Friday, April 8, 2011

திருமந்திரம் கூறும் வாழ்க்கைத் தத்துவம் - 1

திருமந்திரம் கூறும் வாழ்க்கைத்
தத்துவம் - 1

பன்னிருதிருமுறையில்  பத்தாவது திருமந்நிரம் இதற்கு மாத்திரமே மந்திரம் எனவருகின்றது. இதனால் இதிலுள்ள அனைத்தும் மந்திரங்கள் மட்டுமன்றி சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதியும் மாகும். 
முதலில் மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது ஜீவகாருண்னியம் இதை தவமாக்கியவர் “அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருனை” வள்ளலார். புலால் உண்பவர்களுக் தானதரும் செய்தாலே பவம் என்னுமளவும் புலாலை வெறுக்கின்றார்.
திருமந்திரம் கொல்லாமை, புலால் மறுத்தல்,  கள்ளுண்னாமை, பிறர் மனை நயவாமை, போன்ற பஞ்மாபாவங்கள் தவித்தல் தொடர்பாகவும் அறம், அன்புடமை, கல்லாமை, நடுவுநிலமை, போன்றவற்றையும் குறித்துரைத்துள்ளார்.
முதலில் கொல்லாமையைப்பார்போம்.
 “பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
  மற்றோர் அணுக்கனைக் கொல்லாமை ஒண்மலர்
  நற்றோர் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
  உற்றார் ஆவி அமர்திட்டம் உச்சியே” இங்கு இறைவனுக்குகந்த மலர் இன்னுமோர் உயிரைக் கொல்லாமையாகிய சிறந்த மலர். ஒன்றித்த மனவைராக்கியம் பூசைக்கேற்ற தீபஒளியாகும். உயிர்களிடத்து இறைவன் உறையும்மிடம் தலை உச்சியாகிய சக~;ராகாரமாகும். அப்படிப்பட்ட இறைவனின் படைப்புக்களை கொல்வதையோ வதைப்பதையோ திருமூலர் அனுமதிக்க வில்லை. சிவனை பூசிப்பதற்கு சிறந்த மலர்களால் எட்டு அவற்றை அட்டபுஸ்பம் என்பர். அக பூசைக்கு உகந்தது “கொல்லாமை ஐந்தடங்கள் கொள் பொறுமை டிரக்கம் அறிவு மெய் தவம் அன்பெட்டு”  என்னும் நற்பண்புகள் எட்டும் ஒண்மலராகும்.  கொல்லாமை ஐம்பொறியடக்கல் பொறுமை இரக்கம் அறிவு  மெய் தவம் அன்பு இவை முறையே சிவபெருமானுடைய எட்டுக்குணங்கள் இவை எட்டும் எம்மிடம் இருத்தல் வேண்டும். அப்பர் பெருமான் இவ்வெட்டுக்குணத்தையும் “எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்டலரிடு வார்வினை மாயுமால்” புறமலரை விட அகமலரான ஒண்மலர்களை சமர்ப்பித்தல் சிறந்தது.
 “கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
        வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்
        செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
        நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே” கொல்லென்றும் குத்தென்றும் எறிஎன்றும் அங்கனமே செய்தும் செய்துவரும் கொடியவர்களை கூற்றவன் தன் ஏவளார்களான வலிய இடிகாரர் வன்மையுள்ள கயிற்றினாற் கட்டி இடிமுழக்கம் போல்முழங்கி  நரகத்திலிடுவர் ஆருயிர்கள் பருவுடம்பில் நின்று செல்லவும் கேட்கவும் முடியாத அஞ்சத்தக்க கொடுமைகளைச் செய்கின்றனர். அவர்களை இறைவின் ஏவலாளர்களை வைத்து நுண்ணுடம்பில் வைத்து மாறமுடியாத துன்பங்களைச் செய்கின்றனர். துன்பத்துக்கு மருந்தும் கிடையாது இரங்கு வோரும் கிடையாது. இதைப் போன்று துன்பம் கிடையாது. இதற்காகத்தான் “மனங்கொண்டு பிறருக்குத் துன்பஞ்செய்யாது இன்பம் செய்தல் நன்று”  
“கொலையே களவுகட் காமம்பொய் கூறல்
 முலைவான பாதக மாம்அவை நீக்கித்
தலையாஞ் சிவனடி சாந்தின்பஞ் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே” கொலை களவு கள்ளுண்டல அறமற்;ற காதல் பொய் என்னும் ஐந்தும் மாறாமயக்கம் தரும் பெரும் பாவங்கள் இவற்றை செய்பவர்கள் நரகத்தை அடைவர். இவற்றை செய்யாது இறைவனை நாடியவக்கு  இறவா பேரின்பம் சார்ந்த நல்லார்க்கு நரக துன்பம் மில்லை. “அழிவில்லாத் திருவடி உணர்வின்பத்திருந்தலே என்றும் நிலைநின்ற மெய்ப்பொருளாகும்” இப்பாவங்கள் செய்தவரை பின் விளைவாக வந்து பின் தொடர்ந்து எம்மைக்கொல்லும். உண்மையை நாடி அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை இந்த ஐந்தினையும் இடையறாது ஒழுகுதல் வேண்டும். அடுத்து புலால் மறுத்தல்
 “ பொல்லாப் புலாலை நுகரும் புலையரை  எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
                              சேல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
                              மல்லதக்கத் தள்ளி மறித்துரைப் பாரே” உலகவராலும் உண்பார்க்கமைந்த உறுப்புக்களாலும் ஏற்றுகொள்ளும் வாய்ப்பு அமையாதது புலால். இவர்கள் பிறப்பில் இழிவானவர்கள். அப் புலையர்களை  இடிபோல்முழங்கி  யமன் நரகத்தில் தள்ளி துன்பப்படுத்துவான். “புலால் உணபவருக்கு இன்மையிலும் பொல்லாதேயாகும் என்னை அவ்வூன் நல்ல உள்ளத்தைத் தாராதாகலான்” இவ் உண்மை “உழைப்பால உடலழகாம் ஊணாலாம் உள்ளம் மழைளொழுக்காலாம் உயிரின் மான்பு” 
   “கொன்றி லாரைக் கொலச்சொல்லிக் கூறினார்
    தின்றி லாரைத் தின்னச்சொல்லித் தெண்டித்தார்
    பன்றி யாப்படி யிற்பிறந் தேழ்நரகு
    ஒன்று வார்அரன் ஆணையி துண்மையே”  கெல்லாதவரை அதாவது கொல்லும் கருத்தும் ஆற்றலும் இல்லாதவரை கொல்லும்படி தூண்டி துணை நின்றவரும்  உண்ண மனமின்றி அருவருப்புடன் இருந்தவரை வற்புறுத்தி உண்ணச் செய்தவரும் அப்படியும் தின்னாதவரை ஒத்திவைத்தவரும் இன்நிலத்தில் பன்றியாய்ப் பிறப்பர் பின்பு ஏழ்நரகத்திடை வீழ்ந்து ஆழ்ந்த துன்புறுவர். இது இறைவன் ஆணை. இங்கு இயேசுகிறிஸ்து சாத்தானை பன்றியில் ஏவினார். அதுபோன்று இஸ்லாம் பன்றி இறைசியை கறாம் எனவும். இந்துக்கள் ஈனமான பிறவி பன்றி என்றும் கூறும்போதும் அதை எல்லாமதமும் ஏற்று கொள்வது போலத்தான் இருக்கின்றது. இராமலிங்க அடிகள் குறிப்பிடுகின்றார் மாமிசம் உண்பவர்களையும் உண்ணாதவர்களையும் மிருகங்கள் உகித்தறிந்து உண்பவர்களை வெறுத்தும் உண்ணாதவர்களை வாழ்த்துகின்றன. என குறிப்பிட்டுள்ளார். 
உணவு மனிதனின் செயல்பாட்டை மாற்றியமைப்பதில் முக்கிய காரணியாக அமைகின்றது. மனித நடத்தைக்கு காரணமாக அமைவது குணங்கள். அவை தாமதம் ராஜதம் சாத்வீகம்மாகும். அக்குணங்கள் ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் பிரதான காரணங்களில் ஒன்று உணவுவாகும். உணவில் சாத்வீக இராஜத தாமத குணங்களைங்களை ஏற்படுத்தும் தன்மையா உணவுகள் உண்டு. இதை மிருகங்களில் இலகுவாக அவதானிக்கமுடியும். இலை குலை கிழங்கு வகைகளை உண்னும் ஆடு மாடு போன்றவை சாத்வீக குணமுள்ளதாகவும். மாமிசம் போன்ற கலப்புணவுகள் உண்ணும் சிங்கம், புலி, கரடி போன்றவை பயங்கரகுணங்கள் கொண்டவையாக இருப்பதையும் அவதானிக்கமுடியும். இதை ஒத்ததுதான் மனித நிலையும். முதல்நுகரி அல்லது தாவரநுகரியானவை(சைவ) சாத்வீக ராஜத தாமத குணங்களில் சாத்வீகம் சற்று அதிகமாகவிருப்தையும். இரண்டாம் நுகரியான அசைவ உணவை உட்கொள்பவர்கள் சாத்வீக ராஜத தாமத குணங்களில் ராஜத தாமதம் சற்று அதிகரித்து இருப்பதையும் அவதானிக்க முடியும். தற்போது மருத்துவர் ஆய்வுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் அசைவஉணவுகளை குறைத்தல் அல்லது தலித்தல் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என கருதுகின்றது. உடலில் கொழுப்பு அதிகரிப்பதனால் கொழுப்பு வெளியேற்றப்படாது. இரத்தத்தில் கலந்து இரத்தநாளங்களில் உறைந்து இரத்தொட்டத்தை சீரற்தாக்கும் போது இரத்தழுத்தம் அதிகரித்து மனிதன் நிலைகுழம்பு கின்றான். கோபம் அதிகரித்து அவனது நிலை குழம்பி நிம்மதி இழக்கின்றான்.  தேவைத்கதிமான உணவருந்தலாலும் கொழுப்பின் அளவு அதிகரிப்பதாலும்  இன்சுலினின் தேவை அதிகரித்து இக்சுரப்பி அதன் செயல்ப்பாடு குறைந்து  சக்கரை உப்பு  என்பனவற்றை எரித்து  கழிவகற்றும் செயல்பாடு குறைந்து சக்கரை உப்பு அதிகரித்து அதுவும் இரத்தத்தில் கலக்கின்றது. இதன் மூலம் இரத்தழுத்தம் இருதய அதிர்ச்சி நோய் சக்கரை வியாதி இரத்தஉப்பு நோய் என்பன உண்டாகின்றது. உடல்பயிற்சி இன்மையும் காரணம்தான். 
சிலர் கருதுவதுண்டு சைவ உணவுகளுக்கு உயிர் இல்லையா? என்று கேட்பதுண்டு. உயிர் உண்டு. ஆனால் அதில் ஒரு கிளை அல்லது இலை பூ காய் கணியைப் பறிப்பதனால் மரம் இறப்பதில்லை மாறாக வளர்கின்றது. காலத்துக்கு காலம் தளிர் விடுவதும் பூப்பதும் காய்ப்பதும் பழுப்பதும் இயற்கை.





மனித உடல் சுடுகாடல்ல இறைவன் உறையும் ஆலயம். சுடுகாட்டுக்கு செல்ல பயமேன் புதைக்கப்பட்டவர்களின் ஆவி வசிக்கும் இடம். அவர் அவர் செய்த வினைப்பயன் ஆத்தும விடுதலை. அவர்கள் செல்லும் லோகமும். எமது வயிறு சுடுகாடு போல் மச்ச மாமிச உடல்களை புதைக்கும் இடமல்ல. இது எமக்கு புரியும் மச்ச மாமிச உட்கொண்டால் ஆலயத்துக்கோ அல்லது சமய நடவடிக்கையிலோ கலந்து கொள்வதில்லை. வீட்டில் இடம் பெறும் சமய நிகழ்வுகளின் போதும் தவிக்கின்றோம்.  பொதுவாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் தவிப்பதுண்டு. அதிலிருந்து நாம் நம்மை அறியாமல் இருக்கின்றோம் என்பது உண்மை. ஜெசுகிறிஸ்து இறைவனை நோக்கி நாற்பது நாள்  பிதாவை நோக்கி விரதம் இருந்த போது அவர் சாத்வீக உணவே உட் கொண்;டார். அதை ஞாபகப்படுத்தவே விரதத்தின் முன் முட்டைகள் மலையில் உடைக்கப்பட்டது. இதனை முட்டையடிப்பெருநாள் என்றும் உலக ஆசையை வெறுக்கவே அவற்றை எரித்து சாம்பல்புசியதை சாம்பலடிப் பெருநாள் என்றும் கொண்;டாடப்பட்டது. அதிலிருந்து புலனாகின்றது. இறைவனை நோக்கும் போது உடல் விடையங்களைத் தவித்து ஆத்துமா விடயங்களை கடைபிடியுங்கள் என்றார் ஜேசு என கூறப்படுகின்றது. இதிலுருந்து புலால் தவித்தல் புலனாகின்றது. மறைமுகமாக கொல்லாமையை வலியுறுத்துகின்றார்.
இஸ்லாம் மதத்தின் திருக்குறான் இறக்கட்ட போது மலைக்குகையில் விரதமிருந்த போது ஈச்சம்பழமும் பாலும் உரோட்டியும் உண்டார் என கூறப்படுகின்றது. அதிலிருந்தும் இறைவனை நோக்கி விரதமிருக்கையில் சாத்வீக உணவுகளையே உட்கொண்டார். இதிலிருந்து இறைவனை அடைய கொல்லாமை புலால் உண்னாமை மறைமுகமாக வலியுறுத்தப்படுவது உட்கிடை. பௌத்த மத்தில் புத்த பகாவான் இந்து மதத்தின் ஆரம்பகாலத்தில் காணப்பட்ட வேள்விகளில் காணப்பட்ட மிருகப்பலியிடலை வெறுத்தே பௌத்தமதத்தை பஞ்சீலக் கொள்கையில் உருவாக்கினார்.
எனவே நேரடியாக இந்து பௌத்த மதங்களும் மறைமுகமாக ரோமங்கத்தோலிக்கமும் இஸ்ஸாமும்  இறைவனின் கிருபையைப் பெற கொல்லாமை புலால் உண்னாமை வலியுறுத்தப்படுகின்றது.
கள் உண்ணாமை பற்றி திருமந்திரம் குறிப்பிடுகையில்
                                   “கழுநீர்ப் பசுப்பெறின் கயந்தொறும் தேரா
                கழுநீர் விடாய்த்தங் காயம் சுருங்கும்
                முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
                செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே” பசுவுக்கு அரிசி கழுவிய நீர் விருப்பம் அதை உண்டால் மீண்டும் கிடைக்கும் வரை காதிருக்கும். இது போல சிவானந்தத்தை விரும்பி உண்போர் மீண்டும் அதையே நாடுவா சிலர்;. மானிடநோ சிவானந்தத்தை அருந்தாது கள் அருந்தி மாய்கின்றனர்களே. பசுவின் அறிவு கூட இல்லையே இந்ந நிலை கெட்ட மாந்தருக்கு என்று கேட்கின்றார்.
                        “ சித்தம உருக்கிச் சிவமாம் சமாதியில்
           ஒத்த சிவானந்நம் ஓவாத தேறலைச்
           சுத்த மதுவுண்ணக் சிவானந்தம் விட்டிடா
           நித்தல் இருத்தல் கிடத்ததல்கீழ்க் காலே” சித்தம் தெளிந்து சிவானந்த தேனை பருகி திளைக்காது உண்பதும் உலாவதும் உறங்குவதுமாக இருப்போர் கீழானவர்கள். “காமமும் கள்ளும் கலதிட்கே ஆகும்
                   மாமல மும்சம யத்தில் மயல்உறும்
          போமதி யாகும் புனிதன் இணைஅடி
                   ஓமய ஆனந்தத் தேறல் உண்ர்வுண்டே” பெண் ஆசையும் கள் உண்னும் ஆசையும் உடையோர் கீழ் மக்களாகிய தீயவருக்கே பொருந்தும். அவர்கள் தான் என்ன ஆணவம் மயங்கி புத்திகெட்டுப்போவர். அதை விட்டு பிரணவப் பொருளையுணர்ந்து அத் தேனமுதை  உண்டுகளித்து பயன் பெறுக.”உள்ளுண்மை ஓரார் உண்ரார் பசுபாசம்
     வள்ளன்மை நாதன் அருளினின் லாழ்வுறார்
     தௌ;ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
     கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே” கள்ளருந்தும் மாந்தர்கள் என்றுமுள்ள மெய் பொருளை ஆய்தறியவோ உணரவோ மாட்டார்கள். ஆன்மாவாகிய பசுக்கள் பாசத்தில் சிக்கித்தவிப்பதை அறியார். வள்ளல் பிரானின் அருள்பெற்று வழங்க மாட்டார்கள். சிவயோகத்தில் சேர்ந்திருக்கமாட்டார்கள்.  
 “மயக்குஞ் சமய மலமன்னு மூடர்
  மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார்
  மயக்குறு மாயையின் மாமாயை வீடு
  மயக்கில் தெளியின் மயக்முறும் அன்றே”  அறிவினைக் கெடுத்து அல்லப்படுத்தும் எதுவும் ஆன்ரொரால் கள் என்றே கொள்ளப்பட்டது. ஆதலால் தெளிவு விரிவு இல்லாத  அறிவுள்ளவர் மலம் நிறைந்த மூடர்கள். அவர்களின் எரிவினால் ஏற்படும் சமயம் மயக்கம் தரும் பொய்ச்சமயம் ஆகும். இங்கு சமயம் தீமையெனகெண்டவர்களையும் நன்மையெனக் கொன்டு ஆராயாது நிற்கும் தீயார் அறிவைக் கொடுக்கும் மதுவினையுண்பவர்கள் மாமூடர்கள். அவர்களுக்கு அதுபற்றி விளக்கினாலும் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மயக்கம்தரும் மலங்களின் இருப்பிடமான இவர்கள் மயக்கம் தெளிந்தாலும் விழித்தெழுவ தில்லை.
 “மயங்கும் தியங்கும்கள் வாய்மை அழிக்கும்
       அயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
       முயங்கும் நயம்கொண்ட ஞானத்து முந்த
       இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே” கள் மனதை மயக்கி புத்திதடுமாறி அபாய் பேசவைத்து பெண்களுடன் கூடிமகிழவைத்து பேரின்ப நாட்டத்துக்கு தடையாக அமையும்.இவர்களுக்கு தொடர்ந்து கள்மயக்கமே கிடைக்குமே தவிர தொடர்ந்து கிடைக்குமே தவிர தொடர்ச்சியான பேரின்பம் கிடைக்காது. “இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
          பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
          இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
          இராப்பகல் மாயை இரண்டடித் தேன்” இரவு பகலற்ற தன்னை மறந்து யோக நிலையில்  உள்ளுறும் ஆனந்தத் தேனை அருந்தாது இருப்பவர்கள் கீழானவர்கள். அதனால் இரவு பகல் உள்ள மாய மலங்கள் இரண்டையும் அகற்றி இறையருளில் திளைத்தேன்.
 “ சத்தியை வேண்டிக் சமத்தோர் கள்ளுன்பர்
   சத்தி அழித்தது தம்மை மறத்தலால்
   சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பபட்டுச்






   சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே” சத்தியிடம் சக்திவேண்டி பராசக்தியைத் துதிப்பர் சிலர். சக்திக்கு கள் நிவேதனம் செய்து அதை தாம் அருந்தி தன் சக்தியை இழக்கின்றனர்.  சக்தி என்பது சிவஞானம் அதிலிடுபட்டு சத்திய ஞான ஆனந்தத்தை அடைவதை விட்டு கள் அருந்துகின்றனர். சக்தி பூசை என்று கள்ளு நிவேதனம் செய்தும் ஆடு கோழி பலியிடப்படும். பூசையின் போது அம்மன் கள் அருந்துவதாக தான் அருந்தி அம்மனுக்கு பலியிடுவதாக தான் கொழியை கடித்துக்குதறியும் ஆட்டை வெட்டி பலியிட்டும் சமயத்தின் பேரில் பித்தலாட்டம் ஆடும் பலர் இன்றும் எம்மிலிருக்கின்றனர். இவர்கள் தாந்திரிய வழிபாட்டினர். இந்து தர்மம் கொல்லாமை புலால் மறுத்தல் கள் உண்ணாமை போன்றவற்றை குறிப்பிடுகையில் எப்படி இது நடைபெறுகின்றது. இந்து சமயத்தில் அறுவகை சமயங்கள் உண்டு அதில் சாத்தமும் ஒன்று. சக்தி மகாமாயை மாயையை அழிப்பவள் அன்பானவள் ஆருயிர்களுக்கெல்லாம் அன்னை அப்படி இருக்க ஆட்டுப்பலி கோழிப்பலி கேட்டு காரியம் முடிக்கப்பாளா? ஆடும் கோழியும் ஆருயிர்கள் இல்லையா?  அவள் இரக்கமற்றவளா? என்று சிந்தித்துப்பார்த்ததுண்டா? அவையனைத்தும் யாருடைய வேலை அது வாசகர் பக்கம்.
அன்பே வடிவான அவள் எம்மிடம் எதிபார்ப்பது தூய அன்பையும் அவனிடம் சரன்புகுதலையும் தான். குருதேவர் ஸ்ரீ இராமகி~;ணர்,காளிதாசர,பாரதியார்,சப்தரிசி~pகள் போன்றோர் ஆடும் கோழியும் பலியிட்டார்களா? சத்திக்கு கள் கொடுத்தார்களா? அல்லது அம்பிகையின் கருணை கிடைக்க வில்லையா? முற்பெரும் தேவிகளாக உலகம் அறிந்தது காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி,  உலகை விரிந்த பார்வையில் பார்த்துக் கொண்டு இருப்பவள் காசி விசாலாட்சி, உலக மக்களின் பிறவாமைக்கு தடையாக அமையும் ஆசையை ஆழ்பவள் காஞ்சி காமாட்சி,மீன் தனது குஞ்சிகளை காக்க எவ்வாறு விளித்திருக்கின்றதோ அவ்வாறு உலக மக்களைக் காப்பவள் மதுரை மீனாட்சி. இங்கெல்லாம் ஆடு கோழி பலியிடலும் கள்ளும் நிவேதனம் செய்கின்றார்களா? இல்லை.
ஆடு,கோழி பலியிட்டு, கள் கொடுத்து காரியம் முடிப்பது துர்தேவதைக்கே அங்கு பில்லி, சூனியம், கெடுதி செய்வதற்கே அதனால் வஞ்சகம் சூது பொறாமை உலகில் தலைவிரித்தாடி கெட்டசக்திகளின் ஆக்கிரமிப்புக்கே அதை செய்விக்கும் பூசாரி அசைவ உணவுட் கொள்பவராகவும் கள் அருந்துபவராகவும். இடுகாட்டை மையமாக கொண்டவராகவும் காணப்பாடுவார். இவர் சிவன் சுடலைப் பொடிபூசி சுடலையில் நடமாடியதை கதைபார். சிவன் நடனமாடிய சுடலை நம்மிழுள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் திரிபுரங்களை எரித்து அந்த சாம்பலை அணிந்து எம்முள் ஆடிய நடனம் அது அதை அவர்கள் அறியார். அகோரிகளை ஒத்தவர்கள்.     
அதற்கு தடையான மும்மலமான ஆணவம் கன்மம் மாயை இவற்றையே பலியிட்டு அவளிடம் சரன்புக வேண்டும்;. இதுவே பலிஇடல். ஆலயத்தில் கோபுரத்தின் வழியாக உட்செல்லும் போது முதலில் தம்பவினாயகர் அதையடுத்து தம்பம் அதையடுத்து மும்மலத்தைபலியிடும் பலிபீடம் அதையடுத்து மூலவரின் வாகனம் இருப்பதை அவதானிக்கலாம். இறைவனை அடைய தடையாக அமையும் விக்கிரகங்களை தீர்க்க புத்திவிளிப்புத்தேவை அதை வினாயகரிடம் வேண்டி ஆறாதாரத்தின் ஊடாக குண்டலினி விளிப்படைந்து சகஸ்ராதரத்தில்லிருந்து ஊறிச்சொரியும் அமுதம்மெனும் கள்லினை அனுபவித்து பரமானந்தத்தை அடைய தம்பம் அடையளமாகும். அதற்கு மலபரிகாரம் செய்யும்மிடம் பலிபீடமாகும்;. அதன் பின் ஆத்துமா விடுதலை பெற்று இறைவனை அடையும் என்பதை இறைவனை நோக்கி நந்தியிருப்பது குறிக்கின்றது. இதை அடைய பலதடைகள் இருப்பதை நந்திக்கும் இறைவனுக்கும் இடையியுள்ள திரைகள் குறிக்கின்றன. இந்த தத்துவஞானம் இல்லாது அறியாமையில் மூழ்கின்றனர் பலர். எழுபிறப்பு என்பதும் ஏழு உலகமும் எம்முள் தான் அது வெளில் இல்லை.  எம்முள்ளுள்ள ஏழு ஆதாரமும்  ஏழு பிறப்பு அவையே ஏழு உலகமும். முலாதாரத்தில் புத்திவிளிப்பு இடம் பொற வேண்டும். அதன்பின் சுவதிட்டானத்தில் காமக்குரோத செயல்கள் பலியிடப்பட வேண்டும். அதன்பின் மணிப்பூரகத்தில்  காமக்குரோத செயலுக்கு காரணமான தாமத இராசத குணத்தை ஏற்படுத்தும் உணவை தவித்து  சத்வீகக்குணத்தை ஏற்படுத்தும் உணவை உட் கொண்டு சாத்வீககுணத்தை மேன்படுத்தால். அதன் பின் அணாகதத்தில் அக்கினியில் அஞ்ஞானத்துக்கு காரணமான அணைத்தையும் கோமம் செய்து உலக விவகாரங்களிலிருந்து விடுபடுதல்.  அடுத்து விசுத்தியில் எல்லாவற்றையும் துறந்து துற அறம் பூணுதல். அடுத்து ஆக்ஞாவில் சதாசிவத்தில் இரண்றற்றுக் கலத்தல். சகஸ்ராகாரத்தில் சிவஞான தௌ;ளமுதை அருந்தி யோகநிஸ்டையில் இருத்தல். 
ஆக்ஞ்னா இமையம் இது இமைகளின் மையப்பகுதியாகும். இதுவே கைலாயம் என்னும் கைலையம்பதி. இது எமது முத்தி தலம். இதன் முன் வாரனாசி இது இமைகளுக்கு சற்றுக்கீழ் இடகலை பின்கலை நாசிகளின் மேல் துவாரம் இதுவே உடலுக்கு உயிர்புக்கான பிரானன் செல்வதான வலப்பக்க நாடியான சூரிய நாடியும் இடப்பக்க கரியமலவாயு வெளியேறும் சந்திரநாடியும் இருக்கின்ற வேளை வெளியில் தென்படாத சுழுமுனை நாடி வழியாக குண்டலினி முலாதாரத்திலிருந்து முளையிட்டு சகஸ்ராதாரத்தில் அமுத மழையாக சொரியும் நாடி இருக்கின்றது. காசிவிஸ்வநாதர் இருக்குமிடம்;. “காசியில் இறக்க முத்தி” என்பர் சான்றோர். காசியில் கங்கை யமுனை சரஸ்வதி மூன்றும் கலக்குமிடம் வாரனாசி இதில் கங்கையும் யமுனையும் கண்ணுக்குப் புலப்படும்  சரஸ்வதி கண்ணுக்குப் புலப்படா இதுவே சுழுனா மற்றவை இரண்டும் இடகலை பின்கலை ஆகும். இன்று சரஸ்வதி நதி தொடப்பான ஆய்வுகள் நடை பெற்ற வண்ணமுள்ளது. இதையே அண்டத்திலுள்ளவை பிண்டத்திலும்முண்டு என்று சான்றோர் கூறுகின்றனர். பூமிக்கு கீழ் ஓடி வாரணசியில் கலப்பதாகவும் வெண்நிறமானது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
திருமூலர் ஒரு மனிதன் பிறப்பின் நோக்கத்தை அறிந்து அதை அடைய வேண்டுமாயின் முதலில் கொல்லாமை புலால் உண்ணாமை கள் உண்ணாமை போன்ற விடயங்களில் அவர் கவனம் ஈத்தது. இன்று விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது. மனிதனின உடலில்  செயல்பாடுகளை கட்டுப்படுத்த மூளை செயல்படுகின்றது. மூளைக்கு சமிக்கை கொடுப்பது நரம்பு மண்டலம். சிந்திப்பதன் மூலமே அது செயல்படுத்தப்படுகின்றது. கள் உண்பதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சிந்தித்து செயலாற்றும் செயல்பாட்டை காலப்போக்கில் இழந்து சுயநினைவை இழந்து நடைப்பிணமாக அலைந்து மனிதன் க~;டப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்கு காரணம் கலங்கள் இறத்தல். மனிதனின் கலங்கள் இறப்பதும் புதிய கலங்கள் பிறப்பதும் இயற்கை. இந்த இறப்பு பிறப்பு விகிதம் சமமாக இருக்கையில் வளர்ச்சி பிறப்பு விகிதம் குறைறும் போது முதுமை ஏற்படுகின்றது. அது இயற்கையின் நியதி அது விதிவசம். இதற்கு இயற்கையின் நியதிக்கு மாறாக மனித நடத்தையும் காரணம். “விதியை மதியால் வெல்லலாம் அதுவும் விதிதான்” இறவாமையை அடைய உடல் வேண்டும். ஏனெனில் சாதனை செய்ய. “ சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” சாதனை செய்ய ஆரோக்கியமான உடலும் தூய்மையான உள்ளமும் வைராக்கியமான எண்ணமும் தேவை. அதற்கு இளமை தேவை. இதற்கு குருதேவர் ஸ்ரீ இராமகி~;ணர் குறிப்பிடுகின்றார். “இளமையில் ஆன்மீகம் முதுமையில் லவ்வீகம்” ஏனெனில் சாதனை செய்ய இளமையின் உடல் உறுதி அவசியமென்றும் பிற்கால திட்டம் ஆன்மீகப்பாதைக்கு தடையற்ற வழியாக அமையும். அடுத்து குருதேவர் சாதனை செய்பவன் “பகலில் தூங்கி இரவில் விளித்திரு” என்றார். பகலில் சூரியபகவான் இருப்பதால் தூய்மையான எண்ணங்களுக்கு தடையாக அமையாது. இரவில் சூரியபகவான் இல்லாமையினால் தீயசக்திகளின் வலு அதிகம் இதனால் ஜபம் தவம் செய்து இவற்றின் இடையூறிலிருந்து எம்மைக் காப்பாற்ற வேண்டும். என தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இது போன்று ஜேசுநாதரை அன்னை மேரி வயிற்றில் சுமந்த காலத்தில் பல்வேறு க~;டங்களுக்கு மத்தியிலும் எந்த நேரத்திலும் செபம் தியானத்தில் மூழ்கி இருந்ததை சூசையப்பர் தான் இரலில் நித்திரையில் எழுகின்ற சந்தர்பத்தில் எல்லாம் அன்னை செபம் தியானத்தில் மூழ்கியிருந்ததாகவும் நித்திரை செய்ததை கணாவில்லை எனகூறியதாக அன்னையின் வாழ்கை வரலாறு புத்தகம் ஒன்றில் நான் வாசித்துள்ளேன். அங்கும் குருதேவரின் கருத்தை ஒத்தாக இருப்பதை காண்கிறோம். அதிலிருந்து உலக விவகாரத்தில் மூழ்கி தூங்காது அதில் விழிபாகவிருந்து ஆன்மீக வாழ்கையில் தளைத்தோங்கு அதற்கு ஜபம் தவம் தேவை என்பதை சூசகமாக குருதேவர் கூறியிருப்பதாக தோன்றுகின்றது. உலகவிவகாரங்களை இரவுக்கும் ஆன்மீகத்தை பகலுக்கும் ஒப்பிடுகின்றார். இரவில் உள்ளவற்றை காண்பதற்கு வெளிச்சத்தின் துணையும் விளிப்பும் தேவை பகலில் எல்லாமே தெட்டத்தெளிவாக தெரியும். பகலில் வெளிச்சத்தின் துனை தேவையில்லை. ஏனெனில் இறைவனுடனிருத்தல்.
எனவே திருமூலர் மனிதனின் சுகாதார ஆரோக்கிய வாழ்iயின்னுடாக ஆன்மீக வாழ்கையை திட்மிட்டு செயல்பட அடிப்படையில் தவிக்கவேண்டிய கொல்லாமை, புலால் தவித்தல், கள்உண்ணாமை பற்றியும் அதன் விளைவுகளையும் தெளிவு படுத்தியுள்ளார். அடுத்த கட்டுரையில் ஏனையவை தொடரும்.      

சித்தர்கள் பூமி கதிர்காமம்” கட்டுரையின் பகுதி-2 “கதிர்காமம் ஆகமமுறைக்குட்பட்ட பூசை நடைபெற்ற இடம். துட்டகைமுனுவின் கைப்பற்றலின் பின் திரையிட்டு மறை பொருளானான் கந்தன். அடியார் உள்ளத்தில் நிறை பொருளானான்”;.

                                          திருவிழாவின் போது பேழையை யானையில் வைத்து    ஊர்வலம் செல்லும் காட்சி
'சித்தர்கள் பூமி கதிர்காமம்' கட்டுரையின் பகுதி-2


'கதிர்காமம் ஆகமமுறைக்குட்பட்ட பூசை நடைபெற்ற இடம். துட்டகைமுனுவின் கைப்பற்றலின் பின் திரையிட்டு மறை பொருளானான் கந்தன். அடியார் உள்ளத்தில் நிறை பொருளானான்'

கதிர்காமத்தில் இன்று நடைபெறுகின்ற பூசை முறை பரம்பரையான முறை என பலரும் கருதலாம். ஆனால் அது வல்ல உண்மை. தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி துட்டகைமுனுவுக்கு மாறிய பின்னரே இந்துக்களின் பூசை முறைக்கு கதிர்காமத்தில் ஆபத்துவந்தது.
துட்டகைமுனு ஆட்சிக்கு வந்த பின் கதிர்காமத்திலிருந்த அதிகாரிக்கு எழுதிய ஓலையில் பன்டாரச் சாதியினர் வந்து இந்து சமய முறைப்படி ஆலய பூசை செய்யும் வரை உங்களுக்கு தெரிந்தவரை பூசை செய்யுங்கள் என எழுதியிருந்ததாகவும் அதை தான் பார்வையிட்டதாகவும் கதிர்காம நாயகா பிக்குவான தம்ம தின்ன பியரத்ன தேரோ கூறியதாக அறிகின்றோம்.
செஞ்சந்தன கட்டையிலான தங்கத்தட்டால் அங்கி அணிவித்த ஆறுமுகமும் பன்னிருகையும் உள்ள ஆறுமுகசுவாமி சிலை திரைமறைவில் உள்ளது. 1922 ஆம் ஆண்டின் முன் பஸ்நாயக்காவாக இருந்த திரு. ஸ்ரீ உள்விட்ட என்பவரும் கோயிலின் திருப்பணிகள் செய்து  கொன்டு 1934 ஆம் ஆண்டுவரை கதிர்காமத்திலிருந்த திரு. புஞ்சி சிங்கோ என்பவரும் கதிர்காம பௌத்த விகாரையின் பிரதம குருவும் சிலை இருந்ததை கூறியிருக்கின்றனர். இவர்களின் கூற்றை 1819 ஆம் ஆண்டு அங்கு சென்ற இலங்கையின் தேசாதிபதி பிரவுண்டிரிக் அவர்களுடன் சென்ற டாக்டர்.டேவி என்பவர் எழுதிய வெளியீட்டில் 421 ம் பக்கத்தில் “விக்கிரகம் கோயிலிலிருந்து அகற்றப்பட்டு காட்டில் மறைக்ப்பட்டு வைக்கப்பட்ள்ளது” என்று குறிப்பிட்டனர். இதிலிருந்து விக்கிரக வழிபாடு இருந்ததற்கான ஆதாரமாக அமைகின்றது.
 திருவிழாக்காலங்களில் முருகப் பெருமானது விக்கிரத்திலுள்ள குடை கொடி வெண்சாமரை வேல் வில் அம்பு என்னும் ஆறுசின்னங்களும் வெள்ளிப் பேளையில் வைத்து பட்டுத்துணியில் சுற்றி யானையின் மீது ஏற்றி வலம் வருகின்றனர். இத்துடன் முருகப் பெருமானது சோடன சோபலங்கார பூசைக்கான அடுக்குத்தீபம் பஞ்சதீபம் முக்குதிதீபம் என்பன காட்டபடுகின்றன. அத்துடன்  சக்கரைப் பெங்கல் நைவேத்தியமாக நிவேதனம் செய்யப்படுகின்றது. இதிலிருந்து இந்துமத முறைப்படி பூசைகள் நடந்திருப்பதற்கு ஆதாரம் உண்டு.
அத்துடன் மகாவம்சத்தில் கதிர்காமத்தில் கந்தனுக்கு கோயில் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேவநம்பிய தீசன் காலத்தில் கி.பி. 250இல் அசோக சக்கரவத்தியின் புதல்வியான சங்கமித்திரை பிக்குனியால் புத்தகாயவிலிருந்து கெண்டுவரப்பட்ட அரமரக்கிளை ஒன்றினை நாட்டியதாகவும் 1 ம் நூற்றான்டில் கிரிவிகாரையை தகாநாக என்ற அரசன் கட்டுவித்தான் என்றும் கூறிப்பிப்பட்டுள்ளது. இது மகாவம்சம் அத்தியாயம் 57இல, குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெடர்பாக மகாவம்சத்தில்XIII யில் பக்கம் 76-77யில் XLV .45 LVK.2 67,68 ,70,74, உடன்LVIII .5 ம் பிரதிகளிலும் காணலாம். இங்கு கதிர்காமக்கந்தனின் வரலாறும் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாலயம் அக்காலதிலே இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இவ்வாலயம் இந்துக்கள் கையில் இருந்திருக்கலாம் என தோன்றுகின்றது. பொளத்தர்களின் கையில் இருந்திருந்தால் மகாவம்சம் அதைக்கூறி இருக்கும் போலும்.
 1635ஆம் ஆண்டு கண்டியை ஆட்சி செய்த கண்ணுச்சாமி என்னும் இரண்டாம் இராஜசிங்கன் என்னும் தமிழ் அரசன் கதிர்காமத்தின் நிர்வாகப் பொறுப்பை பௌத்த குருமாரிடமிருந்து இந்துக்களிடம் ஒப்படைக்க கட்டளையிட அதை அவர்கள் விரும்பாமையினால் அதை கைப்பற்றி இந்துக்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது. இதிலிருந்து பார்க்கும் போது காலத்துக்காலம் ஆட்சிப் பொறுப்புக் கேற்ப நிர்வாகப் பொறுப்பும் மாறியுள்ளது என்பது புலனாகின்றது. 1642ஆம் ஆண்டு போத்துக்கேயர் கதிர்காமத்தைக் கைப்பற்ற சென்று ஆலயத்தை அடையாளம் கானாமல் தோல்வியடைந்து  வரும் போது இடையில் கண்ட இந்து கோயில்களை இடித்து தள்ளியும் வழிபட்டு வந்தவர்களை கொன்று குவித்தனர்;. திரும்பியதாக அப் படையின் தளபGasper Figura de Cerpe)   டச் மொழியில்ல்எழுதிய ரிபீரோஸ் சீலாவோ சிலோன்(Ribeiro’s Ceilao Ceylon)   என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த டாக்டர் போல் பீரிஸ். சி.சி.எஸ்(Dr.P aule  Peris C.C.S.)  அவர்கள் அததியாக இருந்த கஸ்பர் பிக்கூரா டி செர்பே (னை பாகம்-1 பக்கம் 324 இல் குறிப்பிட்டுள்ளார். (1597-ல் ‘போத்துக்கீசர் காலம்’)
1635 ஆம் ஆண்டிலிருந்து 1817 ஆம் ஆண்டுவரை கதிர்காமம்  ஜோதி காமமாக விளங்கியது. 1815ஆம் ஆண்டு கண்டி இராட்சியம் பிரித்தானிய ஏகாதிபத்திய வசக்கப்பட்டு இதனால் “ஊவாகலகம் ஏற்பட்டது” இதன் விழைவாக 1818ஆம் ஆண்டு கலகம் வலுவடைந்து 1819 ஆம் ஆண்டு கட்டுபடபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 1819 ஆம் ஆண்டு யில் கதிர்காமம் இந்துக்கள் வசமானது. பாதுகாப்புப் பொறுப்பு பிருத்தானிய படை வசம்மிருந்தது. அப்போது தெய்வானை அம்மன் ஆலயப் பொறுப்பு ஸ்ரீ கல்யாண கிரிபாவா விடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் காட்டியில் மறைத்து வைக்கப்படடிருந்த ஆறுமுகசாமி எடுக்ப்பட்டு கதிகாம கந்தனின் கருவறையில் வைக்கப்பட்தாக  தேசாதிபதி பிரவுண்டிரிக் உடன் சென்ற டக்டர் டேவி 1821ஆம் ஆண்டில் பிரசுரிக்ப்பட்ட அரசாங்க பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். 1865ஆம் ஆண்டுவரை கதிர்காம நிர்வாகம் இந்துக்கள வசமாயி;ருந்தது என்பதற்கு பதுளை நீதி மன்றத்தில் பதிவான1865ஆம் ஆண்டு 182ஆம் இலக்க வழக்கு உறுதி  செய்கின்றது.
    1834ஆம் ஆண்டு வெளியான அரச வர்தமான பத்திரிகையில் சைமன் காசிச் செட்டி என்பவர் கதிர்காமத்துக்கு இந்தியாவிலிருந்து வரும் யாத்திரியர்கள் கங்கா ஜலத்தை மூங்கில் குழாய்களில் அடைத்து வந்து சுவாமிக்கு அபிN~கம் செய்து ஆராதனை செய்ததாகவும் முஸ்லிம் பக்கீர்கள் சுவாமியின் முன் தீவர்த்தி கைப்பந்தம் பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஓப்பு நோக்கும் போது இந்து தர்மத்தில் உள்ள அபிN~கம் அர்ச்சனை ஆராதனைகள் அனைத்தையும் நடாத்தப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இருந்தும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணமிருக்கும் அவை வெளிப்படையாக தெரிவதும் உண்டு. உள்ளுனர்வால் உணர்வதும் உண்டு. எவை எப்படி இருப்பினும் கதிர்காமம் சித்தர் கோயில். சித்தம் தெளிதால் அவன் ஒளி தெரியும். அதற்கு அகஇருள் நீங்க வேண்டும். உள்ளம் இருண்டால் அகக் கதவு மூடிவிடும்;. இதை திருமூலர் திருமந்திரத்தில் “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்” குறிப்பிடுகின்றார். சித்தர்கள் மகரி~pகள் மரபு புறக்கண்னால் கண்பதற்கு பதில் அகக்கண்னால் காண்பது. அதாவது தியானத்தின் மூலம் எம்முள்ளுள்ள இறைவனை காண்பது. இதனால் சாதி மத இன நிற வேறுபாடுகள் அதிகரிதிருந்ததால் ஆணவம் மேலோங்கி கந்தன் மறைந்தான். உண்மை அடியார்களான எழியோர்க்கு அகஒளிலில் தன்ஒளிபரப்பவே கந்தன் மறைந்து உண்மை அடியார்யுள்ளத்தில் குடிகொண்டுள்ளான். என்பதே உண்மை. கதிர்காமத்தில் கந்தன் அடியார்ரோடு அடியாராய் எழியோனாய் நடமாடுபவன். அங்கு தன்னைநோக்கி உருகுபவருக்கு காட்சி கொடுப்பவன். அருநகிரிநாதர் “திருப்புகழில்” கதிர்காமகந்தன் திருவளையாடலை “மருவும்மடியாரிகள் மனதில் விளையாடும் மரகத மயுர பெருமாளே” என குறிப்பிடுகின்றார்.
கதிகாமத்தில் சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு கந்தனின் அமுததுளிகிடைத்தது. இவர் தென் இந்தியாவின்  தென் பகுதியான இராமநாதர்புரம் “பெருநாளி” என்னும் இராசதானி சிற்றலசரின் ஒரே மகன் கோவிந்தசாமி என்பவராகும். இவர் ஒருமுறை கதிர்காமக்கந்தனின் அருள்வேண்டி மாணிக்ககங்கையில் நீடாடி மாணிக்கப்பிள்ளையாரிடம் உண்ணநோம்பிருந்தார். அது தவமாகமாறி பல வாரம் கழிந்தது கந்தன் கைவிடவில்லை. ஒருநாள் பெரிய கப்புறாளை வந்து சுவாமியிடம் “உன் தந்தை  உள்ளே வருமாறு அழைக்கின்றார்.” என்று கோயிலினுள் அழைத்துக் சென்றார். சுவாமி உட் புகுந்ததும்  சுரங்வழியாக ஏழுமலையை அடைந்து அதிலுள்ள சுனையிலிருந்து  கையினால் நீர் எடுத்து மூன்று செட்டு நீ நாவிலிட்டார். இதன் பின் உண்ணா நோம்பின் களை “சூரியனில் பட்ட பனிபோல் மறைந்தது”  அந்த சந்தாப்பத்தை சுவாமி உணவின்றி பலநாட்கள் இருந்தாலும்  உடலில் எவ்வித மாற்றமும் இருக்காது அதன் இரகசியத்தை கேட்கும் போது ஒருமுறை குறிப்பிட்டாராம். நீர் அருந்தியபின் கண்களை மூட்ப் பணித்தாரம் பின் கண் திறக்கையில்  சுவாமி கதிர்காம வீதியில் நடமாடுவதை உணர்தாராம். இப்படிப்பட்டவன் கந்தன்.
  அவன் திருவிளையாடல்களை “சித்தாகள்; பூமி கதிர்காமம்” என்னும் கட்டுரையில் குறித்துரைத்துள்ளேன். கதிர்காமம் சித்தர்கள் பூமி ஆகையால் சித்தர்கள் கந்தனை தன்னுள் கண்டவர்கள். அஞ்ஞானத்தாலும் ஊனக்கண்ணுக்கும் தெரியாதவன் கந்தன். ஞானத்துக்கும் அககண்ணுக்கும் புலப்படுவான் அவன். அதனாலோ கந்தன் மறைபொருள்ளானான். என எண்ணத் தோன்றுகின்றது



Thursday, April 7, 2011

அம்மை அப்பனின் வடிவம் இலிங்கம்

 அம்மை அப்பனின் வடிவம் இலிங்கம் அதுவே முத்திக்கு வழிவகுக்கும் வழிபாடு

 அம்மைக்கு ஒன்பது இராத்திரி அப்பனுக்கு ஒரு இராத்திரி அதிலே பிரதானமானது இலிங்கோற்பவம். அருவமான இறைவன் உருவம் பெற முன் அருஉருவம் பெறுகின்றான். அதுவே இலிங்கமாகிய சதாசிவமுர்த்தி. 
'கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புத கோலம் நீடி”  அருவமான இறைவன் அருவுருவமாகி உருவம் பெறுகின்றார். பார்வெளியில் பரந்து பிரபஞ்வமாகி நின்ற இறைவன் மானிடர் மீது காதல் கொண்டு உருவம் பெறுகின்றான். பிறப்பின் நோக்கம் அறியா மனிதரை தடுத்தாட்கொள்ள உருவம் பெறுகின்றார். இங்கு சிவஞான சக்தியும் கிரியாசக்தியும் பொருந்தி நிற்கும் நிலை. சிவலிங்கம் என்பதின் கருத்தை நோக்கும் போது “சி” என்பது நாதவடிவான சிவன். இது இலிங்கத்தின் மேல் பகுதி. “வ”என்பது விந்து வடிவான சக்தி. லிங்கத்தின் கீழ் உள்ள ஆவுடை. ”லி” என்பது லயத்தை ஒடுக்குவதை குறிக்கும். இது ஆவுடையின் மேல்பாகத்தில் உள்ள கோமுகையைக் குறிக்கும். “கம்” என்பது போதல் தோன்றுதல் என்பதைக் குறிக்கும். 
எனவே இலிங்கம் என்பது சகல அண்டசராசரங்களும் தோற்றம் பெற்று நின்று ஒடுக்க நிலைக்களமாக அமைவது. பிரபஞ்சத்தின் சகலத்திலும் சிவசக்தி இரண்டறக் கலந்திருப்பதையே குறிக்கின்றது. இதையே விஞ்ஞானம்  உலகில் உள்ள எல்லாம் அணுவாலானவை அவை நியுத்திரன் புரோத்திரன் ஆகிய அணுக்களின் சேற்கை அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது அப்படி பிரித்தாலும் அதிலும் நியுத்திரனும்இ புரோத்திரனும் இருக்கும். அவை இரண்டு சேர்ந்து இயங்கும் போது இலத்திரன் தோன்றும். இலத்திரனே சக்தியாக மாறி செயல் படுகின்றது. அதுவே சோமஸ்கந்த முகூர்த்தம் குறிக்கின்றது. சோமஸ்கந்தம் என்பது சிவசக்திகளுக்கிடையில் ஸ்கந்தப் பெருமான் வீற்றிருக்கும் முகூர்த்தம் ஆகும்.
இலிங்க வழிபாட்டின் தோற்றம் பற்றி பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. புராணங்களில் பலகதைகள் கூறப்படுகின்றது. ஆய்வுகளும் பலவாறு கூறுகின்றது. மேலை நாட்டார் இதை ஆண் உறுப்பு வழிபாடு என்றும் ஆதிவாசி வழிபாடு என்றும் கூறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் இதனை யூபஸ்தம்ப வழிபாடு தோற்றுவித்தது என்பர். இலிங்க புராணம் வாயு புராணம் கூர்ம புராணம் என்பன குறியீட்டுக் கொள்கையை எற்றுக் கொள்கின்றது.
கந்தழி வழிபாட்டையே பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆதிமனிதன் மரத்தை வழிபட்டு வருகையில் காலம் செல்ல செல்ல மரத்தின் கிளைகள் அழிந்து கொன்டு வருகையில் இறுதியில் மரத்தின் அடிப்பாம்; மிஞ்சுகையிலும் அதை வழிபட்டனர். பின்னர் அதுவும் அழிந்து போக மர அடியிலிருந்த குழியில் கற்தூணை வைத்து வழிபட்டனர். அதுவே இலிங்க வழிபாட்டுக்கு வித்திட்டது.
இலிங்கம் பண்டைக்காலத்திலே காணப்பட்டதற்கு ஹரப்பா மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட அறுநூற்றுக்கு மேற்படட் இலிங்கங்கள் சான்றுபகிர்கின்றன. அங்கு வாழ்ந்;தவர்கள் தாயத்தாக பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிவலிங்கங்கள் மூன்று வகைப்படும். அவையாவன வியக்தாவியக்த லிங்கம்இ அவ்வியக்த லிங்கம்இ வியக்த லிங்கம் எனப்படும். இதில் வியக்தாவியக்த லிங்கம் என்பது முகம் தோள் நேத்திரங்களுடன் காணப்படும் இலிங்கம். அவ்வியக்த  லிங்கம் என்பது இலிங்கமும் ஆவுடையும் காணப்படும் இலிங்கம். வியக்த  லிங்கம் என்பது எல்லா அங்கமும் வெளிப்பட தோன்றும் திருவுரு ஆகும்.
திருமூலர் திருமந்திரத்தில் இலிங்கம் தொடர்பாக குறிப்பிடுகையில். 
              “இலிங்கம தாவ தியாரும் அறியார்
            இலிங்கம தாவ தெண்டிசை யெல்லாம்
            இலிங்கம தாவ தெண்ணெண் கலையும்
            இலிங்கம தாவ எடுத்த துலகே” என்றார். அம்மையப்பனின் அடையாளம் சிவலிங்கம். அதை நுண்ணுணர்வினர் மட்டுமே அறிய முடியும். ஏனையவர் அறியார். அம்மை ஆற்றலாகவும் அப்பன் பொருளாகவும் திகழ்;வார். இதனை சூரியனும் கதிரும், பழமும் சுவையும் நெருப்பும் சூடூம், போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிறைந்திருக்கின்ற சிவனும் சக்தியும் எல்லாப் பொருட்களையும் இயந்தியக்கின்றமையினால் சிவனெனப்பட்டு சக்தி சத்தன் என்பதை ஆற்றல் ஆற்றலி என கூறி உலகை அண்டலிங்கம்  உலகசிவம் என கூறுகின்றனர். சித்தர்களுக்கு பிரபஞ்சமே இலிங்கம் தான்.                       
                    “தூய விமானமுந் தூலம தாகுமாம்
         ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம்
         பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
         ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே” கருவறையின் மேல்புறம் பருமையும் தூய்மையும் வாய்ந்த சிவலிங்கம். அகத்திலுள்ள கருவறையில் உள்ளது அருளோன்னான சதாசிவ நூண்ணிய சிவலிங்கம். பலிபீடம் ஆனேறு இவையும் சிவலிங்கம் அதாவது கோபுரம் தூலலிங்கம் கருவறை சூட்சும லிங்கம் எனவும் குறிப்பிட்டு. இலிங்கம் அமைக்கும் துணைக்கருவிகளை குறிப்பிடுகையில் “முத்துடன் மாணிக்கம் மொய்த பவளமும்ங்
         கோத்துமக் கொம்பு சலைநீறு கோமளம்
         ஆத்தன்றன் னாகம மன்ன மரிசியாம்
         ஊய்த்ததின் சாதம் பூ மண லிங்கமே” என முத்து, மாணிக்கம், பவழம்,செதுக்கிய மரக்கொம்பு, பளிங்கு, வெண்கற்கள், திருவெண்ணீறு, மரகதம், திருமந்திரம் போன்ற ஆகம அருள் நூல்கள், திருவமுது அமுது முதலிய அரிசி, இவை பத்தும்  சிவலிங்கம் செய்து வழிபட உகந்தவை. 
“துன்றுந் தயிர்நெய்பால் துய்ய மெழுகுடன்
 குன்றிய செம்பு கனலிர தஞ்சலம்
 வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
 தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே” இறுகிய தயிர், தூய நெய், பால். சாணம் அல்லது தேன்மெழுகு, தாமிரம், அக்கினி, பாதரசம், சங்கு, சுடப்பட்ட செங்கல், வில்வம், பொன், போன்ற பதினொன்றும் வழிபாட்டுக்குரியதாம் எனக்கூறுகின்றார். பிரபஞ்சமே சிவனாக வழிபடுபவர்கள் மகரிசிகள் சித்தர்கள் திருமூலர் 
“போது புனைகழல் பூமிய தாவது
    மாது புனைமுடி வானக மாவது
    நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
    ஆதி யுறநின்ற தப்பரி சாமே”  மெய் அடியார்கள் அவன் புகழை பாடி துதிப்போருக்கு அப்பனின் திருவடி பூமியாகும். திருமுடி வானமாகும். திருமேனி விசம்பாகதிகளும். என்றும்
                “ தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாந்
                திரைபொரு நீரது மஞ்சன சாலை
                வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
                கரையற்ற நந்தி கலையுந் தக்காமே” பூமி ஆவுடையார். விண் சிவலிங்கம். குடல் சிவன் நீராடும் தடாகம். மேகங்கள் சிவனின் தலையில் உள்ள கங்கை. வான் அணியும் மாலைகள். விண்மீன்கள் அவரின் உடுக்கை. ஏட்டுத்திசைகளும் சிவனுடைய ஆடைகள். கரை நந்தி இவ்வாறு அண்ட இலிங்கம் பற்றி குறிப்பிடுகின்றார் திருமூலர். இவ்வாறு இயற்கையை அனுசரித்தே சித்தர்கள் வழிபாடு அமைந்திருந்தது. அருனகிரி நாதர் திருப்புகளில் “நாத விந்துகள் ஆதி நமோ நம
      வேத மந்திர சோரூபா நமோ நம .....”நாதம் விந்து இவை இரண்டும் உருவாக்கப்பட்டவை அல்ல அவை ஆதியில் இருந்தவை அதுபோல வேத மந்திங்களும் இருந்தவை தான் அருவமான இறைவன் முதலில் ஒளியாக வெளிப்பட்டான் பின் அருஉருவாகி பக்தனை இரச்சிக்க உருவமானான். அவன் ஒலி வடிவில் வேதமந்திரமாக இருந்தான். வேத மந்திரங்கள் மகரிசிகள் சித்தர்களின் ஞானத்துக்கே புலப்பட்டு உலகுக்கு மனிட விடுதலைக்கு உபதேசிக்கப்பட்டது. காயத்திரி மந்திரம் விசுவாமித்திர மகரி~pசி மூலமே உலகுக்கு கொடுக்கப்பட்டது. “மந்திரங்களில் நான் காயத்திரி” என கீதையில் கண்ணன் கூறுகின்றார். காயத்தை திரியாக்கி உலகுக்கு ஒளிபரப்பும் மந்திரம் அது. ஆக இருளை போக்கி அக ஒளியை ஒளிரச் செய்யும். அகஒளி பெற்றாலே அகஇருள் நீங்கும்.
 மானிடருடைய உடலை பிண்டலிங்கம் லிங்கமாக குறிப்பிடுகின்றார் திருமூலர்
. “மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
    மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
    மானுட ராக்கை வடிவு சதாசிவம்
    மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.” சிவபெருமான் மக்கள் வடிவினன். இருதய தானத்தில் சிற் அம்பலத்தில் திரு நடமாடுகின்றான். ஆக்ஞ்யில் சதாசிவனாக வீற்றிருந்து செயல்படுகின்றான். மூலாதாரத்தில் பிரணவமாகவும் சுவஸ்~pட்டானத்தில் படைபுக்குரிய பிரம்மாவாகவும் மணிப்பூரகத்தில் காத்தலுக்கான விஸ்ணுவும். அனாகதத்தில் அழித்தலுக்கான உருத்திரனும் விசுத்தியில் மறைத்தலுக்கான பரமேஸ்வரனும் ஆக்ஞ்ஞாவில் அருளளுக்கான சதாசிவனும் இருந்தருளுகின்றனர். உடல் என்னும் வாகனத்தில் அவர் உலாவருகின்றார்.  உடல் திரிபுரங்களை எரிக இறைவன் வந்த தேர். நம்முள் இருந்தே வினைப்பயனை அனுபவிக்க வைத்து அதன் விழைவை உணரவைத்து அதற்கான காரணத்தை அறியவைத்து அதிலிருந்து விடுதலை அளிக்கின்றான். அதை மானிடன் உணரவில்லை.


சதாசிவ லிங்கம் பற்றி திருமூலர் குறிப்பிடுகையில்
 “கூடிய பாதம் இரண்டும் படிமிசை
  பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்
  தேடு முகம்ஐந்து செங்கணின் மூவைந்து
  நாடுமஞ் சதாசிவ நல்லொளி முத்தே”
ஆரூயிர்கள் அன்பினால் கூடி இன்புறும் பொருட்டு அமைந்தது. இரு திருவடி புகழ்ந்து கூறப்பட்ட திருவடி பத்து. விரிந்தெழுந்து நாடும் திருமுகங்கள் ஐந்து. ஒளிதரும் கண்கள் பதினைந்து. இவை அனைத்தையும் கொண்டு விளங்கும் சதாசிவ கடவுள் நல்ல திருவருள் ஒளியாகிய முத்தாகும். என்று சதாசிவலிங்கம் பற்றி கூறுகின்றார். இதுவே உலக முதற் சிவம் என்று குறிப்பிடுகின்றார். மானிடனின் தேவை அறிந்தே அருவமானவன் அருவுருப் பெற்று உரு பெறுகின்றான். அதை அனுபவித்து இன்பம் பெறவே அதை மானிடர் அறிந்து அன்பால் அன்பு கொண்டு “காதலாகி கசிந்து கண்ணீர் மல்க” வேண்டுமென்றும் “அத்தன் ஆனந்தன் அமுதனென்றுறள்@றி” இதனை மாணிக்கவாசகப் பெருமான் மிக அழகாக திருவாககத்தில் பாடியுள்ளார். கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலும் இறைவன் பால் அவர் கொண்ட அன்பு புலப்படுத்தப்படுகின்றது. இதங்கு அறுபத்தி நான்கு நாயன்மார்களும் விதிவிலக்கல்ல.
“தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
 தன்மேனி தானுஞ் சதாசிவ மாய்நிற்குந்
 தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
 தன்மேனி தானாகுந் தற்பரந் தானே” ஆருயிர்களின் உடம்புகள் சிவலிங்கம் என்றும் அச்சிவலிங்கத்தின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பது சதாசிவமாகும். உடம்பே தனி முதல் சிவன். உடம்பே சிவன் பேரின்பம். உடம்பே சிவ மெய்ப் பொருளாகும். உடம்பே ஒப்பில் முழுமுதல். இத் திருமந்திரம் ஆருயிரின் இடையறாச் சிவனைப்பால் அவ்வுடம்பு, உள்ளம்,உ ணர்வு, உணர்விலுளதாம் இன்பம் எல்லாம் சிவனேயாகும். அகலிங்கம் பற்றி இங்கு குறிப்பிடப்படுகின்றது. எமது உடல் சிவலிங்கம். உள்ளுற இருப்பது பரம்பொருள் ஆகும். மகரி~pகளுக்கும் சித்தர்களுக்கும் உடல் ஆலயம் உயிர் பரம்பொருள் செபம் தியானம் உள்ளுறையும் இறைவனுக்கான பூசை வழிபாடாகும். அவர்கள் நடமாடும் ஆலயங்கள். அவர்கள் வழியில் சென்று நாமும் ஆலயமாகுவோம்.
                 “இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமும்
        இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்
        இலிங்கத்துள் வட்டம் நிறையும் உகாரம்
        இலிங்க மகார நிறைவிந்து நாதமே”  சிவலிங்கத்தின் அடிப்பகுதியாகிய பீடம் ஓங்கார வடிவமாகும். அப் பீடத்தினுள் மறைந்திருக்கும் லிங்கத்தின் நடுப் பகுதி கண்டம் மாகும். அது மகாரமாகும் சிவலிங்கத்துடன் பொருந்தியிருக்கும் வட்டப் பகுதி உகாரம் மாகும். சிவலிங்கத்தின் மேல் பகுதி மூன்று வகைப்படும். அவை, கீழிருந்து மேல் நோக்கி அகாரம், விந்து, நாதம் மாகும். இலிங்கத்தின் அடிப்பாகம் பிரணவம். கண்டம் அதோமுகம் என்று கூறிப்பிடுகின்றார். எனவே லிங்கத்தில் நாதம் விந்து அகாரம் உகாரம் மகாரம் இவை ஐந்தும் பொருந்தி ஐந்தொழிலுக்கு காரணமாகின்றது. 






ஆத்துமலிங்கம் பற்றி திருமூலர் குறிப்பிடுகையில் அதாவது உயிர்ச்சிவம்; எனகுறிப்பிடுகின்றார்.
  “அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
            உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
            அகார வுகாரம் இரண்டு மறியில் 
            அகார வுகாரம் இலிங்கம் தாமே” உலகு உடல் உயிர் என்பவற்றுக்கு தாங்கும் நிலைக்களமாக அமைபவன் சிவன். அதனால் அகாரத்தால் குறிக்கப் பெறும். அகாரமுதலாய் அனைத்துமாய் நிற்கும். அவை இயங்குமாறு இயைந்திருக்கும் திருவருள் ஆற்றல் சிவை அவ்வியக்கம் உயிற்பு இவ்வடையாளம் உகாரம். அகார உகாரம் இரண்டும் இவ் உலகான சக்தியும் சிவனுமாகும். இதையுணர்தால் அகார உகாரம் சிவலிங்கம். அகார உகார சேர்கையே உலக பொருட்கள் எல்லாம் உயிர் பெறு கின்றன. பிரபஞ்ச உற்பத்திக்கு கரணகாரியம் அவன்தான்.
“சக்தி சிவமாம் இலிங்கமே தாபரஞ்
           சக்தி சிவமாம் இலிங்கமே சங்கமஞ்
           சக்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவஞ்
           சக்தி சிவமாகும் தாபரந் தானே” திருக் கோவிலில் இருப்பது தாபரலிங்கம். மெய் அடியாராகிய திருக்கோலங்களும் சக்தி சிவயாகும் போது சங்மலிங்கம். சக்தி சிவம் இரண்டும் இணைத்து ஓதும் போது சதாசிவம் மாகும் போது சதாசிவலிங்கமாகும். தானே தனி முழு முதல் சக்தி சிவம் இரண்டும் இணைந்து உலமே சக்திசிவ உருவங்களாம். 
                       “விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம்
           விந்துவ தேபீட நாத மிலிங்கமாம்
           அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
           வந்த கருவைந்துமஞ் செய்யும் மவையைந்தே”  ஒளியும் ஒலியுமான விந்தும் நாதமும் சிவலிங்கம். விந்து பீடம் நாதம் இலிங்கம் இவை இரண்டையும் சார்புக் கடவுளாககக் கொண்டு  அருலோன்இ ஆண்டான்இ அரன்இ அரிஇ அயன். ஆகிய பஞ்ச கிருத்திய கடவுள்கள் தோன்றினர். அவர்கள் அருளால், மறைத்தல், துடைத்தல்,  காத்தல், படைத்தல். போன்ற  ஐந்தொழில்களை நிகழ்தினர். “சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா
    சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுமஞ் 
    சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ்
    சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே” சத்தி வடிவாகவுள்ள சிவலிங்க பீடம் ஆவிநிலையாகும். களுத்தினை ஒத்த பீடத்தின் குழி திருவடி உணர்வான சிவஞானமாகும். மேலுள்ள லிங்கம் சிவமெய்ப் பொருளாகும். ஏவற்றுக்கும் உயிருக்குயிராம் பேராவி (பரமான்மா) சதாசிவமாகும். இங்கு சீவான்மாவுக்கும் பரமான்மாவுக்கும இடையிலான தொடர்பு எடுத்துக்காட்டப்படுகின்றது.
ஞான லிங்கம் என்னும் உணர்வுச் சிவம் பற்றிக் குறிப்பிடுகையில்
“நாலான கீழ துரவ நடுநிற்க
மேலான நான்கு மருவு மிகநாப்பண்
நாலான ஒன்று மருவுரு நண்ணலாற்
பாலா மிவையாம் பரமசிவன் தானே” இங்கு மேலான நான்கும் அருவம் அவை ஒளி ஒலி(ஓசை) அன்னை அத்தன் ( விந்து நாதம் சத்தி சிவம்) கீழான நான்கும் உருவம் அவை அயன் அரி அரன் ஈசன் இவை இரண்டுக்கும் நடுவில் அருவுருவான சதாசிவன் அதுவே இலிங்க வடிவம். இவ் ஒன்பது வடிவமும் பரசிவம்.  
சதாசிவ கடவுளை திருமூலர் குறிப்பிடுகையில்
 “வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
 ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
 காண்டகை யானொடுங் கன்னி யுணரினும்
 மூண்டகை மாறினும் ஒன்றது வாமே” என்றார். இதிலிருந்து  இருவினை நீங்கியற சதாசிவக்கடவுளை  திங்களாகிய சந்திரனும் ஞாயிறு ஆன சூரியனும் அவருடைய திருக்கண்கள் இதனால் அவர் உலகை அளக்கின்றார். அவரின் பிரிவின்றி நிற்கும் திவருள் ஆற்றல் மனோன்மன் சத்தி யாகும். இவ்வன்னையும் அத்தனும்  எத்திருவுருவை வழிட்டாலும் வேறுருவில் ஓர்ருடம்பாய் திகழ்வர். இதனால் எல்லாமே சதாசிவ வழிபாடாகும்.
ஞானலிங்கம் பற்றி திருமூலர் குறிப்பிடுகையில் 
   “கொழுந்தினைக் காணிற் குவலயந் தோன்றும்
    எழுந்திடுங் காணில் இருக்கலு மாகும்
    பரந்திடங் காணிற் பார்பதி மேலே
    திரண்டெழக் கண்டவன் சிந்தையுள் ளானே” முற்றறிவுப் பெருங்குறி சிவக்கொழுந்து. அது அருளால் காணும் தன்மை. இது ஞானலிங்கம்.  இதை பெற்றவனுக்கு உலகவுண்மை தெற்றென விளங்கும். இவனிடம் சிவபரம் பொருள் அறிவாற்றலாகிய திருவருளாய் விற்றிருப்பான். 
       “சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
    சத்தி சிவமுமாஞ் சிவன்சத் தியுமாகுஞ்
    சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
    சத்திதான் என்றுஞ் சமைந்துரு வாகும்”  உலகுடல்களாகிய மாயாகாரியப் பொருட்கள் சிவன் சத்தியுடன் பொருந்தி எளிதாகக் காரியப்படுத்தப்படுகின்றன. ஆவ்வருட் செயல் அருட்செயல். ஓன்று விட்டு ஒன்று இல்லை. ஆனால் எல்லாப் பொருட்களையும் தங்கும் நிலைக்களம் சத்தியே. தூரணி அண்டங்கள் எல்லாமும் அவைகளில் உள்ள இயங்கியற் பொருட்கள் எல்லாமும் தாபரலிங்கம் என்ற ஞானலிங்கம் இதுவே உருவ உலகம் மாகும். 
சிவலிங்கம் மான சிவகுரு பற்றி திருமூலர் குறிப்பிடுகையில்
“ மலர்ந்த வலன்மால் உருத்திரன் மகேசன்
  பலந்தரு ஐம்முகன் பரவிந்து நாதம்
  நலம்தருஞ் சத்தி சிவன்வடி வகிப்
  பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே”  திருமாலின் உந்தியில் உதித்த பிம்மா திருமால் உருத்திரன் மகேசன் சதாசிவன் ஆகிய ஐவரும் அதற்கு மேலான விந்து நாதம் சத்தி சிவம் ஆகிய வடிவங்களும் அவ்அப் பயனை அளிக்கும் சிவலிங்கமே என்று குறிப்பிடுகின்றார். 
இலிங்க வழிபாடின் பலன்பற்றி குறிப்பிடுகையில் 
 “இருந்த மனத்தை இசைய இருத்திப்
  பொருந்தி இலிங்க வழியது போக்கி
  திருந்திய காமன் செயலழிந்து அங்கண்
  அருதவ யோகங் கொறுக்கை அமர்ததே” மனத்தை ஒருநிலைப்படுத்தி இலிங்க வழிபாட்டில் இருத்திய மனத்தை தடுக்கமுனைந்த காமனை செயல்லிளக்கச் செய்ததுடன் உருவவையும் இழக்கச் செய்தவர் சிவபெருமான். காமனை வென்றவர்கள் சிவயோகிகள். அவர்கள் சிவஞானத்தை அடைந்து சிவனானார்கள். அதனால் அவர்கள் சித்தன் ஆனார்கள். சித்தம் தெளிந்ததால் அத்தனானார்கள். இதனால் புத்தி சிற்றின்பம் சித்தம் பேரின்பம் எனக் குறிப்பிடப்படுகின்றது. புத்தி விளிப்படைவதனாலேயே பேரின்பத்துக்கு செல்லமுடியும். அதுவே சித்தத்தெளிவு. சிற்றின்பத்துக்கு காரணம் காமன். அவன் அழிய பிராத்தம் வேண்டும். இத்திருவிளையாடலை இறைவன் நடாத்திய தலம் திருக்கொறுக்கைத் திருத்தலம். 


இலிங்கம் தொடர்பாக அபிதானசிந்தாமணி கூறிப்பிடுகையில். ஒலி முதலிய பலன்களுக்கும் மனம் வாக்குகளுக்குமெட்டாத அளவில்லாத பேரொலியாய் தமக்கு மேல நாயகமில்லாதாய் அருவமாய் குணரகிதமாய் அநந்தகுணமணியாய் வண்ணமற்றதாய் நாசரகிதமாய்சசர்வசகத்தும் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் எதுவாய் அவ்வியக்தமெனப் பழமறை பகர்வதாகி ஆன்மாக்களின் தியானபாவனா நிமித்தம் நிட்களசகளத்திருவுருக் கொண்ட நிலையாம். லிங்கத்தின் பீடம் சக்தியுரு இலிங்கம் சிவவுரு ஆகவே இலிங்கம் ஞானசக்தியுரு. பீடம் கிரியா சக்தி வடிவம். ஆதலினால் இவ்விரண்டும் சிவனதிஷ்டிக்குந் தேகம். இது திரிமூர்த்தி ரூபமும் ஆம். சிவலிங்கத்தின் விருத்தமே ருத்திரபாகமாம். பீடத்தின் அதோபாத்தின் அடிநான்கு மூலை பிரம பாகம் நடுவின் எட்டு மூலை விஷ்ணு பாகம் இது பிரணவசுரூபம். இலிங்கம் என்பது இலிங்+கம் என பிரிக்கப்பட்டு “இலிங்” என்பது லயம் எனறும் “கம்” என்பது தோற்றம் எனவும் இலிங்கம் என்பது சிருட்டியாதி பஞ்சகிர்த்தியத்தைச் செய்யுமீசுரப்பிரபாவம். இலிங்கம்.
இவ் இலிங்கம் ஆட்யம், அநாட்யம் இசுரேட்யம் இஸர்லசமம் என நான்கு விதம். இது சலம், அசலம் என இருவிதமாம் பின் அவை வியத்தம், வ்யத்தாவியக்தம், அவ்யக்தம் என மூன்று வகைப்படும். அவற்றுள் சகளமான பிரதிமாவுரு வியத்தம் சகளநிஷ்களம் வ்யத்தாவியத்தம் நிஷ்களம் அவ்யக்தம் கிருகங்களில் பூசிப்பது சலம் எனவும். ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டது அசலம் எனவும் கூறப்படும். அசலம் ஸ்திரலிங்கம் சுயம்புலிங்கம் தைவிகம் தேவர்களாற் பூசிக்கப்பட்டது. காணபம் கணேசரால் பூசிக்கப்பட்டது. ஆரிஷம் ருஷிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. மனுஷயம் மனுஷ்ரால் ஸ்தாபிக்கப்பட்டது. என ஐவகைப்படும். பின்னும் ஸ்படிகலிங்கம்  இரத்னாதிலிங்கங்களும் உண்டு. பிரம்பாகம் நபும்ஸம் எனவும். விஷ்ணுபாகம் ஸ்திரிலிங்கமெனவும். ருத்திரபாகம் பும்லிங்கமெனவும். கூறும். ஆட்யலிங்கத்தின் சிரம் அர்த்தசந்திர வடிவமாகவும். அநாட்யலிங்கத்தின் சிரம் வெள்ளரிப்பழ வடிலமாகவும் சுரேட்யலிங்கத்தின் சிரம் கோழியின் முட்டை போலவும் சர்வசமலிங்கத்தின் சிரம் குடைவடிவமாகவும் கூறப்படுகின்றது.
அர்த்தசந்திராதி நால்வகை வடிவும் தனித்தனி நன்னான்கு விதமதகப் பேதப்படும். ஆட்யலிங்கத்தில்1001 இலிங்கஞ் செய்ய வேண்டும். சுரேட்யலிங்கத்தில் 108 இலிங்கஞ் செய்ய வேண்டும். சர்வசமலிங்கத்தில் 5,6 முதலிய முகங்களுள்ள இலிங்கங்கம் செய்ய வேண்டும். ஆட்யாநாட்ய சுரேட்ய லிங்கங்களில் முகலிங்கமஞ்செயக்கூடாது. முகலிங்கத்தில் ஈசானாதியைந்து முகங்களும்மாகும். இலிங்கத்தின் மத்தியில் ஈசானம் கிழக்கே தற்புருடம் தெற்கே அகோரம் வடக்கே வாமதேவம் மேற்கே சத்யோசாதமும் இருக்வேண்டும். நான்குமுக இலிங்மாயின் ஈசானதவிரச் செய்யவேண்டும். இரு முகலிங்கத்தில் தற்புருடமும் சத்யோசாதமும் செய்யவேண்டும்.  ஒரு முகலிங்கத்தில் தற்புருடம் மாத்திரம் செய்யவேண்டும். 
 இலிங்களில் ஒருவகை பாணலிங்கமாகும். இது எப்போதும் ஈஸ்வர திட்டமாயிருக்கும். இவ் லிங்கம்கள் அரைக்கால் அங்குலம் முதல் ஒரு கஸ்தப்பிரமாண முள்ளதாகவும். பக்குவமான நாவல் பழத்தின் நிறம் போலவும்,தேனின் நிறம் போலவும், வண்டின் நிறமாகவும்,  காசுக்கல் நிறமாகவும், நீல வர்ணமாகவும், தன்னிறமான பீடங்கள் உள்ளதாகவும்,கொவ்வைக் கணினிறமாகவும், பச்சைனிறமாகவும், திக்குப்பாலகர்கணிறபாகவும், பசுவின்முலை போலவும், கோழியின் முட்டை போலவும், கண்ணாடி போல பழபழப் புள்ளதாகவும் இருக்கும். இந்த லிங்கத்தின் வரலாறை நோக்குகின்றபோது பாணனென்னும் அசுரன் சிவனை நோக்கி கடும்தவம் செய்ய அதை ஏற்று கெண்டு இறைவன் மகிழ்சியால் பூரிப்படைந்து பல வகைப்பட்ட பதினான்குகோடி இலிங்கம்கள் கொடுத்தார். அவற்றை பூசித்து முடிவில் லிங்காசலத்திலும் காளிகாகர்த்தத்திலும் ஸ்ரீநாகத்திலும் கன்னிகாச்ரமத்திலும் நேர்பாளத்திலும் மகேந்திரத்திலும் அமரேச்வரத்திலும்  மற்றும் நதிமத்தியிலும் பர்வதமத்திலும் எழுந்தருளச் செய்தான். அவை சுயம்பு லிங்கமென காமிகாதி ஆகமங்களில் கூறப்படும். அதற்கு பீடம் மிருத்து லோஹம் நல்விருசம் இரத்னம் என்பவற்றால் செய்யப்பட வேண்டும். பீட நிறம் லிங்கத்தையொத்ததாக அமைய வேண்டும். 
அட்டதிக்குப் பாலகர்களால் பூசிக்கப்பட்ட லிங்கங்களும் உண்டு. இந்திரனால் பூசிக்கப்பட்ட லிங்கங்கம் இந்திர லிங்கங்கம் எனப்படும். இது பசும் பொன்னிறமாகவும் அறுகோணமாயும் வச்சாரங்கிதமாயும்  இருக்கும். இதை 
வழிபட்டால் ராஜ்யசம்பத்தைத் தரும் ஆக்னேயலிங்கம் இது அகநியால் பூசிக்கப்பட்டது. இது தாம்பிரவர்ணமாய்ச் சத்தியங்கிதமாய் உஷ்ணபர்சமுள்ளதாக இருக்கும். இதை வழிபட்டால் தேஜொவிருத்தியைக் கொடுக்கும் . யாம்யலிங்கம் இது யமதர்மராஐவால்; பூசிக்கப்பட்டது. தண்டாகாரமாய் அல்லது தண்டாங்கிதமாய் அவ்யக்தமாய் முகுத்த நேரத்தில் தாபிக்கப்படும். இவ்லிங்கம் கருமை நிறமாக இருக்கும். இவ்லிங்கத்தை வழிபட்டால் சத்துருநாசம் ஏற்படும். நைருதலிங்கம் இவ்லிங்கம் நிருதியாற் பூசிக்கப்பட்டது. இது  கட்கநிறமதய்க் கட்காங்கிதமாய் புகைவருணமாகவிருக்கும். இவ்லிங்கத்தை வழிபட்டால் சத்துருnஐயம் கிடைக்கும். வருணலிங்கம் இவ்லிங்கம் வருணனால் வழிபடப்பட்டது. வட்டமாய் பாசாங்கிதமாய்ச் சுக்கிலவர்ணமகயிருக்கும். அதை சலத்தில் விட்டால் அது இனிமையாக நிர்மலமாகவிருக்கும். வாயவ்யலிங்கம் தூமவருணமாய் வஜாங்கிதமாயிருக்கும். அதன் சிரசில்  பஞ்சை வைத்தால் காற்றிலாது அசையும். அது உச்சாடன முதலிய கர்மவி~ய பூசைக்கு உகந்ததாம். கௌபேரலிங்கம் கதாகாரமல்லாது கதாங்கிதமாகவிருக்கும். நடுவில் பொன்னிறமாகவிருக்கும்  அதை இரவில் பயிர் நடுவில் வைத்தால் பயிர் விருத்தியாகும். ஈசானலிங்கம் சூலநிறம் அல்லது சூலாங்கிதமாய்ப் பனி முல்லை சந்திரனை ஒத்த நிறங்களாயிருக்கும். அது சகல சித்திகளையும் தரும்.
வைணவலிங்கமானது சங்கு சக்கரம் கதை தாமரை ஸ்ரீவத்ஸ சின்னங்களும் மச்ச கூர்ம வராக சின்னங்கள் உள்ளதாக இருக்கும். இது சர்வாபிஷ்டங்களையும் கொடுக்கும். பிரம்மலிங்கம் பத்மாங்கிதமாய் பத்மவருணமாய் அசஷ்மாலை கமண்டலம் இவற்றால் அலங்கரிக்கப்பட்டதாக மாலை தண்டம் அவற்றின் குறியுள்ளதாயிருக்கும். இவ்லிங்கத்தை வழிபட்டால் புத்ராதிவிருத்தியைக் கொடுக்கும். இவ் இலிங்கங்கள் பொருட்களுடன் இருக்கில் கனமாகவும் வெள்ளத்தில் விடின் மறுபடியும் கிடைக்கக்கூடியதாகவிருக்கும். இவையே பூசிக்கத்தகுந்தவை. இந்த கோடி பாணலிங்கங்கள் அமரேச்வரம், மகேந்திரபர்வதம், நேபாளபர்வதம், கன்யாதீர்த்தம், அதையடுத்து ஆச்சிரமம்  இவைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கோடியும் ஸ்ரீசைலம்இலிங்கசைலம், காளிகாபர்த்தம்,முதலிய மூன்று தலங்களிலும் மும்மூன்று கோடியாக ஒன்பது கோடிஆக பதினான்கு கோடியாகும்.
பஞ்ச பூதலிங்கங்களாக காஞ்சியில் பிரதிவி லிங்கமும், திருவானைக்காவில் அப்பு லிங்கமும், திருவண்ணாமலையில் தேயுலிங்கம், சீகாளத்தியில் வாயுலிங்கம்,சிதம்பரத்தில் ஆகாசலிங்கமும் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. பாதரசத்தால் சிவலிங்கம் செய்து பூசித்தால் பஞ்சமகாபவங்களை போக்க முடியும். 
                           சுயம்புலிங்கங்கள் அனந்தருடைய  சிகரம் எனவும்  அதை அசைத்ததால் காலாக்கினிருத்திரருடைய கோபத்துக்காளாகி தீப்பொறி தோன்றின. அவை மூன்றாகி ஜலத்தில் நீர்மூலலிங்கமாகவும்,பூமியில் சமூலலிங்கமாக மலைகளாகவும், பிருதிவிலிங்கமாக மண்னிலும் தோன்றிதாகவும் கூறப்படுகின்றனர்;.
இலிங்கத்தை வழிபடுவதனால் உண்டாகும் பலன் தொடர்பாக ஸ்ரீ ஆதிசங்கர பகவத்தாள் லிங்காஸ்டகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். நான்முகன், திருமால் பூஜை செய்த லிங்கம். தூய சொல் புகழ் பெறும் பேரெழில் லிங்கம். பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம். வழி வழியாக முனிவர்கள் வழிபடும் லிங்கம். காமனை எரித்த கருணாகர லிங்கம். இராவனன் கருவம்மடக்கிய லிங்கம். திவ்விய மணம் பல கமழ்கின்ற லிங்கம். சித்தம் தெளிவிற்கும் சித்தர்கள் லிங்கம். தேவர்களும் அரசர்களும் வணங்கும் லிங்கம். கணகமும் மகாமணி பூஷித லிங்கம். படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம். தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம். குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம். பங்கைய மலர்களைச் சூடிடும் லிங்கம். வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம். தேவர்கள் கணங்கள் போற்றிடும் லிங்கம். கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம். எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம். எல்லாப் பிறவிக்கும் காரண லிங்கம். அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம். வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம். வில்வமதை மலர் எனக் கொள்ளும் லிங்கம். தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம். வணங்கம் ஏற்ற சதாசிவ லிங்கம். என இலிங்கத்தின் பெருமையையும்  வழிபடுவதினால் ஏற்படும் பலனையும் குறித்துரைத்துள்ளார்.       
எனவே இலிங்கம் தொடர்பாக திருமந்திரம், அபிதானசிந்தாமண, இந்து கலைக்களஞ்சியம் ,அபிதானகோசம், போன்ற நூல்களை ஆராய்ந்து உயித்தறியும் போதும் எமது ஆன்மீக அனுபவத்திலும் அவனின்றி அணுவும் அசையாது அவனே முதல் காரணம். அவன் மானிடப் பிறவி களைய எடுத்த வடிவம் இலிங்கமே என்பது தெளிவு.