Sunday, August 5, 2018

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள்

பாடல்:1                      
            நாத விந்து ஆதி

நாத விந்து ஆதி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி       
   சம மெனில் அண்டத்தின் வித்து
   விந்தினில் நாதம் உயந்திடில் மந்திர வித்து
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி       
   ஆறாதாரத்தில் உதிர்த்திடும் சக்கர மந்திர வித்து
   மூலாதாரதில் விதைத்திட
      சுவாதிஸ்தானதில் விளைந்த மந்திர வித்து
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி       
   மணிப்பூரகத்தில் வளந்து அனாகதத்தில் பரிசுத்தமாகி
   விசுத்தியில் எழுந்து ஆக்ஞாயில் ஒளிந்து சகஸ்ராதாரத்தில் கலந்த மந்திர வித்து
 நாத விந்து ஆதி நாத விந்து ஆதி       
    அது அண்டத்திலுள்ள அண்டத்து வித்து.
    உலக இயக்கமே உன்னுள்ளே இருந்து
   அதை அறியாமல் அலைந்து மாழுகின்றான்     மானிட ஜென்மம்
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி
   மானிட ஜென்மம் எடுத்ததின் நோக்கம் புரியாத மாந்தர்
   அறிந்தவன் உலகத்தை ஆளுகின்றான்
   ஓங்கார ஒலியினிலே உலக இயக்கம்
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி       
   ஆங்காரம் வந்திட்டால் அழித்திடும் உலகத்தையே
   மாயையில் பட்டால் மயமாய் மறையும் உண்ணுள்ளே சக்தி
  அதை உணர்ந்திட்டால் பெற்றிடுவாய் சித்தி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி
         கன்மத்தை அனுபவித்திட்டால்
         முத்தியின் திரவுகோல் உன்கையில்
         முத்தி பெற்றால் வாழ்கையில் சித்தி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி       
         சுவர்கமும் நரகமும் பிறவிப்பிணி   அத்தனையும் முத்தியின் விரோதி
         செயலில் பற்றின்மை அத்தனைக்கும் மருந்து உறவினில் துறவு விடுதலைக்கு திறவுகோல்.


பாடல்: 2
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
  உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
      இல்லரவியலே அவர்கள் தத்துவ இயல்
      உடலை காயமாக்கி நோய்யற்ற
      வாழ்வை மனுக்குலத்துக்கு தந்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
             சித்தர்கள் வாழ்வியல் விஞ்ஞான ஆய்வில்
             ஆக்கி வைத்தவர்கள் சித்தர்கள்
             வானியல் நீரியல் மண்ணியல் விண்யியல் கட்டவர் சித்தர்கள்.

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
              அத்தனையும் விஞ்ஞானமாக்கி மெய்ஞானம கண்டவர்கள் சித்தர்கள்
              சித்தர்கள் அறிவியல் படைத்தவன்
              படைப்பின் தத்துவ இயல்.
              இருந்த இடத்தில் உலக இயக்கம்
              கண்டவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
    வருவதை அறிந்து வரு முன் காப்பவர் சித்தர்கள்
    சித்தர்கள் சிந்தையில் உதித்ததை
    அத்தனின் வார்தையாய் கண்டவர்
    சித்தமரபினர் உண்மையை இயம்பி
    உண்மைக்காய் வாழ்ந்து உண்மையை
    அடைந்தவர் சித்தர்கள்
 
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
    சித்தர்கள் வாழ்வியல் உண்மை
    அறிவியல் மனுக்குலம் உய்ய
    இறைவன் தந்த தத்துவ இயல்
    எழிமையில் இனிமையாய் வாழ்வியல்
    கண்டு வாழ்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
      ஆடம்பரங்கள் அலங்காரங்கள் வெறுத்து
      கோமளம் கட்டி ஆண்டியாய்
      பிச்சை எடுத்து பரதேசியாய் வாழ்தவர் சித்தர்கள்
      மரங்களின் நினலில் மலைகளின்
      குகைகளில் போதனை செய்தவர் சித்தர்கள்
      நாடியவனை சித்தம் தெளியவைத்து
      ஞானம் அடையவைத்தவர்கள் சித்தர்கள்.

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
     சித்தர்கள் பதினென்மர் அவர்களே
     காலமறிந்து காலத்துக்கு காலம்
     நாமம் மாறி புத்துயிர் பெற்று
     மனுக்குல  மீட்சிக்காய் அவதாரம் எடுத்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
    சித்தனை அறிய சித்தத்தெளிவே அவசியம்
    அவன் அருள் இருந்தால் குருவே தன்னை
    உணர்த்தி ஆட்கொள்வான்.
    ஊனுடலில் உள்ளொளி பெருக்க
    மூலதாரத்தில் அக்கினி மூண்டு
    ஆறாததரத்தில் தான் ஒளி பெருக்கி
    மும் மண்டலம் கடந்து
    முறையாய் உயந்து ஆக்ஞயில்
    முத்தீயாய் ஒளிந்து தன் ஒளிகாட்டும்
    இலக்கணம் தந்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
       ஆன்ம சித்தி பெற
       வழி செய்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
     தன் காயத்தை திரியாக்கி
     காயத்திரி தந்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
     தன் நலம் கருதா ஆத்ம நலம் கருதி
    வழி காட்டியவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
    தாம் அடைந்ததை மற்றவர்களுக்கு
    காட்டி அருளியவர்கள் சித்தர்கள்
 
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
  அகத்தியன் தன் சக்தியால் படைத்தார் புத்தியை
  போகன் தன் சத்தியால் படைத்தார் சிவஞானத்தை
  கோலமாமஹரி தன் சக்தியால் படைத்தார் சக்தியை
  வால்மீகி தன் சக்தியால் படைத்தார் இராமனை
  வியாசர் தன் சத்தியால் படைத்தார் கிருஸ்ணரை
  வேதமே அதனுள் அடக்கிட்டார் வியாசர்
  இத்தனையும் சித்தர்கள் படைப்பு

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
     அத்தனையும் நமக்குள் இருக்கு
     இராமரும் நானே இராவணனும் நானே
     பாண்டவரும் நானே கௌரவரும் நானே

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
       நமக்குள் நடக்குதடா இராமாயண யுத்தமும் பாரதப் போரும்
       அறியமால் திரிகின்றோம் மாயையின் பிடியில்
       நடப்பதும் நம்முள்ளே நடத்துபவனும் நம்முள்ளே
       அறியாமல் அலைந்து திரிகின்றோம் நாங்கள்
       இத்தனையும் சித்தர்கள் படைப்பு

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்
        படைத்தவனை விட்டு   படைக்கப்பட்டதை நாடி பெற்றது என்ன?
        கண்ணீரும் கம்பலையும் கிடைத்தா சித்தி ?
        நம்முள் உள்ள புத்தி
        அதை அடைந்திட்டால் சித்தி

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள்

பாடல்:3
                                           நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
     'தேனாக நீ இருந்தால் நாடிடும் தேனீக்கள்
      தேனீயாக நீ இருந்தால் தேடி அலைதிடனும் தேனுக்கு
      தேனீயா? தேன் என்பது அவர் அவர் விதிப்பயன் தானே
      யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலமே சிந்திக்கும்
         'உன்னுள்ளே ஊறி பெருக்கெடுத்து ஓடுதடா தேதாறு
     அதை நீ அருந்திட்டால் பெற்றதடா பெறு
     அதை வேறொருவர் அருந்திட்டால் இழந்திட்டாய் பெற்ற பேற்றை
     அத்தனையும் அவர்அவர் விதிப்பயன் தானே
     யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
   'உத்தமனை உருவாக்க இறைவன் தந்த வரத்தை
   காமத்தின் விழைவால் நிலைகெட்ட மனிததை உருவாக்கி
   அழியுதடா உலகம் அதற்காரணம் நாமென அறிந்து
   பிராயசித்தம் தேடடா இவ் உலகினிலே அத்தனையும் விதி
   யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
   'உன்னுள்ளே இருக்குதடா எல்லாம்
    அதை அறிந்தவன் வாழ்கையில் உலகமே அடிமை
    ஐந்து உன்கையில் அடங்கிட
    ஏழையும் யாண்டு மூன்றினில் உயர்ந்து
    ஆறாறும் அடங்கிடும் உன் உயிரினில்
    பெற்றிடுவாய் திருவடிப்பேறு'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'

 பாடல்:04
       உலகத்தை ஆளும் ஆத்மசக்தி

 உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
 எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
            மனஒருமைப்பாட்டின் விளிப்பே தியானத்தின் அடிப்படை.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            தியானமே அதன் விளிப்பு.
            அதுவே ஆறாதாரத்தின் உச்ச நிலை.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            மூலாதாமே அதன் முளை சகஸ்ரதாரமே அதன் விருட்ச்சம்
            சுழு முனையே அதன் வளி ஆறாதாரம் அதன் சத்தி விளிப்பிடம்.
 உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
 எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
             சகஸ்ரதாரமே அமுதசுரபி.
             அதுவே நாம்மருந்தும் பிறவாமையின்அரு மருந்து.
             அதை அறியார் படைப்பின் தத்துவம் உனரார்.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
             அதை அறிய குருவருள் தேவை.
             குருவருள் திருவருள் -அதுவே அவனருள்
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி

பாடல்: 5
  பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு........... 

 'பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு
                மங்களம் கொடுக்கும் நன்னாள்
மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
              மாங்கலியதாரணம் செய்த பொன்னாள்
காஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார் வதிக்கு
              இழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்
ஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு
              காட்டியருளிச் செய்த பொன்னாள்
கிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு
              அரக்கரனை அழித்த நன்னாள்.
நார் அயன் உள்ளம்  திருமகளுக்கு
               உருத்தான பொன்னாள்
படைபதிபதி நா வாக்தேவிக்கு
              உருத்தான நன்னாள்
இந்திராணி இந்திரதிபதிக்கு
             கிடைத்த பொன்னாள்
மயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு
            உயிர் கொடுத்த நன்னாள்.
அன்னாள் எனக்கு பொன்னாள்
           என் அம்பிகை புன்னையம் பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகாயாக தீட்ரசைப் திருப்பெருநாள்.
            அன்னாள் மங்கையருக் மாங்கல்லிய விதமேற்கும் பொன்னாள்'

                                                                    'மட்டூர் புன்னையம்பதியான்'
பாடல்: 06
நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்..............................!

'நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்
அன்நாள் ஜேசு பிறந்த பொன்நாள்
மனுக்குலம் மீட்சிபெற வித்திட்டதிரு நாள்
அன்நாள் உலகுக்கு ஒளி பிறந்த பொன்நாள்.
ஆஜாரகத்துக்கு அச்சுறுத வித்திட்ட திரு நாள்
மாதாவின் விசுவாசத்தின் சாட்சிய திருநாள்
சூசையப்பரின் மாட்சிமை  திருநாள்
கடவுனின் மாட்சிமை நிலை நிறுத்திய திருநாள்
அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை காக்க
அவதாரம் எடுப்பேன் என்ன கீதையில் கண்ணனின்வார்த்தை பலித்த நன்நாள் அன்நாள் எல்வோருக்கும் பெரும் திருநாள்'.

'வார்தை மாமிசமாகி உன்னுடனே வாசமாக இருந்தார் இறைவன்.
         அன்பின் சொருவம் அவர்
ஆடுகளை மேய்ற்கும் ஆயனவர்
         உண்மையின் இலக்கணம் அவர்
 சித்தர் குழாமில் ஒருவர் அவர்
         அவர் பாதை விடுதலை அளிக்கும்' .
'ஏழ்மையில் பிறந்து எழிமையில் வாழ்து
தனக்கென வாழாது உலக்கு வாழ்ந்த
மனித உருவில் பிறந்த இறைவன்
அவன் வாழ்ந்த வாழ்கையும்
அவன் போதித்த போததையும்
மனுக்குல விடுதலை
அதை அறிந்து உணர்ந்தால்
அதுவே அவனுக்கு செய்யும் காணிக்கை'

பாடல்: 7
நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம்....................

'நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம்
வாழ்கையின் பயனை அனுபவிக்கத் திட்டம்
வகுத்தனர் சித்தர்கள் தந்தனர் வாழ்வியல்
பற்றியே வாழ்ந் திட அற்றிடும் நோய்கள்  உற்றது வீடு.
கூட்டினில் உள்ள குருவியை விட்ட பின்
பட்ட கவலையின் பயன் என்னவோ !
கூட்டி னில் இருக்கையில் பெறு பெற்றவன்
பாக்கி சாலிகள் அல்லவோ!
    காலையும் மாலையும் வருவது இயற்கை
இன்பமும் துன்பமும் வருவதும் இயற்கை
துன்பத்தில் கவலை இன்பத்தில் மகிழ்ச்சி
இரண்டும் நிலைத் திருப்ப துன்டோ !
அவர் அவர் செய்யும் வினையின் பயனென
அறியாமல் இருக்க மாயையின் சதி அது வல்லவோ
பிரபஞ்ச படைப்பின் தத்துவம் அதுவல்லவோ!
இவையெல்லாம் மாயையின் விளைவென
  அறிந்தால் விடுபட வழி தேடிட விளைய
குருவருள் கிட்டிட திருவருள்  கிடைத்திடும்
அதுவும் அவன் தலை விதி அல்லவோ!'
'தாரமும் குருவும் தலைவிதி என விதித்திட்டனர் முன்னோர்'.

'மட்டூர் புன்னையம்பதியான்'
பாடல்:8 
     மனத்திதுள் மறைந்தது புத்தி.............

' மனத்திதுள் மறைந்தது புத்தி
 ஆதற்கு காரணம் அஞ்ஞானம்
ஞானத்தை மறைத்தது நாம் செய்த வினை
வினையின் பயனே நல்லது தீயது
புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
    சித்தத் தெளிவே ஆத்மாவின் விளிப்பு
ஆத்மாவின் ஒளி யில் ஒளிதல்
அதுவே பிறப்பின் அர்த்தம்
   இத்தனைக்கும் காரணம் அறியாமையின் சதி
அத்தனையும் நாம் செய்த கறுமாவின் விளைவு
   அதற்கு காரணம் மனத்திரம்மில்லாமை
மனத்திரமடைய வைராக்கியம் தேவை
  வைராக்கியமடைய குருவருள் தேவை
குருவருளே திருவருன் அதுவே அவன் அருள்'

'புன்னையம் பதியான்'
பாடல்: 9   
சித்தம் தெளிந்தவன் சித்தன்

சித்தம் தெளிந்தவன் சித்தன்
அவன் போக்கு சிவன் போக்கு
 அவனே சிவசித்தன்.
 அவன் சிந்தையில் உதித்தது சித்தவைத்தியம்
 இதுவே எமது உடலுக்குஆதார மூலம்.
 மனிதனைப்படைத்த இறைவன்
  அவன் உடலினின் விளையும் ஊறினை அறிந்து
  அதை தடுக்கும் மூலிகை படைத்தான்.
 படைத்தவன் படைப்பின் தத்துவம் அறிய
  சித்தம் தெளிய வைத்தான்.
 அவனே அவனை அறியவைக்கும்
  பரம இரகசியம் இதுவென அறிந்தால்
  அவனே இறைவன்'
                                         





மட்டூர் புன்னையம்பதியான்

அ தீ ஆனவனே


அ தீ ஆனவனே

சோ தீயில் உறைபவனே
சோ தீ ஆனவனே
ஆக்கமும் அழிவும் அவனுள்ளே
தோன்றிய பொருளும் தோன்றாப் பொருளும் அவனுள்ளே
அவை அணைத்தும் நம்முள்ளே
தன்னுள்ளே இருப்பதை அறியாமல் திரிகின்றான் பாரினியிலே
அதை அறியாமல் தடுமாறுகின்றான் அகந்தையிலே
கருமாவை அனுபவிக்க வைக்கின்றது அதனாலே
இறுதியில் புரிகின்றான் அறியாமையை
அதை அறிந்துவிட்டால் புரிகின்றான்
அ தீ யானவனை


மட்டூர் புன்னையம்பதியான்