆவன் “உளன் உனர” என்பது ஆத்தவாக்கியம் வேதாகமப் பிரமாணம். இது இறைவன் இருப்பதை உணர ஆதாரமானவை. 
“அவன் அவள் அது எனும் அவை
முவினைமையின் தோன்றிய திரிபே
ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” “சிவஞானபோதம்” முதல் சூத்திரத்தில் இறைவனிருப்பை நிரூப்பிக்கின்றார். இது போன்று “சிவஞான சித்தியார்”  “ஒருவனோடு ஒருத்தியென்றத்தி யொன்றை யென்றுரைத்திரு மூலகமெல்லாம் வருமுறை வந்து நின்று போவது மாதலாலே தருவனொருவன் வேண்டும்”;என்று குறிப்பிடுகின்றார்.
கடவுளின் குணங்களை குறிப்பிடுகையில் வேதங்கள் இரு குணங்களை குறிப்பிடுகின்றது. ஓன்று பொது நிலைக்குணம் அதாவது எண்குணத்தான் என்பது. மற்றையது சிறப்பு நிலைக்குணம் அதாவது இறைவன் நிர்க்குணன். எனக் குறிப்பிடுகின்றது. சைவசித்தாந்தம் நிற்குண குணம் குறியற்ற சொரூபநிலை இறைவனைப் பற்றியே கூறுகின்றது. சொரூபநிலை என்பது அருவம், உருவம், அருவுருவத்துக்கு அப்பால்பட்ட ஒரு அடையாளமும் இல்லாத மனம், வாக்குக்கு அப்பால்பட்ட குணம் குறிக்கு அப்பால்பட்டவராய் ஆனந்தகுறியால் மலரகிதராய் ஓராதாரமும் மில்லாதவராய் பசுபாசஞானத்தால் அறிதற்கரியராய் ஒருகாலமும் சலிப்பற்றவராம் உவமை இல்லாதவராய் ஞானமாய் ஆதிசுக்குவமாய் விருப்பு வெறுப்பில்லாதவராய் பரம்சோதியாய்  மூவகை ஆன்மாக்களுக்கும் முத்திதாரகராய் இருப்பவர். ஏனக் குறிப்பிடுகின்றனர். இதனை கந்தப்புராணத்தில் “ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் னுரைக்கும் பேரிலானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் நேரிலான் னுயிர்க் கடவுளாறனக்கு யென்னுளே நிற்கின்றான்”
பிறவாமை என்பது அத்மா அனாதியில் எப்படியானதோ அந்த நிலையை அடைவதே ஆகும். அது பிறப்பெனும் நிலையை அடைந்து ஆன்மாவின் உண்மை நிலையை மறந்து உலகியலில் உளன்று அசத்தில்லிருந்து சத்தாகி சத் ,சித், ஆனந்தத்தில் நிலைத்தலே பிறவாமை அதற்கு மீண்டும்  பிறப்பில்லை. “இரத்தினக்கல்லின் மேல் சாணம் விழுந்தால் இரத்தினக்கலின் ஒளி வெளியில் தெரிவதில்லை” அதானால் என்ன இரத்தினக்கல்லின் ஒளி மங்கிவிட்டதா? இல்லை. அதன் தன்னையை இரத்தினக்கல் இழந்துவிட்டதா? அதுவும் இல்லை. எப்போது சாணம் அதில் மேல்லிருந்து நீக்கப்படுகின்றதோ அப்போது அதன் தன்மை மாறாத ஒளிமிக்க அக் கல் “அப்பழுக்கு மாறாது மீண்டும் பெறப்படுகின்றது”. இதுவே பிறவாமை.
                              பிறந்ததும் அன்னை உலகியலை பாலூட்டும் போதே சேர்த்தே ஊட்டுகின்றாள். அன்னையை மகாமாயை என்று குறிப்பிடுகின்றனர். தனு, கரண, புவன, போகத்தை அவர்அவர் வினைக்கேற்ப கொடுத்து அனுபவிக்க வைத்து அதன் விழைவை உணர்தி விடுதலை கொடுப்பவள்.
              குருதேவர்; ஸ்ரீ இராமகி~;ண பரமஹம்சர் காசியாத்திரை சென்ற போது கங்கைக்கரையில் அமந்து தியானத்தில் திளைத்த போது கங்கைகரையில் இறந்தவர்களை தகனம் செய்யும் மயானத்தில் முத்திக்கு வழிகாட்ட அப்பன் காதில் மூலமந்திரத்தை ஓத அம்மை மோட்சத்துக்கு வழிகாட்டுவதை தாம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே அன்னையே முத்திக்கு வழிகாட்டுபவள்.  சப்தரி~pகள், மக~pசிகள், சித்தர்கள்,  ஆதி சத்தியின் மூலமே பெறுபெற்றனர்.

சித்தம் தெளிந்து சிவனாகி சிவலோ வழிகாட்டும் பதினெண் சித்தர்கள்

  சித்தர்கள் என்னும் போது அவர்கள் சித்தம் தெளிந்தவர்கள்;.சித்தர்கள்; எப்போது உடலை மையமாகக் கொண்டு இயங்குவதில்லை. உடல் இரண்டு அவை பருவுடல், நுன்னுடல். பருவுடல் உடல் சாந்த சுகத்தை அனுபவிக்கும் உலகியல்லான லவ்வீகம் சார்தது உலகபற்றுள்ளது. நுன்னுடல் ஆத்மா சார்ந்த இறைவனை அடையும் உலக, உடல் பற்ற ஆன்மீகம் சாந்து அனுபவிக்கும் நிலை.  மனத்தினுள் அடங்கி இருக்கும் பாம்புகள் இரண்டு அவற்றில் ஒன்று பருவுடல் சாந்தவையாகவும் மற்றையது நுன்னுடல் சாந்தவையாவும் இருக்கும்.  சித்தர்களின் மனம் எப்போதும்  நுன்னுடல் சாந்ததாகவே அவர்களின் செயல்பாடுகள் அமையும். எப்போதும் நேர் சிந்தையுள்ளவர்களாகவும். உள்ளதை உள்ளபடி சுக்குமமாக கூறுபவர்கள். அவர்கள் உலகியலை வெறுப்பவர்கள். உலகுக்கு அவர்கள் பைத்தியகாரர்கள். உலகில் ஆன்ம வீடுதலைக்கு தடையாவதே வெறுக்காரணமாகின்றது. 
அவர்களில் அனேமானவர்கள் கிரகஸ்த நிலையை அடைந்தே வானபிரதிஸ்டம், சன்னியாச நிலைகளை அடைந்தனர். உறவில் துறவைக் கொண்டு பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்து உடல் சார்ந்தெழும் விடையங்களைக் கட்டுப்படுத்தி அத்மா சந்த விடையங்களை கடைப்பிடித்து உலகியலை வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். இவர்கள் உலகப்போக்குக்கு மறுபட்டவர்கள். சிந்தனை செயல் அனைத்துமே உலகியல் விடுதலையே. ஆசை காமமாக மாறி பற்றுற்ரு அதை அடைய முடியாமையினால் ஆணவம் ஏற்பட்டு பொறாமை வஞ்சகம் சூதாகி மனம் அழிந்து போவதிலிருந்து தடுத்து நிறுத்தி பிறவாமையை ஏற்படுத்காக எப்போதும் சிந்தித்து தன்னை அடைந்தவர்களுக்கு வழிகாட்டுவதே அவர்களின் பணி. அலைபாயும் சித்தத்தை அடக்கி ஒருநிலைப்படுத்தி சித்தி பெற்று பூரணமானவர்கள். அடைதற்கரியவர்கள். அவகளை காண்பதே அரிது. “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் இயம்பியுள்ளார். பிராத்தம் தேவை. எம்நிலை அறிய அவன் அருள் தேவை. எவன்னெருவன் அவனது ஆத்மாவை உணருகின்றானோ அவனை ஆத்மா தான் அடைய வேண்டியதை நோக்கி வழிநடத்தும். எம்முள்தான் ஆத்மா இருக்கின்றது. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை அடைய என்னும் போது உடல் அனுபவிக்கும் விடையங்களை விட்டு நீங்க தயாரில்லை. இங்கு அத்மாவுக்கும் உடலுக்கும் போர் நடக்கின்றது. வெற்றியும் தோல்வியும் மனத்தில் தங்கியுள்ளது. இங்கு தான் வைராக்கியம் தேவை. உடலை வெல்லுவது என்பது. “குதிரைக் கொம்புக்கு” ஒப்பானது. இதை வென்றவர்கள் சித்தர்கள்;. “திருவருள் பெற குருவருள் தேவை”. “குருவில்லா வித்தை பாழ்” என்று கூறுவர்.
                    சித்தர்களின் வரலாற்றை நோக்கும் போது மூலர்மரபு, பாலமரபு, கைலாய மரபு என சிலர் கூறுகின்றன். தமிழ்நாட்டு சித்தர்களை பதினெண் சித்தர்கள் என்று கூறுகின்றனர். சித்தர்களின் பெயர்களைக் கூறுகையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இருப்பனும் காலத்துக்கு காலம் உலகதேவையின் பொருட்டு மீண்;டும் மீண்டும் சித்தர்கள் அவதாரம் எடுக்கப்பதுண்டு. 
                     அந்தவகையில் கருவூரர் எழுதிய அட்டமா சித்து என்ற நூலில் பதினெண் சித்தர்களின் வரிகையில் 1.கும்பமுனி 2.நந்திமுனி 3.கோரக்கர் 4.புலிப்பாணி 5.புகண்டசிஷி 6.திருமூலர் 7.தேரையர் 8.யூகிமுகி 9.மச்சமுனி 10.புண்ணாக்கீசர் 11.இடைக்காட்டார் 12.பூனைக்கண்ணர் 13.சிவாக்யர் 14. சண்டிகேசர் 15.உரோமரிஷி 16.கட்டநாதர் 17.காலாங்கி 18.போகர். என்றும்
 அருணாசல குரு எழுதிய நிஜானந்த போதம் என்ற நூலில் 1.அகத்தியர் 2.போகர் 3.நந்தீசர் 4. புண்ணாக்கீசர் 5.கருவூரார் 6.சுந்தராநந்தர் 7.ஆனந்தர் 8.கொங்கணர் 9.பிரம்மமுனி 10. உரோமரிஷி 11.வாசமுனி 12.அமலமுனி 13.காலமுனி 14. கோரகர் 15.சட்டைமுனி 16. மச்சமுனி 17. இடைக்காட்டார் 18.தேரையர்.
                       அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க்கலைக்களஞ்கியம் 1.அகத்தியர்.
2.போகர் 3. கோரக்கர் 4. கைலாசநாதர். 5. சட்டமுனி. 6. திருமூலர்.  7.நந்தி. 8. கூன்கண்ணர் 9. கொங்கணர். 10. மச்சமுனி 11. வாசமுனி.
12. கூர்மமுனி 13. கமலமுனி 14. இடைக்காட்டார் 15. புண்ணாக்கீசர்
16. சுந்தரானந்தர் 17. ரோமருஷி. 18. பிரமமுனி. இவர்களுடன் தன்வந்திரி புலஸ்தியர் புசுண்டர் கருவூரார் இராதமதேவர். தேரையர் கபிலர் முதலியசரும் கூறுவர். 
                        பிற்காலத்தில் இணைக்கப்பட்ட பட்டியல் 1.அகப்பேய்ச்சித்தர் 2.அழுகுணிக்கித்தர் 3.இடைக்காடர் 4.கடுவெளிச்சித்தர் 5.கஞ்சமலைக்கித்தர் 6.கல்லுளிச் சித்தர் 7.காலாட்டிக்சித்தா 8.முதம்பைச்சித்தர் 9. கவுபாலச்சித்தர் 10. சங்கிலிச்சித்தர் 11.ஞானசித்தர் 12.திருகோணமலைச்சித்தர் 13.தொழுகண்ணிச்சித்தர் 14. நாதாந்தக் சித்தர் 15.நொண்டிக்சித்தர் 16. பாம்பாட்டிச்சித்தர் 17. விளையாட்டுச் சித்தர் 18.மொனசித்தர்.
பத்தொன்பதாம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் வெளியான பதினெண் சித்தர்கள் ஞானக்கோவையில் சிவாக்கியர் முதல் புசுண்டர் வரை பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக அகராதி திருமூலர் முதல் கோரக்கர் வரை பட்டியல் படுத்தியுள்ளது. பொதுவாக நோக்கும் போது இப்பட்டியல் தெரிவுக்கு ஆதாரபூவமான அடிப்படை எதுவும்மில்லை. இருப்பினும் சித்தர்கள் இவர்கள்தான் என்றமுடிவுக்கு வரமுடியும். இவர்களுடன்         அத்திரி,பிருகு,மிருகண்டர்,வகிட்டர்,கவுதமர்,அசுவினித்தேவர்,கபிலர்,பராசரர், துருவாசர்,வான்மீகி,சமதக்னி,காசியப்பர் முதலியோரும் சித்தர்களாக கணிக்கப்படுகின்றனர். 
                     இன்னும் கூறுவதானால் சப்தரிஷிகள் இராஜரிஷிகள் மகரிஷிகள் என்ரெல்லாம் அழைக்கின்றனர். பொதுவாக நோக்கும் போது “ரிஷிமூலம் நதிமூலம்” பார்க்கக்கூடாது என்பது விதி அல்லது மரபு என்பர். இன்றும் காலத்தின் தேவைக்கு ஏற்ப பலர் தொன்றி கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் தோண்றுவதும் காலத்தின் தேவை தான். மனிதன் உயிவாழ உழைத்த காலம் போய் அடம்பர வாழ்கைக்காக வாங்கிய பொருள்களை பராமரிப்பதற்பாக போட்டிபோட்டு உழைக்கவேண்டிய நிற்பதத்துக்குள்ளாகி மனமழிந்து உலகம் அழிந்து கொண்டுடிருக்கின்றது. மனிதத்துவத்தை நிலை நாட்டவும் படைப்பின் இரகசியம் உணர்தவும். சித்தர்கள் பிறந்தும் ஆட்கொண்டும் வருகின்றனர்.
சித்தர்களின் அவதாரம் பற்றி பார்க்கும் போது
இல சித்தரின் பெயர் பிறந்த நாள் நட்சத்திரம் ஜீவ சமாதி
01.            மச்சமுனி             அடி                ரோகிணி  திருப்பெருங்குன்றம்        
02. பாம்பாட்டிச் சித்தர் காத்திகை  மிருகசீரிடம்         சங்கரன் கோயில்(மருதமலை)
03.           பதஞ்சலி    வைகாசி           சதயம்          எட்டுக்குடி


04. நந்தீஸ்வரர் வைகாசி விசாகம்      காசி(திருகாளத்தில் வாழ்தவர்)
05. தன்வந்திரி ஐப்பசி   புனர்பூசம்             வைத்தீஸ்வரன் கோவில்
06. சுந்தரானந்தர் ஆவணி ரேவதி                              மதுரை
07. சட்டைமுனி ஆவணி மிருகசீரிடம்               திருவரங்கம்
08. கோரக்கர்   காத்திகை           அவிட்டம்        வடக்கு பொகை நல்லுர்
09. குதம்பைச்சித்தர் ஆடி              விசாகம்                      மயிலாடுதுறை
10. கருவுரார்                சித்திரை                   அத்தம்               கருவூர்
11. கமலமுனி         வைகாசி             பூரம்                                 திருவாரூர்
12. இராமதேவர்      மாசி                   புனர்பூசம்                 அழகர் கோவில்
13. இடைக்காடர்   புரட்டாசி        திருவாதிரை           திருவண்ணாமலை
14 திருமூலர்                 புரட்டாசி அவிட்டம்                         சிதம்பரம்








15 புலிப்பாணி         புரட்டாசி     சுவாதி                                  பழனி
16 போகர்                          வைகாசி             பரனி                   பழனி
17. அகத்தியர்   மார்கழி ஆயிலியம் ஆனந்த சயனம்


    சித்தர்கள் வரிசையில் மிக பழையானவராக ஆய்வுகள் கூறுவது திருமூலரையே  கி.பி.ஐந்தாம் நுற்றாண்டிண் முற்பகுதியில் வாழ்ந்தராக குறிப்பிடப்படினும் கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் சமணநுல்களிலே முதலில் சித்தர் என்னும் பெயர் முதலில் கானப்படுகின்றது. பழம் பெரும் இலக்கியநூல் தொல்காப்பியத்தில் கூட சித்தன் என்ற பெயர் இல்லை. குறுந்தொகைப் பாடலொன்றில் “நிறை மொழி மாந்தா”; எனும் முறிப் பொன்று உண்டு.
                           சிவனை சித்தர் என சம்பந்தர் நாவுக்கரசர் போன்றோர் தேவாரங்களில் கானப்படுவதைக்கானலாம். திருவிளையாடல் பூராணம் சிவனை சித்தனாக கூறுகின்றது. மேல் நாட்டவர்கள் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டில் தான் அறிமுகமானதாக டி.ஓ.ரன்ஸ்(னு.ழு.சுரநௌ)என்பவர் குறிப்பிடுகின்றார். ஆய்வாளர் சித்தர்கள் காலம் பற்றி பல கருத்துக்கள் கானப்பாடினும் நாயன்மார்களின் பட்டினலையும் சித்தர்களுக்குள்ளே அடக்குகின்றனர். 
                     திருமூலர் வாழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் கானப்பட்டாலும் திருமந்திரம் ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒருவர் காலத்தேவைகளின் நிமித்தம் வேறுவேறு பெயர்களில் அவதாரம் எடுப்தாக நம்பப்படுகின்றது. சிரடிசாயிபாபா சத்தியசாயிபாபாவாக அவதாரம் எடுத்தாகவும் இனி பிரேமசாயிபாபாவாக அவதாரமெடுப்பதாகவும் கூறப்படுகின்றது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இராமர், கிருஷ்ணர் ஆகியோரின் இணைந்த அவதாரமாகக் கருதப்படுகின்றது. மகாவிஸ்ணு தசாவதாரத்தில் ஒன்பது அவதாரம் எடுத்து விட்டார். இறுதியான கல்கி அவதாரம் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 
                                            கலியுகம் தோன்றுவதை அறிய அறிகுறிகளை மகாபாரதம், பகவத்கீதை, புனித விவிலியம், புனித அல்குறான், போன்ற நூல்களும் கலக்ஞாணம் என்று ஸ்ரீ காகபுசுண்டர், ஸ்ரீ வீரப்பிரம்மம்,  ஸ்ரீ ஈசுவரப்பட்டர் போன்றோர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்டவைகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. சித்தர்கள் திரிகால முனாந்;தவர்கள். நடந்தது, நடக்கின்றது, நடக்கவிருப்பது போன்றவற்றை சுக்குமமாகவும், செய்கைகள் முலமும் உலகுக்கு வெளிப்படுத்துபவர்கள். திரிகரண சுத்தியுள்ளவர்கள். மனம், வாக்கு, காயம் எனும் மூன்று ஒருங்கே செயல்படுபவர்கள்.  
                                     சித்தன் என்னும் போது சித்தம் தெளிந்தவன் என்பது பொருள். சித்தம் தெளிந்து தன்னுள் சிவத்தை கண்டு  அதை அனுபவித்தவன். என்பது பொருள். எம்மைக் கடந்தும் எம்முள்ளும் இருக்கும் பொருன் ஒன்று உண்டு. அதுவே எம்மையும் பிரபஞ்கத்தையும் இயக்குகின்றது. என்பதை எப்போது மனிதன் உணர்தானோ அப்போதே சித்தன் பூ வுலகில் உதித்து விட்டான். சத்தாகிய பாசத்தால் கட்டுண்ட ஆன்மாவாகிய சதசத் சித்தாகிய பதியை நாடி சத் சித்தாகி ஆனந்தத்தை அனுபவிக்கும். அதை சத் சித் ஆனந்தம் மாகிய “சச்சிதானந்தம்” அதை அடைந்தவர்களே சித்தர்கள். “தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”; என்பதே இவர்களின் தாரகமந்திரம். ஆன்மா நுன்னுடலை நாடி சிவப்பேற்றை அடைய வழிகாட்டுபவர்கள். அவர்களை நாடி இறை இன்பம் பெறுவோம்.