![]() |
ஆலயமும் கிணறு அமைந்த பிரதேசமும் |

![]() |
அரச மரம் |
நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்று தியானத்தில் இருப்பது வழமை. பூசை முடிந்து சில நிமிடநேரத்தின் பின் தான் நான் தியானத்தை விட்டு எழுவேன் அது வரை ஐயா காத்திருப்பார். பின்னர் ஞான அனுபவங்களை பகிர்வது வழமையாகிற்று. ஒரு நாள் தியானத்தை விட்டு எழுந்த போது ஐயா கேட்டார் இவ்வாலயத்தில் நான் இருக்கும் போது மூன்று விடயங்கள் நிறைவேறவேண்டும். அப்போது நான் திகைத்துப் போனேன். ஐயா நீங்கள் கண்ணனுடன் உரையாடுபவராச்சே என்றேன். அதற்கு அவர் ஒன்றும் பேசாது மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்டார் அப்போது நான் என்ன வென்று கேட்ட போது என்னுடைய காலத்தில் முதலில் இவ் ஆலயத்தில் பழமையாக இருக்கின்ற கருடமண்;டபம் புதுப் பொலிவு பெறுமா? அடுத்து முன்னூ று வருடங்களாக எனது மூதாதையர் தேடியும் கண்டுபிடிக்காத அபிசேஷகத்துக்கு தேவையான சுத்த நீர்க்கிணறு கண்டுபிடிக்கப்படுமா? அடுத்தது புனராவர்த்தன மகா கும்பாவிசேஷகம் ஒன்று நடைபெறுமா? என்று கேட்டார். அதற்கு என்னுள்ளி ருந்து உள்ளுணவு உணர்தியது அது நடக்குமென அதைக்கூறினேன். ஐயா சந்தோசமடைந்தார். அவை அனைத்தும் ஐயாவின் காலத்தில் ஐயனை கருவியாகப் பயன்படுத்தி நிறைவேறியது. அது அவனின் திருவிளையாடல்.
அவ் ஆலயத்துக்கு செல்லத் தொடங்கிய பின் மூன்று வாரத்தின் பின் சுவாமி ஸ்ரீ சத்திய சாய் பாபா வின் அபூர்வமான காட்சி கிடைத்தது. அதன் பின்னர் பின் மூன்று வாரத்தின் பின் குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் அபூர்வமான காட்சி கிடைத்தது. இது போன்று பல சித்தர்களின் காட்சிகள் கிடைத்தது. இக் காட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்தேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது இருவரும் மகா விஸ்ணுவின் அவதாரம் என்பது. என்னை ஆன்மீக நாட்டத்தில் ஈடுபடகாரணமாக அமைந்தது குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் வாழ்கை வரலாறு அடங்கிய அமுதமொழி இது அண்ணாவால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனக்கொரு காலத்தில் மனக்குழப்பமும் அமைதியின்மையும் காணப்பட்டது.(1990இல்) இதை உணர்ந்த எனது தந்தை அமைதிக்கு ஒரேவழி குருதேவரின் அமுதமொழி தான் என்று என்னிடம் கையளித்தார். எனது தந்தை குருதேவரின் வழிநிற்பவர். உண்மையில் அது தான் மன அமைதியையும் உண்மையான ஆன்மீகப்பாதைக்கு அடிகோலியது எனலாம். அதனால் தானோ குருதேவரின் திவ்யதரிசனம் கிட்டியதோ என்று எண்ணினேன்.
இவ்வாலயத்தின் நடைபெற்ற அதிசயங்களை ஐயா என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவற்றில் சில கொக்கட்டிச்சேலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்துக்கு பூசைக்காக திமிலதீவிலிருந்து தனது மூதாதையினர் முதலையை மந்திரசத்தியை கொண்டு அழைத்து அதில் ஏறி சென்று திரும்பி விடுவதாக கூறினார். அதிலிருந்து தெரிகின்றது கண்ணனுக்கு பூசை செய்த பரம்பரையினர் மந்திரசத்தி உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாலயம் அக்காலத்திலிருந்து அரவம் தீண்டியவர்களை காப்பதிலும் சித்தசுவாதீனமுற்றோரை சுயநிலைக்கு கொண்டு வருவதற்கும் பில்லிசூன்யத்தினால் ஏற்படும் தீயவிளைவுகளிலிருந்து காப்பது போன்ற விடயங்களுக்கு இவ்வாலயம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கானப்பட்டது.
![]() |
கண்ணின் கருவறை |
இது மட்டும் அல்ல இவ் ஆலயத்துக்குள் அதிகாலைகளிலும் விசேடகாலங்களிலும் பிரபஞ்சத்தின் ஒளி வந்து இறங்குவது வழமை இதை பலரும் அவதானித்துள்ளனர் எமது பகுதி போர்சூழல் கானப்பட்ட போது அவ்வாலயம் பாதுபாப்பு படை வசம் இருந்தது. அக்காலத்தில் பூசைக்காக ஐயா மட்டும் அனுமதிக்கப்படுவாராம். ஒரு நாள் மட்டக்களப்பிலுள் டச்சுக் கோட்டையில் அதி காலையில் பாதுகாப்பில் ஈடுபட்ட படையினர் இதை அவதானித்து படைமுகாம் தாக்கப்படுவதாக எண்ணி அபாய ஒலி விளிப்பூட்டி தொடர்பு கொண்ட போது எதுவும் நடைபெறவில்லை பின்னர் உண்மையை அறிந்து ஆலயப்பகுதியை வழிபாட்டுக்கு அனுமதித்து படையினர் ஒதுங்கிக்கொண்டனராம். இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் நிகளுகின்றது.
![]() |
திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள். |

வாரத்தில் வெள்ளி சனி ஆகிய தினங்களில் மட்டுமே பூசை நடைபெறுகின்றது. அதில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ மகாவிஸ்ணுவுக்கும் சனிக் கிழமை சனிஸ்வரருக்கும் பூசை நடைபெறுகின்றது. இங்கு சனிஸ்வரருக்கு தனியான சன்நிதியுள்ளது மட்டக்களப்பில் இங்கு தான் இது தனிச்சிறப்பாகும்.
![]() |
கண்டுபிடித்த கிணறு |
![]() |
கண்டுபிடித்த கிணறு |
![]() |
அரசமரமும் ஆலயமும் |
No comments:
Post a Comment