Monday, February 8, 2021

இலங்காபுரி இராவணன் ஆண்ட சிவபூமியே

இலங்காபுரி இராவணன் ஆண்ட சிவபூமியே

                          இலங்காபுரி சிவபூமி என்பதை கி.முன் 6000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளடன். தொல்பொருள் ஆராச்சியாளார் தனேஷ் கொடிப்பிலி ஆரச்சி கி.மு 11300  சிவன் ஆட்சி இலங்காபுரியில் இருந்தாக குறிப்பிடுவதுடன் தனேஷ் கொடிப்பிலி என்பவர் சிவபூமி என்பது சிவஹெள எனப்படும். இது சிவ்ஹெள, சிகள, சிங்ஹள என மருவடைந்து வந்தது என்று குறிப்பிடு கின்றார். கி.முன் பெறப்பட்ட கல்வெட்டுக்களில்  283 பிராமிக்கல்வெட்டுக்கள் இந்து தெய்வங்கள் தொடர்பானவையகும் இதில் அதிகமானவை சிவவழிபாடுடன் தொடர்புடையவை  விஜயன் சிவவழிபாட்டில் ஈடுபட்டான் என யாழ்ப்பண வைபவமாலை குறிப்பிடுகின்றது இவன் நன்கு ஈஸ்வரங்களை புனரமைத்தான் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டாகும். பண்டுகாபய மன்னன் சிவ பக்தன் என்பதை அவனது மகனுக்கு மூத்தசிவன் எனபெயர் வைத்ததில் இருந்து தெரிகின்றது. அவருடைய மகன்தான் தெவநம்பிய திஸ்ஸன் அவன் காலத்திலேயே பௌத்த மதம் இலங்கைக்கு கொன்டுவரப்பட்டது. இவற்றை அடிப்படையாக வைத்து பக்கும் போது இலங்காபுரி சிவபூமி என்பதை சான்றுப்படுத்து கின்றது.

                 சோழரை வெற்றி கண்ட விஜயபாகு தனது இந்திய மனைவியான திரிலோகசுந்தரிக்கு சிவதொண்டு செய்ய சிவனொளி பாதமலையில் மண்டபம் கட்டியதாகவும் இறுதிக்காலத்தில் அங்கு தங்கி தொண்டுகள் செய்ததாகவும் அம்பகமுவ கல்வெட்டு சான்று பகர்கின்றது. அத்துடன் அவனுக்கு பிறந்த ஐந்து பெண்குழந்கைள் சுபத்ரா சுமித்ரா லோகநாதா ரத்னாவள்ளி ருபாவதி இவர்களில் நான்காவது ரத்னாவள்ளி மகளின் மகன் பராக்கிரமபாகு அவரின் காலத்திலேயே அதிகமன சிவாலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது 

                பஞ்ச ஈஸ்பரங்கள் இலங்காபுரியில் நான்கு திசைகளிலும் இருக்கின்றது. திருகோனேஸ்வரம், முன்னேச்சரம், திருகேதீச்சரம், நகுலேச்சரம், சந்நிரமௌலேச்சரம், என்பனவும். கொக்கட்டிச்சோலை தான்தோன்டிச்வரம், ஒட்டிசுட்டான் தான்தோட்டிச்சரம். போன்ற பல ஈஸ்வரங்கள் அமைப்பெற்றது. தென்நாடு ஆகிய இலங்காபுரியில்.