நான் ஒரு சித்தவைதியர் அல்ல ஆனால் சித்தர்களில் நம்பிக்கையுற்று அவர்களின் வழியை பின்பற்றி ஆத்மாக்கு உடல் உபாதையிலிருந்து விடை கொடுக்க முயலுவதுடன் “நாம் பெற்ற இன்பம் பெறுக அவ்வையகம்” என்று மற்றவர்களும் பின்பற்ற என்னல் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கைங்கரியத்தை செய்ய முயலுகின்றேன். சித்தர் என்றால் உலகை அனுபவிக்கத் தெரியாத பைத்திகாரர்கள் என்பது தான் பெரும்பாலன இளைஞர்களின் கருத்து. ஆனால் அது வல்ல உண்மை அவர்களை அறிய அடைய பிராரத்துவம் தேவை. “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் “தவமுடையாக்கே தவம்” என கூறி இருப்தால் எல்லோருக்கும் இது கிடைக்காது. விவேகானந்தர் உலகத்தை திருத்துவது என்பது “நாய் வாலை நிமித்துவது போலானது” என்று குறிப்பிடுகின்றார்.
உலக இயக்கத்துக்கு ஆவரண, விசே~ப சக்திகளுடனான கூடிய அஞ்ஞானத்தை உபாதியாகக் கொண்ட சைதன்னிய சக்தி தேவை. ஆதனால் தான் உலகத்தைப் படைக்க முடியும். மனதில் மறைந்துள்ள புதியைச் விளிக்ச் செய்து தெளிந்துள் சித்தத்தை அறிவதன் மூலமே உண்மையை உணர்து மனத்தைதிரப்படுத்தி (மந்திரம் என்பது மனத்திரப்படுத்துவது என்பது பொருள்)வைராக்கியத்தின் மூலம் ஆத்மாவின் இயல்பான ஒளியை அனுபவித்து (ஆத்மா இயல்பாகவே ஒளியுள்ளது)அதன் வழி நின்றவர்கனே சித்தர்கள். சித்தர்களின் ஞனத்தினால் உண்டான வைத்தியம் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குட்பட்டு நிருபனமாகியுள்ள வைத்திய முறைகளாகும். பக்கவிளைவற்ற காயத்தை கற்பமாக்கும் சக்தி வாய்ந்த முகிலிகள் இயற்கையில் பணச்செலவின்றி இயற்கையின் கொடையாக தேடுவார் அற்று வீதியோரங்களிலும் ,ஓடைகளிலும் ,காடுகளிலும் கிடக்கின்றன. சேற்கையின் கோரம் இன்று இயற்கையை அழிவுறச் செய்ததுடன் ஆயூளையும் குறைத்து நடைபிணமாக தான் யார் என்று தெரியாது நடமாடிக் கொண்டு இருக்கும் “கண்டதே காட்சி கொண்டதே கோல மென” மேல்நாட்டு மோகத்தில் அலையும் காலமிது. மேல் நாட்டவன் தன் நிலை மறந்து சித்தர்கனை தேடி கீழ் நாட்டை நோக்கி படை எடுக்கும் காலமிது. உலகை காப்போம் இயற்கையை நேசிப்போம் என்று கூறிக் கொண்டு இன்றும் அணுவலைகள் உருவக்கிக் கொண்டிருக்கும் காலமிது. நான் என்ற அகந்தையில் அழிந்தொழியும் நாடுகள் ஒரு புறம். இது ஒருபுறமிருக்க சித்தனின் அற்புத ஞானத்தி உத்தவை பல ஞானம், வாணசாஸ்த்திரம், ஒழுக்கமான வாழ்கை முறை, வைத்தியம், தத்துவம் இது போன்ற பல இவற்றை உலகற்யச் செய்வதே இதன் நோக்கம்;. இந்த வகையில் இக்கட்டுரையில் சித்த வைத்தியத்தை அறிமுகப் படுத்துகின்றேன்.
தேரையர் |
சித்தம் தெளிந்தவன் சித்தன்
அவன் போக்கு சிவன்போக்கு
அவனே சிவ சித்தன்.
அவன் சிந்தையில் உதித்தது சித்தவைத்தியம்
இதுவே எமது உடலுக்கு ஆதார மூலம்.
மனி;தனைப் படைத்த இறைவன்
அவன் உடலினின் விளையும் ஊறினை அறிந்து
அதை தடுக்கும் முகிலியும் படைத்தான்.
படைத்தவன் படைப்பின் தத்துவம் அறிய
சித்தம் தெளிய வைத்தான்.
அவனே அவனை அறியவைக்கும்
பரமஇரகசியம் இதுவென அறிந்தால்
அவனே இறைவன்.
ஓளவை தந்த காயகற்ப முகிலிகள் ஐந்தாம் விக்கினம் தீக்கு விநாயகர் துதி;தனில்
“வாக்குண்டான் நல்ல மனமுண்டான்
மாமலரான் நோக்குண்டான் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு”
ஒளவையார் தனது விநாயகர் துதியில் வாக்குண்டான் என்று கூறும் போது ஒரு மனிதனுக்கு வாக்கு என்பது சுத்தமாக இருக்க வேண்டும் திரிகரண சுத்தி உள்ளதாக இருக்வேண்டும். அதாவது மனம், வாக்கு, காயம் இம் மூன்றும் ஒன்றாக செயல்பட வேண்டும். இங்கு வாக்கு என்னும் போது செல்வாக்கு, சொல்வாக்கு, திருவாக்கு இவை மூன்றும் அமைய பெற்றும் நல்ல மனம் ஏற்படும். மற்றவர்களுடைய வளர்ச்சியை கண்டு மகிழும் மனம். கொண்ட உடலை இறைவனுக்காக அர்பணித்து பூக்கொண்டு விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட்டால் விநாயகர் அருள் எப்போதும் இருக்கும். என்பது பொருள்.
இதை வைத்திய நோக்கில் ஆராய்தால் காயகற்பமே அடங்கியுள்ளது. நல்ல வாக்கும், நல்ல மனமும் இருந்தாலே அரோக்கியமான உடல் கிடைத்து விடும். நோய் இருக்காது. “நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” இதுவே ஒரு மனிதனுக்கு போதுமானது. நீண்ட ஆயூள் கிடைத்து விடும். இப்பாடலில் பூ என்பது வெண்தாமரைப்பூ இது ஈரலில் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை உடையது. அடுத்து மேனி இது கும்பமுனியால் அறிமுகப்படுத்ப்பட்ட குப்பைமேனி சூட்டால் எற்படும் நோய்களுக்கு நிவாரணி. அடுத்து தும்பி என்பது முடிதுப்பை இதுவும் உஸ்ண நோய்களுக்கு உகந்தது. அடுத்தது கை என்பது கையான்தகரை, கரிசலை அல்லது கரிசலாங்கன்னி என்னும் முகிலி இதுவும் காமலை போன்ற நோய்களுக்கு உகந்தது. அடுத்து பாதம் என்பது செப்படை என்னும் பூண்டு இது பால்விணை நோய்களுக்குச் சிறந்தது. இவ்வாறு விநாயகர் துதி மூலம் கயகற்ப முகிலிகள் ஐந்தான வெண்தாமரைப்பூ, குப்பைமேனி, முடிதும்பை, கரிசலாங்கன்னி, செப்படை என்பற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓளவையர் சித்தம் தெளிந்த சித்தன். அவர் இயற்றிய “விநாயகா அகவலில்” எம்முள் கடையும் பால்கடல்; கடைவான குண்டலினி விளிப்பும் சகஸ்திராகாரத்தில் அமுதசொரிவு பற்றியும் அதை மேற்கொள்ளும் முறையும் அடையும் இன்பத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு ஒளவையார் என்றால் முதலில் வருபவர் விநாயகப் பெருமான் தான். “புத்தியை வழிபட்பட்டு புத்தியில் உறைந்தவள் ஒளவை” அவ் ஒளவைக்கு வெள்ளை யானையில் கைலாய தரிசனம் கொடுத்தவன் புத்தி.
“ மனத்துள் மறைந்தது புத்தி
ஆதற்கு காரணம் அஞ்ஞானம்
ஞானத்தை மறைத்தது நாம் செய்த வினை
வினையின் பயனே நல்லது தீயது
புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
சித்தத் தெளிவே ஆத்மாவின் விளிப்பு
ஆத்மாவின் ஒளி யில் ஒளிதல்
அதுவே பிறப்பின் அர்த்தம்
இத்தனைக்கும் காரணம் அறியாமையின் சதி
அத்தனையும் நாம் செய்த கறுமாவின் விளைவு
அதற்கு காரணம் மனத்திரம்மில்லாமை
மனத்திரமடைய வைராக்கியம் தேவை
வைராக்கியமடைய குருவருள் தேவை
குருவருளே திருவருன் அதுவே அவன் அருள்”
1. பூவெனக் குறிப்பிட்ட வெண்தாமரையின் மருத்துவப் பண்புகள்.
வெண்தாமரையின் மருத்துவக் குணப்பற்றி தேரையர் பதாத்த குண சிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம் போம்
கோரர் மருத்தின் கொடுமையறும் பாருவதியில்
தண்டாமரையை யொத்த தாழ்குளலே காந்தர் விடும்
வெண்டாமரைப் பூவால் விள்” என்றார் தேரையர். இதன் தாவரவியல் பெயா:; “நின்பெயல்;லோட்டஸ்”
வெண்பாவின் பொழிப்பு
“ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம் போம்”: ஈரலைப் பற்றி வெப்பம் வெண்டாமரையால் போகும். ஈரலில் இரண்டு உண்டு. ஒன்று மண்ஈரல் அடுத்தது கல்ஈரல் இவை இரண்டும் நுன்னுதிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் உடையது. உடலின் இருதயம்,சிறுநீரகம் போன்று இதுவும் முக்கியமானது. வெப்பத்தினால் கல்ஈரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், ஈரலில் கொழுப்பு படிதல், ஈரலில் கல் விளைதல் போன்றன ஏற்படமுடியும். இதனால் மஞ்சல்;காச்சல், ஈரல் வீக்கம், கல் என்பன தோண்றக் கூடும். இதனால் மஞ்சல்காமாலை நோய் ஏற்படுகின்றது இதை தடுக்க வெண்தாமரை பூ உதவுகின்றது அத்துடன் ஈரல் நுன்னுதிகளை உற்பத்தி செய்து உடலில் ஆரோக்கியத்துக்கு உதவும் முக்கிய உறுப்பு. ஆத்துடன் மண்ஈரல் முதிர்ந்த சிவப்பனுக்களை அகற்றும் முக்கிய செயல் பாட்டை இழக்கும். “கோரர் மருத்தின் கொடுமையறும்”: அத்துடன் கோர மருந்துகளின் தாக்கத்தால் உண்டாகும் தாக்கத்தால் ஏற்படும் ஒவ்வாமையை சரி செய்யும் பணியும் ஈரலுடையது தான்.(மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவான நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளை அகற்றும் பணி ஈரலுக்குண்டு அதனால் விளையும் தாக்கத்தரல் ஈரல் பாதிக்கப்படுவதை வெண்தாமரை தடுக்கும்) இவை அனைத்தையும் சரி செய்து திடப்படுத்தும் தன்மை வெண்தாமரைக்கு உண்டு.
முவிகையை பயன்படுத்தும் முறைகள்:
இதனை பயன்படுத்தும் முறையை நோக்குவோமால் தாமரை இதழ்களை அல்லி தவித்து. பல முறை சுத்தமான நீரில் அலம்பி இணலில் உலர்த்தி (அதாவது நெரடி சூரிய வெயிலில் உலத்தாது) அவ்விதழ்களை சூரணம் செய்து பருத்தி துணியால் சலித்து காலை மாலை வெறுவயிற்றில் தேனுடன் கலந்து திருகடி பிரமாணத்தில் அருந்தலாம். அல்லது ஒரு கி;லோ இதழ்கனை உலத்தினால் நூறு கிராம் உலத்திய பூ இதழ் கிடைக்கும் இதனை மூன்று லிற்றர் நீர்விட்டு சுண்டக்காச்சி அரைலிற்றர்ராக்கி இதை அரைத்து வடிகட்டி பணம்கற்கண்டுடன் சேர்த்து காச்சி சர்பத்பதமாக பதப்படுத்திவைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்திவர ஈரல் பலமடைந்து உலலை காயகற்பமாக்கும்.
“மலர்கள் தத்திரங்களின் தன்மைகள்”:
பூக்கள் காலையில் மலர்வதும் மாலையில் உதிர்வதும் இயற்கை. இதுபோன்று இரவில் மலரும் பூக்களும் உண்டு. பெரும்பாலும் காலையில் மலர்வது சூரியனின் கவர்சியில் கவருவன இவைகளை சூரியகாந்தப்பூக்கள் என்பர் இவைகள் சிவ பூஜை பயன்படுத்துபவை இவை பொதுவாக வெப்பநோய்களுக்கு பொருந்தும் இவை பொன்று பத்திரங்களும் உண்டு இவை சூரியன் மறையும் போது தன்னை சுருக்கிக் கொள்ளும் உதிக்கும் போது விரித்துக் கொள்ளும் அவை நெல்லி, வன்னி, ஆத்தி, அத்தி, திருவாத்தி போன்றவை அவையும் மருத்துவக்குணம் நிறைந்தவை. இவை போன்று சூரியன் மறைந்து சந்திரன் வருகின்ற போது
சந்திரனின்கதிர் கவர்சியினால் மலரும் பூக்களும் உண்டு அவை மனமுள்ள பூக்கள் மல்லிகைஈ செம்பகம்,சம்பந்தி, மனோரஞ்சிதம் போன்றவை இவை பொதுவாக அம்பிகைக்கு சமர்ப்பிப்பதாக இருக்கின்றது. சூhயனால் கவரப்படுவதை சூரிகாந்தப்பூகள் என்றும் சந்திரனால் கவரப்பட்டவை சந்திரகாந்தப்பூகள் என்றும் கூறுகின்றனர். முற்காலத்தில் பூக்கள் மலர்நுது வரும் வாசனையைக் கொண்டு நேரங்களைக் நேரத்தை கணிக்கப்பீடு செய்ததாகக் கூறப்படுகின்றது. நேரத்தைப் பொறுத்து அதன் மருத்துவகுணங்களும் மாறுகின்றதாக கூறுகின்றனர். பூகள் விரியும் சத்தம் காதுகளின் கேட்கும் அளவை விட அதிகமாம். என்றும் கூறுகின்றனர். மனத்தை ஈத்திழுத்தெடுக்கும் பன்பு மலர்களின் இயல்பான தன்மையாகும்.
கீதையில் கிரு~;ண பரமாத்மா பூகளில் நான் தாமரை என்றும் சுவாமி விபுலானந்தர் உள்ளத்தை தாமரைக்கு ஒப்பிட்டு “உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றும். “பூவிணுக்கருங்கலம் பொங்குதாரை” என்றும் சுவாமி குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையில் “வெண்தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ள தாடாமரைக்கு” என்றும் உள்ளத்துக் கொப்பாக குறிப்பிட்டதன் பயன் நல்ல உள்ளத்தை அது கொடுக்கும் என்பதால் தான். வெள்ளை உள்ளம் இருந்தாலே போதும் ஆன்மாவை உணர. “மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை” மனத்தை ஸ்திரப்படுத்தவே மந்திரம். எனவே வெண்தாமரையின் சிறப்பை இதன் மூலம் உணரமுடியும்.
குப்பைமேனி |
\
2. மேனி எனக்குறிப்பிட்ட குப்பைமேனியின் மருத்துவப் பண்புகள்
மேனி என்னும் குப்பைமேனி இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
“தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண் சர்வவி~
முந்து குன்மம் வாத முதிர மூலந்தினவு
சூலம் சுவாசம் தொடர் பிளிசங் கபம் போம்
ஞாலஸ் கொள் மேனி யதனால்” என்றார்.
தாவரவியல் பெயர்: “அக்காலிகாஇன்டிகா”
இச்செடியில் உள்ளசிறப்பு என்வென்றால் சூரிய வெளிச்சம் எல்லா இலைகளிலும் படும் அமைப்புக் கொண்டது அச் செடி இலைகளின் அமைப்பு கோபுரம் போலும் கிழ்; இலைகள் இரண்;டுக் கிடையில் மேல் இலை அமையும். அத்துடன் மரம் வளச்சியடையும் போது கீழ் இலைகள் நீண்டு கொள்ளும் தன்மையுடையது. ஒரு இலையின் நிழல் மற்ற இலையில் படாது. இதனால் சூரிய சக்தியை எல்லா இலைகளும் பெறுகின்றன. உடலின் பிரதான மூன்று மண்டலங்களுக்கு சிறந்த நிவாரணியாக அமைகின்றது. அவையாவன சுவாச மண்டலம், சர்ம மண்டலம், ஐPரண மண்டலம் என்பனவாகும். உடல் குப்பையாகப் போனால் அதை சரி செய்து மேனியாக்கும் தன்மை இந்த மூகிலிகைக்கு உண்டு. இம் முகிலி உலகம் மெல்லாம் பலவிக் கிடக்கிறது.
குணமாகும் நோயிகள்:
“தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண”: தந்த வேரில் ஏற்படும் நோய்கள் குணமாகும்;, தீக்கொப்பளம், நிறமிகளை உருவாக்குகின்ற ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு.
“சர்வவி~” : சர்வ வி~;மும் ஒவ்வாமையினால் ஏற்படும் வி~;ம் போக்குகின்ற தன்மை இம் முகிலிக்கு உண்டு.
“முந்து குன்மம்”: உணவு சமிபாடு செய்யும் முறையில் உண்டான உந்து குன்மம் குணமாகும்.
“வாத முதிர மூலந்தினவு”: மலத்துடன் இரத்தம் போதம் அல்லது ஆசன வாயில் ஏற்படும் உதிர மூலம் என்னும் இரத்த மூலம் குணமாகும். உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு அல்லது ஒவ்வாமை என்னும் தினவு நோய் குணமாகும்.
“சூலம சுவாசம் தொடர் பிளிசங”: நோய் குணமாகும். ஆஸ்துமா என்னும் சுவாசநோய் குணமாகும். தலைபரம் போல் தோன்றும் தலிவலியால் ஏற்படும் பினிசம் எனப்படும் இன் நோயியும் குணமாகும்.
“கபம் போம்”: தொன்டையில் நீண்ட நாட்கள் சளிகட்டியிருப்பதனபல் உண்டாகும் கபம் என்னும் நோய்யும் குணமாகும். இந்த ஒரு முகிலிகையால் பதினொரு வகையான நோய்கள் குணமாகும் என தேரயர் குறிப்பிடுகின்றார். இதை அறிவியலும் பல ஆய்வுகளைச் செய்து ஒப்பு கொண்டுள்ளது.
இக் கட்டுரையின் தொடர் பகுதி இரண்டில் வெளியீடு செய்யப்படும்