Wednesday, November 17, 2021

Thursday, November 11, 2021

சிவபெருமான் தனது ஜடாமுடியில் மூன்றாம் பிறையை தாங்கி திருநடனம் புகின்றான் அவன் பஞ்சாக்கரமானவன்.

 'சிவபெருமான் தனது ஜடாமுடியில் மூன்றாம் பிறையை தாங்கி திருநடனம் புகின்றான் அவன் பஞ்சாக்கரமானவன்.

"நகாரம்" பாதம் "மகாரம் " வயிறு
தோள்கள் " சிகாரம்" வாய் " வகாரம்" திருச்சடையில் "யகாரம்" சி- சிவன் வ- வனப்பாற்றலாகிய பராப்பரை சத்தி ய- சீவன் ந- நடப்பாற்றலான ஆதி சத்தி ம- மலமாயை சீவன் சிற்றறிவும் சுட்டறிவுடன் இருக்கும் போது அறியாமையுடையது அப்போது அது குழந்தை. தாய் தந்தையர் குழந்தை பருவத்தில் தோளிலும் தலையிலிலும் தாங்குவது போல் சீவான்மாவை இளம்பிறை வடிவாக தாங்கியுள்ளார். அவர் தயாபர கருணாமூர்த்தி அல்வா, பேறறிவு பெற்றதும் சத்தினிபாதமான திருவடியின்பத்தினை வளங்கி துரியாதினமான திருவருள் வீழ்ச்சி பெற்று தொம்பதமசியாகி சீவன் சிவமாகி "சும்மா இரு" என்னும் தத்துவம் அறியும்.
இது நாம் சிறுவனாக இருக்கும் போது எம்மிடம் தாய் தந்தாயர் அன்பாக இருப்பதையும் வளர்தபின் கண்டிப்பாக இருப்பதையும் ஒத்ததே. அதற்காக அவர் அன்பற்றவர்களா? இல்லை நம்மை வழிப்படுத்தி நெறிப்படுத்தவே .இறைவன் உலகில் இன்பதுன்பங்களை கொடுத்தது அனுபவித்து மாள்வதற்கல்ல அவர் அவர் செய்த வினையை முடிப்பதற்கே சேர்ப்பதற்கல்ல. அதை தியாகம் செய்து அவரை அடையவே. பிறமனை நடாது இருக்கும் மனையிலே அடையவே வினைக்கீடான இம்மனை சூக்கும உடலுக்கு பராபரையால் வழங்கப்பட்டது. இதை அவன் அருளாலேயே உணரமுடியும். எப்படி வளர்ந்த பின் தாய் தந்தையர் நெறி தவறுகின்ற போது கண்டித்து திருத்துகின்றார்களோ அதை ஒத்ததே வாழ்க்கையில் சோதனை. கன்மம் நடப்பாற்றலான ஆதிசத்தியாலும். ஆணவவல்லிருள் அடக்க திருஆலங்காட்டு குத்தும் மாயையை விலக்கி அப்பனை காட்ட வனப்பாற்றலான பராபரையால் சீவன் பராபரமாய் சிவனாகும். மனை என்பது பருவுடல்
ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ
ஓம் ஸ்ரீ சற்குருவே துணை
"அன்பே சிவம் "
சிவோகம் சிவோகம் சிவோகம்