Friday, November 19, 2010

வில்வதத்தின் மகிமை

                                 



1.வில்வதத்தின் மகிமை




                                            சசிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர்அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மரமுலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசுநெய்  விளக்கிட்டு அபிசேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி பின்வரும் அர்ச்னை
 1 ஒம் .வில்வ விருஷே நம்;
2ஒம் நிர்பீஜ நம
3 ஒம் கோமயோற்பவா நம:
 4 ஒம் .சங்சராந்த நம:
 5 ஒம் சுத்தபதுமப்பிரிய நம:

 6 ஒம் வியாத நம:
7 ஒம் புட்டாதிக நம:
8 ஒம் சேஷத்திரஞ்ஞ நம:
9 ஒம் வரதா பீஸ்ட நம:
10 ஒம் புருஷார்த்த சித்திதா நம:
11 ஓம் சிவப்பிரிய நம:
முதலிய நாமங்களைக் கொன்டு பூசிக்கச் சகல சித்தியும் பெறுவர்.  ;  வி ல்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும்போது பளுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் முவிதள்கள்பிரியாதவகையில் பறித்தல் வேன்டும். மாலையில்தளம் றித்தல் உத்தமம்மல்ல. வில்வாஸ்டகத்தில் ஒர் வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள்  பற்றி சங்கரர் மிகதெளிவாக பாடியுள்ளா ஒர் வில்வதளத்தை சிவாற்பனம்செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.
* முன்று ஜன்மங்களில் செய்தபாவம் அறும்
  *கோடி பெண்களுக்கு திருமணம் செய்த பலன் கிடைக்கும்.
 *ஸாளக்ராமம் வழிபட்ட பலன் பொறலாம்
 *அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
 *கோடியக்ஞபலன் பெறலாம்
 *காசிசே~த்திரகாலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்
 *உமாமகேஸ்வரருடன் சகலதேவர்களையும் வளிபட்டு சகல பாபங்களையும் போக்கியபலன்களையும் பெறலாம்.

வில்வ தளம் சிவசொருபம் அதன் முட்கள் சத்திசோருபம் அதன் கிளை வேத இரகசியம் அதன் வேர்கள் பதிருனெருகோடி ருத்திரர்கள். ஐந்து வில்வ தளங்களை எடுத்து நடுவில் ஒருதளமும் மேற்கில் ஒருதளமும் வடக்கில் ஒருதளமும் தெற்கில் ஓருதளமும் கிழக்கில் ஓரு தளமும் வைத்து  முதலில் நடுவிலுள்ள வில்வதளத்துக்கு பானிமந்திரமும் மேற்கிலிருந்து சத்யோஜதமந்திரமும் வடக்குக்கு வாமதேவமந்திரமும் தெற்குக்கு அகோரமந்திரமும் கிழக்கு தற்புருசமந்திரமும் பின்னர் நடுவுக்குமேலே ஈசானமந்திரத்தையும் செல்லி பக்கத்தில் துளசி தளமொன்றையும் வைத்து வழிபடுவதால் சிவசத்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். அப்படியான சத்தி பெற்றது வில்வ தளம்.
ஒரு அரசன்  வில்வருச~த்தை நிழற் பொருட்டு அவ்வில்வத்தின் கீழ் நின்று வேட்டையடிய சிரமபரிகாரத்தின் பொருட்டு கொடுங்கோலான அரசன் வருகையில் அந்த வில்வ விருச~த்துக்கருகில் ஒரு முனிவர் அணிந்திருந்த விபூதி அவன் மீது பட்டதனால் ஞானமடைய அரசன்     முனிவரிடம் வேண்டினான். அப்போது முனிவர் அரசனிடம் நீ வில்வ விருச~ மொன்றை பிரதி~;டை அதன் நிழலில் வசித்து உன்பாவங்களை நீக்கி புனிதனாவாயென அவனுக்குச் சிவஞான மநுக்கிக்க அவன் மீளாக்கதி பெற்றான். இவ்வாறே மார்க்கண்ட முனிவர் உபதேசித்தால் பாவியாகிய வேதியன் வில்வவிருச~த்தடியில் சிவாரதனை செய்து பாபநீக்கம் பெற்றான்.         
வில்வம் பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்பாடுகின்றது. பஞ்ச வில்வங்களானவை வில்வம், விளா, நொச்சி, முட்கிளுவை, மாவிலங்காகும். இவ் பில்வங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சித்தல் ஜம்புலன்களால் உண்டானபாவங்களை நீக்கி ஜம்புலக்கட்டறும். அத்துடன் மும்முர்த்திகளை வழிபட்ட பலனையும் பெறுவர். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கி  ஆன்மவிடுதலையான பிறப்பின்மைக்கு வழிவகும்.
       வி ல்வம் மருத்துவகுணம் உடையது வெப்பத்தினால் உன்டாகும் நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல்உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு. வில்வம்          பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்hடுகின்றது.

No comments:

Post a Comment