இந்த வகையில் சித்தர்களின் வாழ்க்கை வரவாறு அறிமுகம்
3.திருமூலர்
“கயிலாயத் தொரு சித்தர் பொதிகையில் சேர்வார் காவேரி சூழ் சாந்தனுர் கருது மூலன் பயிலா நோயுடன் வியத்துவர நீடும் பசுக்களை அவனுளுடல் பாய்தது போத அயலாகப் பண்டயுடல் அருளாளன் மேவி ஆவகு தண்டுறையாண்டுக் கொரு பாவாகக் குயிலாளும் அரசடியிலிருந்து கூறிக்கொதிலா வடகையிலை குறுக்கினாலே” திரு மூலன் கைலையங்கிரி பரம்பரை சார்ந்த முதல் சித்தன் சிவ பெருமானிடமும் நந்திதேவனிடமும் உபதேசம் பொற்ற அருள் சித்தன் அவன். அகத்தின் பால் கொண்ட அன்பில் கைலயங்கிரிதனில்லிருந்து பொதிகை சென்றவன்.
திருக்கேதாரம், பசுகுபதி ,நேர்பாளம், அபிமுத்தம், விந்துமலை, திருப்பருப்தம், திருக்காளத்தி, திருவலங்காடு, காஞ்சி, திருவேரகம், திருப்பதியடைந்து திரிபுரமெரித்த பெருமானை வணங்கி திருக்கூத்தாடிடும் திருவம்பலத்தை தன்னகத்தே கொண்டு பெரும் பற்றப்புலியூரை அடைந்தார். காவேரி நீடாடி திருவாடுதுறை ஈசனை அடைந்து அங்கிருந்து செல்கையில் ஆநிரை செல்வதறியாது நிற்பதை அறிந்து காரணம் புரிகையில் அந்தணர் வாழும் சாந்தனுரில் தொண்டு தொட்டு ஆநிரை மேயங்க்கும் குடியினில் பிறந்த மூலனுடலில் புகுந்து ஆநிரை அழைத்து ஊர்தனில் செல்கையில் ஆநிரை உரிய இடம் செல்கையில் செய்வதறியாது நிற்கையில் மூலன் மனையாழ் அழைக்கையில் மூலனின் உடலில் இருப்பதை உணர்த்திட மனையாலிடம் உடல் செயலற்றிட நீரூபனமானது மூலனுடலில் சித்தன் இருப்பது. அங்கிருந்து திருவாடுதுறையடைந்து இறைவனை வணங்கி அரசமரத்தினடியில் நிஸ்டையில்யாழ்து மூவாயிரம் பா ஆண்டுக்கொன்றாக பாடி திரு மந்திரமாக்கினார்.
திருமூலர் பற்றிக் குறிப்பிடுகையில் “என்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து வென்றனை ஆறுவிரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனை தானிருந் தானுமைந் தெட்டோ” என சேக்கிழாரடிகள் பெரிய புராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
மூலர் பற்றி பலகதைகள் உண்டு மூலன் என்றொரு அந்தனன் மரனத்தையும் முதுமையும் வெல்ல மருந்தொன்று தேடி சீடனும் குருவும் செல்கையில் குருவுக்கு உணவு சமைக்கும் போது குச்சி கொண்டு கிளறுகையில் உணவது கறுக்க தயங்கிய சீடன் தாமதை உண்டு குருவுக்கு பிறி தொருசமயல் சமைக்கையில் சீடனுடல் நரைதிரை நீங்கக்கண்ட குரு காரணமறிந்து சீடன் உண்ட உணவை கக்கவைத்து தாமதை உண்டு நரைதிரை நீங்கப் பெற்றதாக சதுரகிரிப் புராணம் கூறுகின்றது. இப் புராணமானது நந்தி எம்பெருமான் திருமூலருக்கும் மூலர் காலாங்கி நாதருக்கும் கூறியதாக கூறப்படுகின்றது. சதுரகிரி நால்வேததின் விளைந்த மலை வின்னுலக மன்னுலக பாதாளலேக மந்தர் தம்முடலால் செய்த பாவம் போக்க மலைதனை மகாலிங்மாக நினைத்து தவமது செய்தனர்.
தலபுராணமது மூலன் வரலாறு விளம்பையில் பாண்டிய நாட்டின் இரானேந்திரபுரரஜன் சுவேத மகாராஜா ஆதித்த மகாராஜா புத்திரி பட்டத்துராணி சுந்தரவல்லிக்கு வீரசேனனும் சந்திரவல்லிக்கு தர்மாத்தன், சூரசேனன், வஜ்ராங்கன், எனும் புதல்வரும் இருந்தனர். குருகுல வாசம் முடிந்ததும். வீரசேனனுக்கு குணவதியும், தர்மாத்தனுக்கு தனமதியும், சூரசேனனுக்கு சுகமதியும், வஜ்ராங்கனுக்கு மந்திரவல்லியையும் திருமணம் நடந்தேறியது. சுவேத மகாராஜாவின் முதுமையில் தலைமகன வீரசேனனுக்கு முடிசூடி நாட்டின் பொறுப்பொப்படைத்து கானகம் சென்றார்.
ஒருநாள் வீரசேன மன்னன் அரன்மனை நந்தவனத்தில் உவாவச் செல்லுகையில் மலர் வாசனையில் லயித்து மலரை பறித்து முகர்;கையில் மயக்கமுற மருத்துவம் நாடியும் பலனற்றுப்போக மன்னனின் உயிரிழப்பு ஊரெங்கும்பரவ துக்கத்தரில் ஆழ்த செய்தி மூலர் வான்வெளியில் செல்கையில் அறிய ஆச்சிரமம் அடைந்தார். அரசனுக்காக மனமுருகுகையில் சீடன் குருராயாவை அழைத்து உடல்தனை குகைதனில் பாதுப்பாக இட்டு கட்டளையிட்டு சூட்சும உடல்தனி புறப்பட்டு வீரசேனஉடலில் புகுந்தார். வீரசேன் எழுவதைக்கண்ட பட்டத்துராணி அழுகையிலிந்து அதிர்ச்வியில் பருனமித்து சந்தோசத்தில் மூழ்கினாள். பின்னர் நடத்தையில் கானப்பட்ட வேறுபபாட்டை அவதானித்தாள் காலம் கனிய வினாவ மூலர் கூடுவிட்டு கூடுபாய்த விடையத்தையும் மூலர் உடல் இருக்கும்டமும் நெருப்பினில் அழியாத்தன்மையும் அது “காயகற்ப சரீரம் அதை வெடியுப்பு, குந்கிலியம், பொரிகாரம் நிரப்பி விராலிஇலையோடு அடுக்கி தீயிட்டாலே எரியும் என்றும் கூற” அதை அறிந்தாள். மூலருக்கு தெரியாமல் உடலை அழிக்க வீரர்கள் அனுப்பி உடலையும் அளித்தாள். வீரசேனனின் உடல் அழியாவரமென்றும் பெற்று விட்டாள். மூலர் நகர் வலம் வரும் போது குகையையடைந்த போது விடையமறிந்து ஆத்திரமடைந்து உடல் துறக்க என்னி மாறு வேடம் கெண்டு சதுரகிரியை அடைகையில் பிரம்மஞானம் பெற குருவின்றி சாதனை செய்து பிராணாயாமப் பறிச்சியின் முச்சை சமன் செய் விளைந்த போது உயிரிழந்த உடலை கண்டு அதில் புக என்னி கொடுத்வரம் ஞாபக் வர வீரசேனன் உடலை காயகற்பமாக்கி ஜோதி மரப் பூக்கள் பறித்து சில முகிலிகை சேர்த்து அரைத்து மந்திரம் செப்பி மரப்பொந்தில் தெளித்து உடல்தனை வைத்து மந்திரம் செபித்து பெந்தைமூடி மரமாக்கி சம்புகேஸ்வரன் உடலில் புகுந்து நிஸ்டையில் ஆழ்தார். விடையமறிந்து குணவதி சதுரகிரியடைந்து மூலரிடம் கொடுத்வரம் வினாவ மரமான விடையம் இயம்பி போதனை செய்தார். அம்மரமே ஞானிகளின் ஞானமரம் அரசு ஆனது. அதன் பின் திருமந்திரம் திருமூலா உருவாக்கினர். அதன் பின் அவர் திருமூலர் காவியம் 8000, திருமூலர் சற்பநூல் 1000, திருமூலர் சோத்டம் 300, திருமூலர் மாந்திரிகம் 600, திருமூலர் சல்லியம் 1000, திருமூலர் வைத்திய காவியம் 1000, திருமூலர் வைத்திய சுருக்கிடை 100, திருமூலர் வைத்திய சுருக்கம் 200, திருமூலர் சூக்கும ஞானம் 1500, திருமூலர் பெருங்காவியம் 100, திருமூலர் தீட்சை விதி 16, திருமூலர் கோர்வை விதி 8, திருமூலர் தீட்சை விதி 18, திருமூலர் யொக ஞானம் 16, திருமூலர் விதிநூல் 24, திருமூலர் ஆறாதாரம் 64, திருமூலர் பச்சை நூல் 24, திருமூலர் தருமந்திரம் பெரு நூல் 3000, திருமூலர் ஞானம் 84, திருமூலர் ஞானோதேசம் 30, திருமூலர் நடுவணை ஞானம் 30, திருமூலர் ஞானக்குறி 30, திருமூலர் சோடசஞானம் 16, திருமூலர் ஞானம் 11, திருமூலர் குளிகை 11, திருமூலர் புஜா விதி 41, திருமூலர் வியாதிக் கூறு 100, திருமூலர் குரு நூல் முப்பு சூத்திரம் 200 போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
பன்னிரண்டு மடங்கள் அமைத்தார். பிரதம சீடர்கள் காலாங்கி நாதரும், மஞ்சமலைச்சித்தரும்; மாம். காலங்கர், அகோரர், மளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகர் தமதருளால் அழியாமை பெற்றனர். தில்லையில் சிதம்பர சந்நிதியில் மூலர் சந்நிதியில் சுயபுரு பெற்று இலிங்கமானார். அவ்வுரு காண பதஞ்சலி,வியாக்ரபாதர் சுயம்பாக எழுந்தருளியிருக்கின்றனர். “நானென்ற மேலச் சிதம்பரத்தில் நாடி நின்ற திருமூலர் நாடட்ந்;தானே” என்று போகர் தம் ஜனை சாகரம் 312 வது பாடலில் திருமூலர் சமாதியில் வீற்றிருக்குமிடம் குறிப்பிட்டுள்ளார். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு கருவூரர் ஆலயம் அமைத்ததாக கூறப்படுகின்றது. பிற்காலத்தில் மூலர் இலிங்கவடிவாக எழுந்தருளிய இடம் மறைக்கப்பட்டு சிவபெருமான் எழுந்தருளிய இடமாகக்கருதப்பட்டு உமாபதி என அம்மன் சந்நிரியும் அமைத்து சேர்த்துவிட்டனர். “திருமூலாருக்குபின் காலாங்கி நாதரின் வழியில் போகர் அவர்வழியில் கருவூரா திருமூலவர்க்கத்தார்”
திருமூலருடைய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும் தமிழ் ஆகமமாகவும் விளங்குகின்றது. மந்திரம் என்னும் பெயரும் அதற்கு மட்டுமே உண்டு. காலத்தால் முற்பட்டது. அதில் திருவுரு பற்றியும், ஆலய அமைவு, வழிபாட்டு முறை, வழ்க்கைமுறை, பிரபஞ்ச உற்பத்தி, உயிர் உற்பத்தி, ஆறாதரத்தின் உட்பொருள்,போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளது. சித்தாந்தத்தின் ஆதிநூல் அதில் இல்லாதது எதுவும் இல்லை.