Tuesday, February 25, 2025

சிவராத்தியில் அடங்கியுள்ள மெய்ஞான விஞ்ஞான இரகசியம்

 சிவராத்திரியின் மகிமை பற்றி இதுவரை நீங்கள் அறியாத விஞ்ஞான பூர்வமான ஒரு தெய்வீக ரகசியம் 


 "லூமினிபெரஸ் ஈத்தர்" (Luminiferous Eather) எனப்படும் ஒரு  பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து  தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.  எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.


அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள்.


ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.


பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். ( படம் பார்க்கவும் )


மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள். 


ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) , இரண்டு ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. ( படம் பார்க்கவும் )


மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மைகொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும்.


அதேசமயம் 180 கேண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.


புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும்.


மகா சிவராத்திரி அன்று  பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.


இந்த லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன்,கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.


இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார். மேலும் 17 ம்  நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.


மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு.


ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் ( Self Blessing )

செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (  DNA ) ல்  கெட்ட பதிவுகளை  ( கர்மா ) அழிக்கும் வல்லமை உள்ளது.


மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?


பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர்  சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின்  ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில்  சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள்.


அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். ( Circadian Rhythm ) 


மகா சிவராத்திரி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது மற்றும் நாடுகளில் இல்லை?


நமது நாட்டில் மட்டும்தான் ஆசான்கள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் ஓபனாக சொல்கிறார்கள். பல நாடுகளில் இந்த விஷயத்தை ஆசான்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.


நண்பர்களே, இதை தான் "தூக்கம்" என்ற தலைப்பில், இரவு படுத்து தூங்குவதை விட உட்கார்ந்து தூங்குவதே சிறப்பு என்று நான் பத்து வருடமாக பேசி வருகிறேன். ( https://youtu.be/RSIzI1lR5Vs ).


இந்த ஈத்தரைத்தான் "ஈசன்" என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். "ஈத்தர் ராத்திரி" என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து ஜாதி மத மக்களுக்கும் நல்லது.


சிவராத்திரி முட்டாள்தனம் என்று சொல்லும் சிலருக்கு எனது கேள்வி உங்களுக்கு பெயரில் பிரச்சனையா? அறிவில் பிரச்சனையா? அறிவியலில் பிரச்சனையா?.


உங்களுக்கு பெயர் பிரச்சனை என்றால், உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அறிவையும் அறிவியலை மாற்ற முடியாது.


இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதற்காக,  ஞானிகள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் முழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்.


நன்றி : இந்த அறிவியலை எனக்கு புரிய வைத்த "வேதா ஜி" அவர்களுக்கு நன்றி.



Friday, January 17, 2025

 மகா வில்வக் கன்று கிடைக்கும் 

9894085050

Monday, December 30, 2024

உத்தராயணம் தட்சணாயனம் காலங்களில் செய்யக்கூடியவை கூடாதவை தொடர்பாக

 உத்தராயணம் தட்சணாயனம் தொடர்பான விடையங்களை முன் வைக்கலாம் என்னுகின்றேன் 

           இவை சூரியன் செல்லும் பாதையை பொறுத்துதே அமைகின்றது. வடக்கு நோக்கி நகரும் போது உத்தராயணம்  என்றும் தெற்கு நோக்கி நகரும் போது தட்சணாயனம் எனவும் நகர்கிறது.  தமிழ் மாதமான மகர சங்கராந்தி முதல் ஆடி மாதம் வரையான முதல் ஆறு மதம் வடக்கை நோக்கி உத்தராயணம் அடுத்த ஆறு மதம் தெற்கை நோக்கி தட்சணாயனம்.

     இதனுடன் தேவர்களின் நாள் தொடர்பு படுகின்றது தேவர்களுக்கு எமது ஒருவருடம் அவர்களுக்கு ஒரு நாள் முதல் ஆறுமாதமும் பகல் அது உத்தராயணம் அடுத்த ஆறுமாதமும் இரவு அது தட்சணாயனம். மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தம். 

பொதுவாக தேவகாரியங்கள் உத்தராயணத்தில் செய்வது உத்தமம். பொதுவாக தேவர்கள் போகத்தை கொடுப்பவர்கள் மங்கல காரியங்கள் செய்ய உத்தமம் காலம் திருமணம்,வீடு குடிபுகுதல், குடமுழுக்கு உபநயணம் ,காணிவாங்குதல் போன்ற காரியங்களை மேற்கொள்வது உத்தமம். இக்காரியங்களில் அக்னி காரியம் உண்டு தேவர்கள் உறக்கமின்றி விளித்திருக்கும் காலம். ஒருவருக்கு கெடுதி செய்வதாக இருந்தால் அவர் பட்சி உறக்கத்தில் இருந்தாலே வாய்ப்பு. அப்படி இருக்க தேவ  காரியம் உறக்கத்தில் எப்படி 

        தட்சணாயனம் பொதுவாக மாளையத்தில் ஆரம்பித்து அதாவது பிதிர் கருமத்தில் ஆரம்பித்து நவராத்திரி, கேதாரகௌரி, கந்தசஷ்டி, விநாயகர் சஷ்டி,திருவெண்பாவென வாரகாலமாக அமைகின்றது.

             குடமுழுக்கு செய்வது என்பது பாலாலயத்தில் இருந்த மூர்தியை புணராவத்தணம் செய்த கோயிலில் பிரதிஷடை செய்தல் இது பல காரணங்களுக்காக நடைபெறும் போது பல காரணத்தைப் பொறுத்து அதன் பெயர் அமையும். சில வேளையில் உடனடியாக குடமுழுக்கு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு ஆலயங்களில் ஆசௌசியங்கள் இடம் பெறுறிருக்கின்ற  போது அதற்கு எதையும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை காரணாகம் கைக்கொன்டு செயல்படலாம்.

            எப்போதும் உத்தராயணம் காலத்தில் குடமுழுக்கு செய்வது உத்தமம்  ஏன் என்றால் பால மூர்த்தியாக இறைவனை அமர்தும் போது அங்கு தேவபிரசன்னம் தேவை அவியை அக்னி மூலம் குறித்த தேவதைக்கு குறித்த காலத்தில் கொண்டு செலுத்த வேண்டும். அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

   தட்சணாயனம் காலம் விரதகாலம் பால மூர்த்தி யாக கருத்தில் மண்டலாபிஷேகம் நடைபெறும் போது அங்கு விரதங்கள் அனுஷ்டிக்கப்படுவது உத்தமம் இல்லாத படியால் பொதுவாக உத்தராயணம். உத்தராயணம் காலத்தில் குடமுழுக்கு செய்வது உத்தமம். குறித்த பாரம்பரிய  விரதங்கள் அனுஷடிக்கும் ஆலயங்களைப் பொறுத்தவரை.

      குடமுழுக்கு செய்து மண்டலாபிஷேகம் நடை பெறும். ஆலயங்களில் திருவிழாவாக செய்வதில்லை அங்கு நடனம் சங்கீதம் போன்ற நிகழ்வுகளை செய்து பால மூர்த்தியை மகிழ்ச்சிபடுத்தி அடியார்களையும் மகிழ்ச்சி படுத்தும் நிகழ்வுகள்வுகள் நடைபெறும் .  

         பொதுவாக பூர்வாங்க சாக்கில் பட்ச வளர்பிறையில் மங்கல காரியங்கள் செய்வதற்கு உகந்தது .நோய் காவல் பின்னுதல் தீயசக்திகளை விலக்கும் போன்ற விடையங்களை  கிஸ்ணபட்ச தேய்பிறையில் செய்வது உத்தமம்

         ஒருவரது பிறப்பு நட்சத்திரம்மாவும் இறப்பு திதியாவும் அமையும். இறப்பு வளர்பிறையாயின் அது பிறக்கும் தேய்பிறையின் வினை குமறைந்து செல்லதை அறிய முடியும் பிறைகளின் எண்ணிக்கைக்கு அமைய இருக்கும். கர்மாவே பிறப்பை கணிக்கும். 

இவை ஆகமங்களைப் பின்பற்றிய கோயிகளுக்கே பெரும் பாலும் பொருந்தும் சித்தர்கள் வழியில் இறைவன் அண்ட பிண்டத்தில் ஆதியாய் அனாதியாய்  எங்குமாய் எதிலும் இருப்பவன் அண்ட பிண்டமே கோயில் எல்லா நாளும் அவன் படைப்பு. இறைவன் நிர்மலன் நிர்குணன் ,எங்கும் உள்ளவன் எல்லாம் வல்லவன் தோற்றமும் இல்லை முடிவும் இல்லை பிரளைய காலத்தில் அவன் மட்டுமே இருப்பான் . மேல் உள்ளவை போகிக்கே அன்றி யோகிக்கு அல்ல ஆனால் யோகிக்கு ஆறாதாரங்களை வலுவாக்க தேவைப்படுகின்றது உத்தராயணம் அனாக தத்துக்கு மேல் குன்டலினியை உயத்தவும் தட்சணாயனம் அதன் கீழ் சுத்தம் செய்யவும் பயன்படுத்து கின்றனர். 

               யோகிக்கு  தன்னிலை அடைய உத்தராயணம் சிறந்தது புத்த பகவான் வைகாசி விசாகத்தில் பரிணாம் அடைந்தார் பல சித்தர்கள் சித்தி பெற்றனர்.

           மகா பாரதத்தில் விஷமர் அம்பு படுக்கையில் உத்தராயணம் வரை காத்திருந்தார். 

தட்சணாயனத்தில் தேவர்கள் உறக்கத்தில் இருப்பதால் பிதிர்கள் பூமிக்கு வருவதால் பிதிர் கடன் செய்ய உகந்தது காலம் மாளையபட்சம் அக்காலத்தில் அமைகின்றது.

பொதுவாக நோக்கின்ற போது தேவபிரதிஸ்டை செய்ய உத்தராயணம் சிறந்தது. 

பெண்கள் இறுதிக் கிரியை செய்யலாமா

 பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? பிதிர்க்கடன் 


பெண்களுக்கு தம்முடைய தந்தை அல்லது தாயார் இறந்தபின் அவர்களுக்கு எமது சைவ சமய மரபுப்படி எரியூட்டவோ, செய்யவேண்டிய இறுதிக்கிரியைகள் செய்யவோ உரிமை இல்லை என்ற கருத்து பல காலமாக எம் மக்களிடையே வேரூன்றி இருக்கின்றது. இதை எமது சமயகுருமாரும் கூறி வருகின்றார்கள். ஒருவர் ஆண் சந்ததி இல்லாமல் இறந்துபோனால் அவருடைய ஆண் உறவினர் ஒருவரை நியமித்தே இறுதிக்கிரியைகள் செய்யும் வழமை உள்ளது. ஒரு சில தசாப்தங்களாக பெண்களும் இவ்வாறான கிரியைகளைச் செய்தாலும் இவை அருமையாகவே காணப்படுகின்றன; விதிவிலக்காகவே கருதப்படுகின்றன.  


ஆயினும் இந்த பெண்களை இறுதிக்கிரியைகளில் இருந்து ஒதுக்கிவைக்கும் மரபு உண்மையிலேயே எமது சைவ சமய நூல்களில் உள்ளதா என்று பார்த்தால் நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் காத்திருக்கின்றது. இன்று மரபுச் சைவர்கள் கருதிவருவதுபோல பெண்களை இறுதிக்கிரியைகளில் இருந்து சைவம் ஒதுக்கிவைக்கவில்லை. 

                       ………………….நவின்ற தகனாதி

அவை தனக்கு இங்கு அதிகாரி அவர் இருபதின்மர்

ஆன இவர்தம் பெயரும் முறையும் அறைந்திடுவாம்;

குவை தரும் சீர்ப் புத்திரன், நன் மனைவி, மகள், அன்பு

கூர உடன் பிறந்தான், இங்கு உரைத்த இவர் மைந்தர். 


                              


கூறுமவன் தாய், அரிய மருமகள், ஓங்கு அன்பு

குலவு சகோதரி, அவள் தன் புதல்வன், அருட் சபிண்டர்,

வீறி சமானோதகர், தாய்(ச்) சபிண்டர், சோதகர், தம்

மெய்ப்புதல்வர், சீடன் எனச் சன்வியன், குரவன், கொண்ட

பேறுபெறு மருகன், அன்பார் தோழன், அடல் அரசன்

பேசும் இவர் என்றறிக; பிறங்கி வரில் உண்மை

தேறு, பிரதானன் புத்திரன், ஒழிந்தோர் எல்லாம்

சேர் இரண்டாம் பிரதானர் என அறிக தெளிந்தே.   


குறித்த தகனம் முதலிய கிரியைகளுக்கு வரிசையாய் அதிகாரிகள் இருபதின்மர் ஆவர். அவை வரிசைப்படி வருமாறு: 

1. புத்திரன் 2. மனைவி 3. மகள் 4. மகளின் புதல்வன் 5. சகோதரன் 6. சகோதரனின் புதல்வன் 7. பிதா 8. மாதா 9. மருமகள் 10. சகோதரி, 11. சகோதரி புதல்வன் 12. பிதிர்வழிச் சபிண்டன் 13. பிதிர்வழிச் சமானோதகன் 14. தாய் வழிச் சபிண்டன் 15. தாய் வழிச் சமானோதகன் 16. சீடன் 17. குரு 18. பெண் கொண்ட மருமகன் 19. தோழன் 20. அரசன். இவர்களுள் புத்திரனே பிரதான கருத்தா, ஏனையோர் இரண்டாம் பிரதானர் ஆவர்.  


- ஆசௌச தீபிகை, பாடல் 144, 145

(சிவாகமங்களிற் கண்ட விதிப்படி நெல்லையம்பதி தமிழாகரர் இயற்றியது, துன்னாலை ஆ. சபாரத்தினக் குருக்கள் 

எழுதிய தாற்பரிய உரையுடன் )


திருவிளையாடற் புராணத்திலும் தடாதகைப் பிராட்டியார் திரு அவதாரப் படலத்திலே அம்பாள் மீனாட்சியாக மதுரையை ஆண்ட காலத்தில் அவர் தந்தை மலையத்துவச பாண்டியன் இறந்தபொழுது தாமே இறுதிக் கிரியைகளைச் செய்ததாகவே திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. 

விரதநெறி அடைந்து ஈற்றுக்கடன் பிறவும் தாதைக்கு விதியால் ஆற்றி

அரதன மெல்லணை மேற்கொண்டு உலகமெலாம் ஒரு குடைக்கீழ் ஆழ்வாளானாள்……

- பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், பாடல் 560


சபிண்டர் என்றால் யாவர் என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதேபோல் தான் சமானோதகர் என்பதும். 


இங்கு சபிண்டர் என்பது தன்னில் இருந்து தொடங்கி ஏழு தலைமுறை வரை வருகின்ற உறவுகளாகும். ச- என்பது உடனான, சமனான என்று பொருள் தரும். பிண்டம் என்பது உடம்பு. ஒரே விதமான உடலை உடையவர் என்று பொருள். அதாவது பெரும்பாலும் ஒத்த பரம்பரை அலகுகளை தம்முடலில் கொண்டவர் என இக்கால அறிவியல் முறையில் கூறலாம். 


சமானோதகர் என்பது தன்னில் இருந்து எண்ண 8இல் இருந்து 12ம் தலைமுறை வரையுள்ள உறவுகளாகும். இங்கும் சமனான அல்லது ஒரேவிதமான உடல் கொண்டவர் ஆயினும் அவை சற்று தூரத்தில் உள்ளன. உதகம் என்பது குளிர் அல்லது உறை நிலை. ஒரே விதமான பரம்பரை அலகுகள் இருந்தாலும் அவை வெளிப்படையாக அன்றி உறங்குநிலையில் (unexpressed or dormant genes) உள்ளதாக இக்கால அறிவியலின் படி விளக்கலாம்.  


இவர்களுள்ளும் முதல் மூன்று தலைமுறைக்குள் உள்ளவர்களை மிக்க உரிமையாக ஞாதியர் என்று கூறுவர். ஈழத்தமிழ் மரபில் இவர்களை துடக்குக்காரர் எனும் சொல்லால் அழைப்பர். 


இவர்களுக்கு சடங்குகளில் உரிமை உள்ளதுபோல எமது நன்மை தீமைகளிலும் பங்குண்டு. இறப்பினூடாக நாம் நொடித்துப்போகும்பொழுது எம்மையும், நிர்க்கதியாக நிற்கும் எமது குடும்பம், பிள்ளைகளையும் தாங்கும் பொறுப்பும் உரிமை வரிசையில் முறையாக இவற்றினூடாக அவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. 


தற்காலத்தின் திரமான சனநாயக அரசமைப்பும், திடமான பொருளாதாரமும் இவ்விதமான குடும்ப, சமூக உறவுகளின் தேவையையும், அவர்களில் தங்கியிருத்தலையும் பிரதியீடு செய்து வருகின்ற வேளையிலும் இவ்விதமான உறவுகளின் தொடர்பையும் தேவையையும் அறிவியல ரீதியாகவும் பார்க்கலாம். இக்கால மருத்துவ சிகிச்சையில் உயிர் காப்பதற்காக உறுப்பு மாற்றுச் சத்திரசிகிச்சை  தேவைப்படும்பொழுது சிறுநீரகம், என்பு மச்சை போன்ற உறுப்புகளை இவ்விதமான ஒத்த பரம்பரை அலகுகளைக்கொண்ட உறவினர் தானம் செய்தாலே அது பெறும் நோயாளியின் உடலில் ஏற்றுகொள்ளப்பட்டு சிகிச்சை வெற்றியளிக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளதை இங்கு ஒப்புநோக்கலாம்.


எமது நாடும் சமயமும் அன்னியர் ஆட்சியில் ஆட்பட்டபொழுது தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் நிலையில் பெண்களை வீட்டின் உள்ளேயே வைத்துப் பாதுகாக்கும் முகமாக வழக்கில் வந்த சில கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்னர் மருவி ஆணாதிக்கத்தையும், அதன் வழி சொத்துடைமையும் சமூக மரபாக்கும் நோக்கில் வேரூன்றியன எனலாம்.

Saturday, April 6, 2024

அன்பார்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்

 அன்பார்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  வணக்கம்


எனது இணைய தளத்தை பார்வை இடும் நண்பர்கள் உங்கள் கருத்தை கூறினால் எதிர் காலத்தில் இன்னும் சிறப்பாக கட்டுரைகள் சமர்ப்பிக்க ஏதுவாகும் நன்றி.. 


விஸ்வப்பிரம்ம ஸ்ரீ பாக்கியமூர்த்தி குமரகுருபரன் ஆச்சாரி

பில்வ அஷ்டோத்திர சத நாமாவளி

 பில்வ அஷ்டோத்திர சத நாமாவளி

1. த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ரூபாய நம:
2. த்ரிசாகைர் பில்வபத்ரைச்ச அச்சித்ரைர் கோமளைச்சுபை:
தவபூஜாம் கரிஷ்யாமி ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ரூபாய நம:
3. ஸர்வ த்ரைலோக்ய கர்த்தாரம் ஸர்வத்ரைலோக்ய பாவனம்
ஸர்வ த்ரைலோக்ய ஹர்தாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார பத்மநிலையாய நம:
4. நாகாதி ராஜவலயம் நாகஹாரேணே பூஷிதம்
நாககுண்டல ஸம்யுக்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார நிலயாய நம:
5. அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதீ ப்ரியவல்லபம்
சந்த்ரசேகர மீசானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார பீஜாய நம:
6. த்ரிலோசனம் தசபுஜம் துர்க்கா தேஹார்த்தாரிணம்
விபூத்யப்யர்ச்சிதம் தேவம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ஸீல க்ஷணாய நம:
7. த்ரிசூல தாரிணம் தேவம் நாகாபரண ஸுந்தரம்
சந்த்ரசேகர மீசானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார மந்த்ராய நம:
8. கங்காதரம் உமாநாதம் பணிகுண்டல மண்டிதம்
காலகாலம் கிரீசம்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார தந்த்ராய நம:
9. சுத்தஸ்படிக ஸங்காசம் சிதிகண்டம் கிருபாநிதிம்
ஸர்வேச்வரம் ஸதாசாந்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார நிவாஸினே நம:
10. ஸச்சிதானந்த ரூபம்ச பராநந்தமயம் சிவம்
வாகீச்வரம் சிதாகாசம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார யுந்த்ராய நம:
11. சிபிவிஷ்டம் ஸஹஸ்ராக்ஷம் தந்தப்யாம்ச நிஷங்கிணம்
ஹிரண்யபாஹும் ஸேனான்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார பீடாய நம:
12. அருணம் வாமனம் தாரம் வாஸ்தவ்யம்சைவ வாஸ்துபம்
ஜேஷ்டம் கனிஷ்டம் வைசாந்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார விபூஷணாய நம:
13. ஹரிகேசம் ஸனந்தீசம் உச்சைர் கோஷம்ஸநாதனம்
விஅகோரரூபகம்கும்பம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார வாசயாய நம:
14. பூர்வஜாபரஜம் யரீம்யம் ஸூக்ஷ்ம தஸ்கர நாயகம்
நீலகண்டம் ஜகந்யம்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார லக்ஷ்யாய நம:
15. ஸுராஸ்ரயம் விஷஹரம் வர்மிணஞ்ச வருதினம்
மஹாஸேனம் மஹாவீரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ஸுபூஜிதாய நம:
16. குமாரம் குசலம் கூப்யம் வதான்யஞ்ச மஹாரதம்
தௌர்யா தௌர்யஞ்ச தைவம்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்காரவே தோபனிஷதே நம:
17. தசகர்ணம் லலாடாக்ஷம் பஞ்சவக்த்ரம் ஸதாசிவம்
அசேஷ பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்காரத்வா தக்ஷிணாயை நம:
18. நீலகண்டம் ஜகத்வந்த்யம் தீநநாதம் மஹேச்வரம்
மஹாபாபஹரம் சம்பும் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார வாசா முத்தண்ட பண்டிதாய நமோ நம:
19. சூடாமணிம் க்ருதவிதும் வலயீக்ருதவாஸுகிம்
கைலாஸநிலயம் பீமம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ரூபாய நம:
20. கர்பூரகுந்த தவளம் நரகார்ணவ தாரகம்
கருணாம்ருத ஸிந்துஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நந்யாய நம:
21. மஹாதேவம் மஹாத்மானம் புஜங்காதிப கங்கணம்
மஹாபாப ஹரம் தேவம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நடராஜாய நம:
22. பூதேசம் கண்டபரசும் வாமதேவம் பிநாகினம்
வாமே சக்திதரம் ச்ரேஷ்டம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நடேச்வராய நம:
23. பாலேக்ஷணம் விரூபாக்ஷம் ஸ்ரீகண்டம்
நீலலோஹிதம் கட்வாங்கம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாராயண ஸகாய நம:
24. கைலாஸவாஸினம் பீமம் கடோரம் த்ரிபுராந்தகம்
வ்ருஷாங்கம் வ்ருஷபாரூடம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நகவேஷதராய நம:
25. ஸாமப்ரியம் ஸ்வரமயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நகவேஷதராய நம:
26. தாரித்ரிய துக்கஹரணம் ரவி சந்த்ராநலேக்ஷணம்
ம்ருகபாணிம் சந்த்ரமௌளிம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நடாய நம:
27. ஸர்வலோக மயாகாரம் ஸர்வலோகைக ஸாக்ஷிணம்
நிர்மலம் நிர்குணாகாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நக்ஷத்ரமாலாபரணாய நம:
28. ஸர்வதத்வாத்மகம் ஸாம்பம் ஸர்வதத்வ விதூகரம்
ஸர்வதத்வ ஸ்வரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாம ரூப விவர்ஜிதாய நம:
29. ஸர்வலோககுரும் ஸ்தாணும் ஸர்வலோக வரப்ரதம்
ஸர்வலோகைக நேத்ரஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாம ரூப விவர்ஜிதாய நம:
30. மன்மதோத்தரணம் சைவம் பவம்பர்கம் பராத்மகம்
கமலாப்ரிய பூஜ்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நிர்மலாய நம:
31. தேஜோமயம் மஹாபீமம் உமேசம் பஸ்மலேபனம்
பவரோக விநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நந்திவாஹனாய நம:
32. ஸ்வர்காபவர்க பலதம் ரகுநாத வரப்ரதம்
நாகராஜஸுதா காந்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நவக்ரஹ ஸ்வரூபாய நம:
33. மஞ்சீரபாதுகம் த்வந்த்வம் சுபலக்ஷணலக்ஷிதம்
பணிராஜ விராஜஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நவ்ய ஹவ்யாகா போஜனாய நம:
34. நிராமயம் நிராதாரம் நிஸ்ஸங்கம் நிஷ்ப்ரபஞ்சகம்
தேஜோரூபம் மஹாரௌத்ரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாதப்பிரியாய நம:
35. ஸர்வலோகைக பிதரம் ஸர்வலோகைக மாதரம்
ஸர்வலோகைக நாதஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாத ரூபாய நம:
36. சித்ராம்பரம் நிராபாஸம் வ்ருஷபேச்வர வாஹனம்
நீலக்ரீவம் பஞ்சவக்த்ரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாம பாராயணப்ரியாய நம:
37. ரத்னகஞ்சுக ரத்னேசம் ரத்னகுண்டல மண்டிதம்
நவரத்ன கீரிடஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மகார ரூபாய நம:
38. திவ்யரத்னாங்குளீ ஸர்ப கண்டாபரண பூஷிதம்
நாநா ரத்னம் மணிமயம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மந்த்ரக்ஞாய நம:
39. ரத்னாங்குளீய விலஸத் கரசாகா நகப்ரபம்
பக்தமானஸகேகஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மந்தாய நம:
40. வாமாங்க பாகவிலஸத் அம்பிகாவீக்ஷணப்ரியம்
புண்டரீகநிபாக்ஷஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மன்மத நாசனாய நம:
41. ஸம்பூர்ணகாமதம் ஸெளக்யம் பக்தேஷ்டபலகாரணம்
ஸெளபாக்யதம் ஹிதகரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மந்த்ராலயாய நம:
42. அப்ரமேய குணாதாரம் வேதக்ருத்ரூப விக்ரஹம்
தர்மதர்ம ப்ரவ்ருத்தஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹேசாய நம:
43. நாநாசாஸ்த்ர குணோபேதம் ஸ்புரன்மங்கள விக்ரஹம்
வித்யா விபேத ரஹிதம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மாயூரபுரி வாஸினே நம:
44. கௌரீவிலாஸ ஸதனம் ஜீவஜீவ பிதாமஹம்
கல்பாந்தபைரவம் சுப்ரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாதேவாய நம:
45. ஸுகதம் ஸுகநாசஞ்ச துக்கதம் துக்கநாசனம்
துக்காவதான பத்ரஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹா நாதாய நம:
46. ஸுகருபம் ரூபநாசம் ஸர்வதர்ம பலப்ரதம்
அதீந்த்ரியம் மஹாமாயம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாபைரவ பூஜிதாய நம:
47. ஸர்வபக்ஷி ம்ருகாகாரம் ஸர்வபக்ஷி ம்ருகாதிபம்
ஸர்வபக்ஷி ம்ருகாதாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாகாமேசவராய நம:
48. ஜீவாத்யக்ஷம் ஜீவவந்த்யம் ஜீவஜீவன ரக்ஷகம்
ஜீவக்ருத் ஜீவஹரணம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மத்தாய நம:
49. விச்வாத்மனம் விச்வவந்த்யம் வஜ்ராத்மா வஜ்ரஹஸ்தகம்
வஜ்ரேசம் வஜ்ரபூஷஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மங்களாலயாய நம:
50. கணாதிபம் கணாத்யக்ஷம் ப்ரளயாநல நாசகம்
ஜிதேந்த்ரியம் வீரபத்ரம ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மானஸாய நம:
51. த்ரியம்பகம் ம்ருடம் சூலம் அரிஷ்ட்வர்க நாசகம்
திகம்பரம் ÷க்ஷõபநாசம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹேச்வராய நம:
52. குந்தேந்து சங்கதவளம் பகநேத்ர பிதுஜ்வலம்
காலாக்னி ருத்ரம் ஸர்வக்ஞ்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாபாஹவே நம:
53. கம்புகரீவம் கம்புகண்டம் தைர்யதம் தைர்யவர்த்தகம்
சார்தூல சர்மவஸனம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாயக்ஞாய நம:
54. ஜகதுத்பத்தி ஹேதுஞ்ச ஜகத்ப்ரளய காரிணம்
பூர்ணாநந்த ஸ்வரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாயக்ஞாய நம:
55. ஸ்வர்ணகேசஞ்ச மஹத்தேஜம் புண்யச்ரவண கீர்த்தனம்
ப்ரஹ்மாண்ட நாயகம் தாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிகார ரூபாய நம:
56. மந்தாரமூல நிலயம் மந்தார குஸுமப்ரியம்
ப்ருந்தராக ப்ரியதரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிஷ்டேஷ்யாய நம:
57. மஹேந்த்ரியம் மஹாபாஹீம் விச்வாஸா பரிபூரகம்
ஸுலபாஸுலபம் லம்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சித்கண்டாய நம:
58. பீஜாதாரம் பீஜரூபம் நிர்பீஜம் பீஜவ்ருத்திதம்
பரேசம் பீஜாநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாலயாய நம:
59. யுகாகாரம் யுகாதீசம் யுகக்குத் யுகநாசகம்
யுகேசம் யுகநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவரூபாய நம:
60. தூர்ஜடிம் பிங்களஜடம் ஜடாமண்டல மண்டிதம்
கர்பூரகௌரம் கௌரீசம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாநந்தாய நம:
61. ஸுராவாஸம் ஜனவாஸம் யோகீசம் யோகபுங்கவம்
யோகதம் யோகினாம் ஸிம்ஹம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிதிவாஹந ஜன்மபுவே நம:
62. உத்தமானுத்தமம் தத்வம் அந்தகாஸுர ஸூதனம்
பக்தகல்பத்ருமம் ஸ்தோதமம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாய நம:
63. விசித்ரமால்யவஸனம் திவ்யசந்தன சர்ச்சிதம
விஷ்ணுப்ரம்ஹாதிவந்த்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவமயாய நம:
64. குமாரம் பிதரம் தேவம் ஸிதசுந்தர கலாநிதம்
ப்ரம்ஹசத்ரும் ஜகன்மித்ரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிஷ்ட பூஜிதாய நம:
65. லாவண்யம் மதுராகாரம் கருணாரஸ வாரிதம்
ப்ருவோர்மத்யே ஸஹஸ்ரார்ச்சிம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவதாய நம:
66. ஜடாதரம் பாவகாக்ஷம் ரு÷க்ஷசம் புவன நாயகம
காமதம் ஸர்வதா கம்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாய நம:
67. சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவயோகாய நம:
68. வாஸுக்யுரக ஹாரஞ்ச லோகானுக்ரஹ காரிணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவக்ஞானினே நம:
69. சசாங்கதாரிணம் பாக்கம் ஸர்வலோகைக சங்கரம்
சுத்தஞ்ச சாச்வதம் நித்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவ சைதண்ய மானஸாய நம:
70. சரணாகததீனார்த்தி பரித்ராண பராயணம்
கம்பீரஞ்ச வஷட்காரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவப்ரதாய நம:
71. போக்தாரம் போஜனம் போஜ்யம் ஜேதாரம் ஜிதமானஸம்
கரணம் காரணம் ஜிஷ்ணும் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாராத்யாய நம:
72. ÷க்ஷத்ரக்ஞ்யம் ÷க்ஷத்ரபாலஞ்ச பரார்த்யைக ப்ரயோஜனம்
வ்யோமகேசம் பீமவேஷம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாலாஸித விக்ரஹாய நம:
73. பவக்னம் தகுணோபேதம் ÷க்ஷõதிஷ்டம் யமநாசகம்
ஹிரண்ய கர்ப்பம் ஹேமாங்கம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வகார ரூபாய நம:
74. தக்ஷம்சாமுண்டஜனகம் மோக்ஷதம் மோக்ஷதாயகம்
ஹிரண்யதம் ஹிரண்ய ரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாமாங்கஸீந்தராய நம:
75. மஹாச்மசான நிலயம் ப்ரச்சன்ன ஸ்படிகப்ரபம்
வேதாச்வம் வேதரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாயு வந்திதாய நம:
76. ஸ்திரம் ஸ்வதர்மமானாபம் ப்ரஹ்மண்யஞ்ச ச்ரியம்விபும்
ஜகந்நிவாஸம் ப்ரதமம் ஏகவில்பம் சிவார்ப்பணம்
ஓம் வாக்விபூதயே நம:
77. ருத்ராக்ஷமாலாபரணம் ருத்ராக்ஷ ப்ரியவத்ஸலம்
ருத்ராக்ஷ பக்தஸம்ஸ்தோமம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாமதேவாய நம:
78. பணீந்த்ர விலஸத்கண்டம் புஜங்காபரண ப்ரியம்
தக்ஷõத்வர விநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வால்மீகிபரிபூஜிதாய நம:
79. நாகேந்த்ர விலஸத்கர்ணம் மஹீந்த்ர வலயாவ்ருதம்
முனிவந்த்யம் முனிச்ரேஷ்டம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாதுலாகமஸம்வேத்யாய நம:
80. ம்ருகேந்த்ர சர்மவஸனம் முநீனாம் ஏகஜீவனம்
ஸர்வதேவாதி பூஜ்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரிஷ்டாய நம:
81. நிதநேசம் தனாதீசம் அபம்ருத்யு விநாசனம்
லிங்கமூர்த்திம் அனிங்காக்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரதாயகாய நம:
82. பக்தகல்யாணதம் வ்யஸ்தம் வேதவேதாந்த ஸம்ஸ்துதம்
கல்பக்ருத் கல்பநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாக்விகத்தசரித்ராய நம:
83. கோரபாதக தாவாக்னிம் ஜன்மகர்ம விவர்ஜிதம்
கபால மாலாபரணம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாத்ஸல்ய பரமேச்வராய நம:
84. மாதங்க சர்மவஸனம் விராட்ரூப விதாரகம்
விஷ்ணுக்ராந்தம் அநந்தஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரதாப்ய ஹஸ்தாய நம:
85. யக்ஞ்யகர்ம பலாத்யக்ஷயம் யக்ஞ்யவிக்ன விநாசகம்
யக்ஞ்யேசம் யக்ஞ்ய போக்தாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரேணயாய நம:
86. காலாதீதம் த்ரிகாலக்ஞ்யம் துஷ்டநிக்ரஹ காரகம்
யோகிமானஸ பூஜ்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வசுதாய நம:
87. மஹோந்நதம் மஹாகாசம் மஹோதரம் மஹாபுஜம்
மஹாவக்த்ரம் மஹாவ்ருத்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வசவே நம:
88. ஸுநேத்ரம் ஸுலலாடஞ்ச ஸர்வம் பீமபராக்ரமம்
மஹேச்வரம் சிவகரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வதூந்யாய நம:
89. ஸமஸ்தஜகதாதாரம் ஸமஸ்த குணபாரகம்
ஸத்யம் ஸத்யகுணோபேதம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வதூந்யாய நம:
90. மாகக்ருஷ்ண சதுர்தஸ்யாம பூஜார்த்தஞ்ச ஜகத்குரோ
துர்லபம் ஸர்வதேவானாம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாமதேவ ப்ரபூஜிதாய நம:
91. தத்ராபி துர்பலம் மன்யே நமோமாஸேந்து வாஸரே
ப்ரதோஷகால பூஜாயாம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யகார ரூபாய நம:
92. ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் சதகூபயோ:
கோடிகன்யாமஹாதானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யந்த்ரக்ஞாய நம:
93. தர்சனம் பில்வவ்ருக்ஷஸ்ய ஸபர்சனம் பாபநாசனம்
அகோர பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞர்ம பலப்ரதாய நம:
94. துளஸீ பில்வநிர்குண்டீம் ஜம்பீராமலகம்ததா
அகோர பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞப்ரியாய நம:
95. அகண்ட பில்வபத்ரைச்ச பூஜயேத் நந்திகேச்வரம்
முச்யதே ஸர்வபாபேப்ய: ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞரூபாய நம:
96. ஸாலங்க்ருதம் ஸதாம் வ்ருத்தே கன்யா கோடி ஸஹஸ்ரகம்
ஸாம்ராஜ்ய ப்ருத்வீதானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞ நாதாய நம:
97. தசகோடி துரங்காணாம் அச்வமேத ஸஹஸ்ரகம்
ஸவத்ஸ கோடிதேனூனாம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யசபதயே நம:
98. சதுர்வேதஸஹஸ்ராணி பாரதாதிபுராணகம்
ஸாம்ராஜ்ய ப்ருத்வீதானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞாய நம:
99. ஸர்வரத்னமயம் மேரும் காஞ்சனம் திவ்யவஸ்த்ரகம்
துலாபாரம் சதாவர்த்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞபதயே நம:
100. காசீ÷க்ஷத்ரநிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகமாதவம் த்ருஷ்ட்வா ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞபாலன தத்பராய நம:
101. அஷ்டோத்தர சதச்லோகை: ஸ்தோத்ராத்யை: பூஜயேத்ஸதா
த்ரிஸந்த்யம் மோக்ஷமாப்நோதி ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞாஸக்தாய நம:
102. தந்திகோடி ஸஹஸ்ராணாம் பூஹிரண்ய ஸஹஸ்ரகம்
ஸர்வக்ரதுமயம் புண்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞபோக்தரே நம:
103. புத்ரபௌத்ராதிகம் போகம் புக்த்வாசாத்ரய தேப்ஸிதம்
அந்த்யேச சிவ ஸாயுஜ்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யதிவேத்யாய நம:
104. விப்ரகோடி ஸஹஸ்ராணாம் வித்ததனாஞ்ச யத்பலம்
தத்பலம் ப்ராப்னுயாத் ஸத்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யதீச்வராய நம:
105. த்வந்நாமகீர்த்தனம் தத்வத் தவபாதாம்புஜம்பஜேத்
ஜீவன்முக்தோ பவேந்நித்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யஜமான ஸ்வரூபாய நம:
106. அநேகதானபலதம் அனந்தஸுக்ருதாதிகம்
தீர்த்தயாத்ராகிலம் புண்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞாநாம பல தாயகாய நம:
107. த்வம்மாம் பாலயஸர்வத்ர பதத்யானக்ருதம் தவ
பவனம் சாங்கரம் நித்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யஜீர் வேத ஸ்வரூபாய நம:
108. அஷ்டோத்தர சதம் பில்வம் யோர்ச்சயேத் லிங்க மஸ்தகே
அதர்வோக்தம் வதேத்யம்ஸ: ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஷராஜ நிஷேவிதாய நம:
ஓம் சாம்ப பரமேச்வராய நம: