Sunday, February 27, 2011
Thursday, February 24, 2011
எனது ஆன்மீக சாதனைக்கு தளமமைத்த மட்டக்களப்பில் உள்ள திமிலதீவு மகாவிஸ்னு கோயில் அது சித்தர் கோயில்
ஆலயமும் கிணறு அமைந்த பிரதேசமும் |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் திமிலதீவில் அமைந்துள்ளது மகாவிஸ்னு கோயில் அது சித்தர் கோயில். அது இற்றைக்கு முன்நூறு வருடங்களுக்கு முன் அக்கோயிலுக்கு முன்னுள்ள அரச மரத்தின் கீழ்; ஓருவர் விநாயகர் வழிபாடு செய்து வந்தார். அவருக்கு உதவியாக அந்த கிராமத்தைச்சேந்தவர் ஒருவரும் இருந்தார். திடீரென அவர் இறந்து போனார். அவ்வேளை மரத்தின்கீழ்; பூசை செய்தவரையும் காணவில்லை. இறந்தவரை அடக்க ஏற்பாடுகள் செய்து கொன்டிருந்த வேளை இறந்தவர் எழுந்துவிட்டார் பின் உடனடியாக அவர் மரத்தின் கீழ்; மகாவிஸ்னுவுக்கு இங்கு ஆலயம் அமைக்க பணிகக்ப்படடு;ள்ளதாக கூறி அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறி இறுதிகிரியைக்காக ஏற்பாடு செய்ய வைத்திருந்த கம்பு தடிகளைக் கொண்டு ஆலயத்தை அமைத்தார். அந்த இன்றுள்ள திமிலதீவு மகாவிஸ்னு கோயில். பிற்காலத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த அமரர் சின்னையா விதானையார் குடும்பத்தைச் சேர்ந்த அமரர் வடிவேல் அவர்களின் மகன் திரு.வ.மகேந்திரன் தந்போது பூசகரகவுள்ளார். மறைந்தவர் சுவாமி சங்குபாலயோகீஸ்வரர்.
அரச மரம் |
நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்று தியானத்தில் இருப்பது வழமை. பூசை முடிந்து சில நிமிடநேரத்தின் பின் தான் நான் தியானத்தை விட்டு எழுவேன் அது வரை ஐயா காத்திருப்பார். பின்னர் ஞான அனுபவங்களை பகிர்வது வழமையாகிற்று. ஒரு நாள் தியானத்தை விட்டு எழுந்த போது ஐயா கேட்டார் இவ்வாலயத்தில் நான் இருக்கும் போது மூன்று விடயங்கள் நிறைவேறவேண்டும். அப்போது நான் திகைத்துப் போனேன். ஐயா நீங்கள் கண்ணனுடன் உரையாடுபவராச்சே என்றேன். அதற்கு அவர் ஒன்றும் பேசாது மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்டார் அப்போது நான் என்ன வென்று கேட்ட போது என்னுடைய காலத்தில் முதலில் இவ் ஆலயத்தில் பழமையாக இருக்கின்ற கருடமண்;டபம் புதுப் பொலிவு பெறுமா? அடுத்து முன்னூ று வருடங்களாக எனது மூதாதையர் தேடியும் கண்டுபிடிக்காத அபிசேஷகத்துக்கு தேவையான சுத்த நீர்க்கிணறு கண்டுபிடிக்கப்படுமா? அடுத்தது புனராவர்த்தன மகா கும்பாவிசேஷகம் ஒன்று நடைபெறுமா? என்று கேட்டார். அதற்கு என்னுள்ளி ருந்து உள்ளுணவு உணர்தியது அது நடக்குமென அதைக்கூறினேன். ஐயா சந்தோசமடைந்தார். அவை அனைத்தும் ஐயாவின் காலத்தில் ஐயனை கருவியாகப் பயன்படுத்தி நிறைவேறியது. அது அவனின் திருவிளையாடல்.
அவ் ஆலயத்துக்கு செல்லத் தொடங்கிய பின் மூன்று வாரத்தின் பின் சுவாமி ஸ்ரீ சத்திய சாய் பாபா வின் அபூர்வமான காட்சி கிடைத்தது. அதன் பின்னர் பின் மூன்று வாரத்தின் பின் குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் அபூர்வமான காட்சி கிடைத்தது. இது போன்று பல சித்தர்களின் காட்சிகள் கிடைத்தது. இக் காட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்தேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது இருவரும் மகா விஸ்ணுவின் அவதாரம் என்பது. என்னை ஆன்மீக நாட்டத்தில் ஈடுபடகாரணமாக அமைந்தது குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் வாழ்கை வரலாறு அடங்கிய அமுதமொழி இது அண்ணாவால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனக்கொரு காலத்தில் மனக்குழப்பமும் அமைதியின்மையும் காணப்பட்டது.(1990இல்) இதை உணர்ந்த எனது தந்தை அமைதிக்கு ஒரேவழி குருதேவரின் அமுதமொழி தான் என்று என்னிடம் கையளித்தார். எனது தந்தை குருதேவரின் வழிநிற்பவர். உண்மையில் அது தான் மன அமைதியையும் உண்மையான ஆன்மீகப்பாதைக்கு அடிகோலியது எனலாம். அதனால் தானோ குருதேவரின் திவ்யதரிசனம் கிட்டியதோ என்று எண்ணினேன்.
இவ்வாலயத்தின் நடைபெற்ற அதிசயங்களை ஐயா என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவற்றில் சில கொக்கட்டிச்சேலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்துக்கு பூசைக்காக திமிலதீவிலிருந்து தனது மூதாதையினர் முதலையை மந்திரசத்தியை கொண்டு அழைத்து அதில் ஏறி சென்று திரும்பி விடுவதாக கூறினார். அதிலிருந்து தெரிகின்றது கண்ணனுக்கு பூசை செய்த பரம்பரையினர் மந்திரசத்தி உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாலயம் அக்காலத்திலிருந்து அரவம் தீண்டியவர்களை காப்பதிலும் சித்தசுவாதீனமுற்றோரை சுயநிலைக்கு கொண்டு வருவதற்கும் பில்லிசூன்யத்தினால் ஏற்படும் தீயவிளைவுகளிலிருந்து காப்பது போன்ற விடயங்களுக்கு இவ்வாலயம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கானப்பட்டது.
கண்ணின் கருவறை |
இது மட்டும் அல்ல இவ் ஆலயத்துக்குள் அதிகாலைகளிலும் விசேடகாலங்களிலும் பிரபஞ்சத்தின் ஒளி வந்து இறங்குவது வழமை இதை பலரும் அவதானித்துள்ளனர் எமது பகுதி போர்சூழல் கானப்பட்ட போது அவ்வாலயம் பாதுபாப்பு படை வசம் இருந்தது. அக்காலத்தில் பூசைக்காக ஐயா மட்டும் அனுமதிக்கப்படுவாராம். ஒரு நாள் மட்டக்களப்பிலுள் டச்சுக் கோட்டையில் அதி காலையில் பாதுகாப்பில் ஈடுபட்ட படையினர் இதை அவதானித்து படைமுகாம் தாக்கப்படுவதாக எண்ணி அபாய ஒலி விளிப்பூட்டி தொடர்பு கொண்ட போது எதுவும் நடைபெறவில்லை பின்னர் உண்மையை அறிந்து ஆலயப்பகுதியை வழிபாட்டுக்கு அனுமதித்து படையினர் ஒதுங்கிக்கொண்டனராம். இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் நிகளுகின்றது.
திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள். |
வாரத்தில் வெள்ளி சனி ஆகிய தினங்களில் மட்டுமே பூசை நடைபெறுகின்றது. அதில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ மகாவிஸ்ணுவுக்கும் சனிக் கிழமை சனிஸ்வரருக்கும் பூசை நடைபெறுகின்றது. இங்கு சனிஸ்வரருக்கு தனியான சன்நிதியுள்ளது மட்டக்களப்பில் இங்கு தான் இது தனிச்சிறப்பாகும்.
கண்டுபிடித்த கிணறு |
கண்டுபிடித்த கிணறு |
அரசமரமும் ஆலயமும் |
Wednesday, February 23, 2011
இந்து சமயத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு முறைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளே
இந்து சமயத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு முறைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளே
இந்து சமயத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு முறைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளே ஆரேக்கியம் மனிதனின் உடல் சமநிலையை பேணும் அதுவே நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும். “நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” அதுவே கிரியை வழிபாட்டின் அடிப்படையும் யோக நெறியின் ஆரம்பப்படியும் கிரியை பிண்டத்தில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை செய்முறையில் காட்டுவது.
ஆலயத்துக்கு செல்லும் போது முதலில் உடலை சுத்தம் செய்யது தோய்ந்து தோய்த்துலர்ந்த ஆடையணிந்து சுத்தமாகச் செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின்னர் ஆலயத்தினுள் நுளையுமுன் கோபுரதரிசனம் செய்ய வேண்டும். “கோபுரதரிசனம் கோடி புண்ணியம்” என்போர் பெரியோர் அப்போது மேல்நாடிப்பாக்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. உடலுக்கு தலைதான் பிரதானம் மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து மூன்றுமுறை சுற்றுகின்ற போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.
பின்னர் புத்தி தரிசனமான விநாயகர் வழிபாடு அங்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழமை இதை இப்போது அமேரிக்காவில்
“டிசiலெழபய” என குறிப்பிட்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இளுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இளுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். எம்முள் உள்ள புத்தியை வினாயகராக வடிவமைத்துள்ளனர் எமது முன்னோரான முதல் சித்தன் அகஸ்தியர். அவர் யானையின் முகத்தை அமைத்ததன் காரணம்; புத்தியுள்ளவன் கேட்க வேண்டும். அதற்கு பெரியகாது வேண்டும். அவன் பேசக்கூடாது கூர்மையானதும் உன்னிப்பானதுமான கண்கள் வேண்டும். அமைதியான சுபாவம் வேண்டும். அதாவது சாத்வீக குணம் இவையனைத்தும் பொருந்திய உருவம் யானை. அவருக்கு நான்கு கை அதில் ஒன்று அறுந்த பாசம் கையிறு அது மும்மலங்களின் விடுதலையை எமக்குணர்த்துகின்றது. அடுத்து அங்குசம் இது யானையை யானைப்பாகன் கட்டுப்படுத்தி சரியான வளியில் செல்ல பயன்படுத்தும் கருவி எமக்குள்ளுள்ள மதம் என்னும் யானையை கட்டுப்படுத்துவதன் மூலமே புத்தியை சரியான வழியில் பயன்படுத்த முடியும் என்பதை அது உணர்த்துகின்றது. அடுத்த கை உலகத்தை அடையாளப்பாடுத்தும் மோதகம் இது உலக அறிவு இதில் ஞானமும் அஞ்ஞானமும் கலந்துள்ளது. அதனைப் பிரித்தறிய ஞானமான அறிவு வேண்டும் அதுவே அடுத்த கையில் உள்ள எழுத்தாணி எனவே உருவமில்லாத புத்திக்கு உருவம் கொடுத்து உணர்த்துவதன் மூலம் தனக்குள்ளுள்ள புத்தியின் வடிவத்தை உலகு மக்களை உணர்த்தினர் ஆதிமகரிசி அகத்தியர் இதை உணர்ந்து தனக்குள் வழிபடுவதன் முலம் மன அமைதியுடன் ஆரோக்கியமும் பெறுவர்.
அடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது சிலர் சாதாரனமாக நடப்பர் சிலர் அடியளிப்பர். நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் காவடி எடுப்பர். இது ஓர் அக்குப்பஞ்ச வைத்திய முறையை ஒத்தகாக அமையும். அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த
பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
எனவே இந்து மதத்தில் பயன்படுத்தும் வழிபாட்டு முறைகள் அனைத்துமே அர்த்தமுள்ளவை அவை அனைத்தையும் எமக்களித்தவர்கள் மகரிசிகளும் சித்தர்களும் ஞானியர்களுமே அவர்கள் உடலும் உள்ளமும் எப்போதும் அமைதியாக இருக்கும் போதுதான் தன்நிலை அறியமுடியும். இதையே ஞானம் என்பர். தன்னை அறிந்துணர்ந்தவன்; ஞானி உலகை அறிந்தவன் அறிவாளி அறிவை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அதை தன்னுள் ஆக்கிக்கொன்டால்தான் அதன் பயனறிய முடியும். “ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது” என்போர் சான்றோர். சைவ சித்தாந்தம் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு படிகள் பற்றிக் கூறுகின்றது. இதில் கிரியை ஆலயங்களில் நடைபெறுகின்ற வழிபாட்டு முறைகளைக் கூறுகின்றது.

Sunday, February 6, 2011
Saturday, February 5, 2011
ஓம் என்னும் ஒலியின் வரிவடிவமே ஸ்ரீசக்கரம்.
எமது வீட்டில் செய்து வரும் ஸ்ரீசக்கர பூஜையின் காட்சிகள்
எமது வீட்டில் செய்து வரும் ஸ்ரீசக்கர பூஜையின் காட்சிகள் |
ஓலியின் வடிவத்தை பெறும் அறிவியல் இன்றுள்ளது இதனை இயல்பு .. அளவையியல் ஆங்கிலத்தில் “CYMATICS” குறிப்பிடுகின்றனர்.இதனை முதலில் குறிப்பிட்வர் சுவிஸ் நாட்டைச் சேர்த அறிஞர் டாக்டர் ஹன்ஸ் ஜென்னி(1904-1972) ஒலியின் ஒவ்வொரு அதிர்வுக்கும் ஒவ்வொரு தனியமைவு உண்டு.இதுனால் தான் மந்திரங்களின் ஒலிக்கு ஒலியமைப்புண்டு.அவை ஒவ்வொருமனிதனின் மனதில் தாககத்தை ஏற்படுத்தி எண்ணங்கனை தூய்மையாக்கி மனிதரை இறை நிலைக்குகிட்டுச் செல்கின்றது.பிரபஞ்சத்தின் எல்லாப்பொருட்களும் சக்தி அதிர்வாலானவை ஒவ்வொர் பொருளும் தமக்கென தனியதிர்வால் இயங்குகின்றன அதிர்வுச்சக்தியே ஒலியாகக்காண்பர் நாம் எல்லோரும் அதிரும் ஒலிச்சத்தியே பிபஞ்சசத்திலும் புவிலும் சில புள்ளிகளிலும் குவிகின்றுது.
இந்தப்புள்ளிகள் “vertex” எனப்படுகின்றுது. டாக்டர் ஹன்ஸ் ஜென்னி ஒங்கார ஒலியை மண்ணில் அதிரச்செய்தார். அதில் அவருக்குகிடைத்த படம் ஸ்ரீசக்கரம் எனவே பிரணவத்தின் சுக்குமம் ஓம் எனும் நாதத்தின் ஒலி அதன் வரிவடிவம் அல்லது தூல வடிவம் ஸ்ரீசக்கரம் எனவே அன்றைய மெய்யியலை இன்றைய அறிவியல் ஒப்புக்கொன்டிருக்கிறது.மனிதன் எதையும் படைக்கவில்லை இறைவனின் படைப்பின் விநோதத்தையும் அதனை மனித சமூகம் அனுபவித்து இறைவனின் விந்தையை அறிய விஞ்ஞானிக்கு ஒரு சந்தர்பத்தை கொடுகின்றான் இறைவன். கீதை செல்லுகின்றது
“எதை நீ கொன்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் அது வீணாகுவதற்கு?
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்ப்பட்டது”. என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லாம் அவன் விந்தை அதை அறியவும்அவன் அருள் வேண்டும். அவனின்றி ஒரு அணுவும் அசையாது.அதை அறிகின்ற சக்தி முற்பிறப்பின் தெடர்ச்சி அதுவே இறைவனின் பணிப்பு.விஞ்ஞானிகள் லவ்வீக வாழ்க்கைக்கைக்கு அப்பால்பட்டவர்கள்.அவர்கள் வைராக்கியத்துடன் இலட்சியமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் படைப்பின் இரகசியத்தை உலகுக்கு உணத்துபவர்கள்.ஆனால் மெய்ஞ்ஞாணிகள் இருந்த இடத்திலேயே இருந்து பிரபஞ்ச படைப்பின் விந்தையை அறிவதுடன் மாற்றத்தையும் ஏற்படுத் வல்லவர்கள்.
எனவே நம் முன்னோர்களான சித்தர்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை மேனமைப்படுத்தி அதன் முலம் அட்மாசித்துக்களை பெற்றதுடன் பெறுதற்கரிய பேறுகளயும் பெற்றனர். ஸ்ரீசக்கரங்களை தாபித்தவர் ஸ்ரீஆதிசங்கரர் அவர் தாபித்ததில் ஒன்று காஞ்சி காமகோடி பீடமும் காஞ்சிகாமாட்சி அம்மன் முன்னால் ஸ்ரீசக்கரமும் அம்பிகை ஸ்ரீ லலித மகா திரிபுர சுந்தரியாக ஆன்மஈடேற்றத்துக்கு தடையாக அமையும் திரிபுரங்களான ஆணவம் கன்மம் மாயையை அழித்து ஆன்மா வந்த நோக்கத்தை நிறைவு செய்ய வளிகாட்டுபவள் அன்ணை ஸ்ரீசக்கரதாரினி.அவள் மலபரிபாகம் செய்பவள். அம்பிகை எனவே உலகத்தையியக்கும் உலநாயகின் வடிவம் பிரணவ ஒலியின் பரி வடிவான ஸ்ரீ சக்கரம் அதுவே அத்மவிடுதலைக்கு வளிகாட்டும் உடல் சக்கர வடிவம். அதுவே மாமெரு.
ஓலி எப்போதும் அழிவி;ல்லை பிரபஞ்சத்தில் அந்தத்தில் கோட்டுக்கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் காடுகளில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தெரியும் நடுக்காட்டில் ஆட்கள் நடமடுவது போல கதைக்கின்ற சத்தம் கேட்கும். அதுவல்ல. நம்மால் வெளிவந்த ஒலிகளின் அதிர்பு தான் அது. நவீன அறிவியல் அது தொட்பான ஆய்வுகளை மேற்கொண்ள்ளது. அவ் ஆய்வின் வெற்றி சத்தியலோகத்தை உருவாக்க எதிர்காலத்துக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே ஸ்ரீசக்கரத்தை வழிபடுவதன் மூலம் உலக நன்மையை பெறுவதுடன் பிறப்பின் அர்த்தத்தை உணர்தும் சக்தி பெறுவர்.எனவே அவ்வாறான ஸ்ரீசக்கரயந்திரத்தை வழிபட்டு பயன்பெறுவோம்.
உசாத்துணை: இராமகிருஷ்ன விஜயம்
Subscribe to:
Posts (Atom)