காயத்திரி சித்தர் முருகேச சுவாமி |
தம்பிலிவில் சிவகாயத்திரி தபோவனம் |
மட்டக்களப்பு ஸ்ரீ சக்கர மகா மேரு கோயில் |
சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த கதிர்ப்பு என்ற தலைப்பில் நாசா விஞ்ஞானிகளின் அறிக்கை 15. 02. 2011 செவ்வாய்க்கிழமை சர்வதேச நேரப்படி 01.56 மணிக்கு சூரியனிலிருந்து அதீத புற ஊதா கதிர்ப்பு அலைகள் வெளிப்பட்டமை “எஸ் .டி .ஓ.” வின்கலத்தில் பதியப்பட்டுள்ளது. இதனை “எஸ் சுவாலை” என அழைக்கப்படும். மேற்படி கதிரானது தொடர்பாடல்களை பாதிக்கக் கூடியதாக என்று குறிப்பிடபட்டதுடன். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காந்த சக்தி தடீரென வெளிப்படும் போது சூரிய சுவாலைகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு “எஸ் சுவாலை” இருமுறை தோன்றியுள்ளது 1972 இல் ஏற்பட்டபோது அமேரிக்க இலினொயிங் என்னும் மாநிலத்தில் தூர இடங்களுக்கான தொலைபேசி தொடர்பாடல் பாதிக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சேர்ந்த ஆறு மில்லியன் பேர் மின்சாரப்பாதிப்பால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகள் நேரடியான பாதிப்புக்கள். மறைமுகப்பாதிப்பு தெரிவதில்லை. விஞ்ஞானிகள் இப்போது நடந்தபின்தான் அறிகின்றனர் ஆனால் மெய்ஞானிகளான மகரிஷிகள் சித்தர்கள் இருந்த இடத்திலிருந்து கூறுகின்றனர். இலங்கையில் 1978 மார்கழி மாதம் 23ஆம் திகதி அன்று சூறாவளி வீசியது அப்போதுகூட எமது வாநிலை எதிர்வு கூறல் ஆபத்தான கட்டத்தை தான்டி விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கும் தருவாயில் கிழக்குக் கரையில் உக்கிரமாக அடித்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல 2004 மார்கழி மாதம் 26ஆம் திகதி ஆசியாவின் கிழக்குக்கரையை ஆழிப்பேரலை தாக்கிய போது கூட அது தொடர்பான எந்த எச்சரிக்கையும் எந்த ஒரு எதிர்வுகூறல் நிறுவனத்தாலும் எதிர்வு கூறப்பட வில்லை.
சப்தரிஷி மண்டலம் |
இலங்கைத்தீவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பில் கல்லடியில் நாவலடியில் காயத்திரி சித்தர் என எல்லோராலும் அழைக்கப்படும் தவத்திரு ஸ்ரீ முருகேசு சுவாமி அவர்களால் ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் கட்டளையின் பேரில் பவாணி ஆச்சிமத்தின் அமையார் இராஜம்பளின் தியானத்தின் மூலம் அதற்கான கட்டுமான அமைப்புக்கள் வரையப்பட்டு அமைக்கப்பட்டதே சப்தரிஷி மண்டலம். இதனுள் சப்தரிசிகளின் ஏழு உருவங்களும் தம்பர விக்கிகங்களாக பிரதிஷடை செய்யப்பட்டு அதன் நடுவில் காயத்திரியின் தம்பரவிக்கிரகமும் நறுமதை நதியில் எடுக்கப்பட்ட இலிங்கங்களும் வைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் இங்கு தான் சப்தரிஷி மண்டலம் இருக்கின்றது. அங்கு ஸ்ரீ சக்கர மஹாமேரு கோயிலும்( மேரு வடிவம் கொண்டது) ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயண மூரத்தி கோயிலும் பஞ்சமுக ஆஞ்சனேயர்ரும் காயத்திரி தியான மண்டபமும் உண்டு. இங்குள்ள ஸ்ரீ சக்கர மஹாமேரு யந்திரம் 1200 கிலோ கிராம்.
நான் சுவாமி வருகின்ற போது அவரைச்சந்திப்பது வழக்கம் அப்போதெல்லாம் சுவாமி என்னிடம் கூறுவார் நாங்கள் சூட்சுமமாக உன்னிடம் வரும் போது ஏனப்பா இங்கு என்பார். உனது வீட்டிலிருந்து சாதனை செய் என்பார். நான் இங்கு வரும் போது என்னை வந்து சந்தி என்பார். அவ்வாறே நான் நடந்து கொன்டேன். எனக்கு காயத்திரி யந்திரம் மந்திர உச்சாடனம் செய்து தந்தார். அது இப்போதும் என்னிடம் வழிபாட்டில் உள்ளது. என்னிடம் செல்வார் சாத்திரம் சொல்லாதே அது உன் வழியை திருப்பி விடும் என்றார். அப்போது எனக்கு குருதேவர் ஞாபகம் தான் வந்தது ஒருமுறை விவேகானந்தர் தியானநிஷ்டையில் மூழ்கிய போது அயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கண்டார். நிஷ்டை நீங்கிய பின் அதை உறுதி செய்ய அயல் கிராமத்துக்கு சென்று உறுசெய்தார். அதை ஞானத்தில் அறிந்த குருதேவர் குறிப்பிட்காலம் தியானம் செய்வதை சுவாமி விவேகானந்தரருக்கு தடைவிதித்தார். பின் நாளிலே அது பற்றி குறிப்பிட்டார் குருதேவர். அன் நிகழ்வு எதிகாலத்தை மற்றிவிடும்.
நான் இரு முறை இந்தியாவில் தீர்த்தயாத்திரை மேற் கொண்டேன் அதன பின் என் ஆன்மீகப்பாதையில் துரிதமான மற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. 2002 முதல் முறை மேற் கொன்டேன். அப்போது மேல்மருவத்துரில் பங்காரு அடிகள், மதுரமலையில் பாம்பாட்டி சித்தர், பழனிமலையில் போகர் சமாதி, அருனாச்சலத்தில் அருனைமுனி ரமனமகரிஷி,பட்டினத்தடிகள் சமாதிக்கோயில், கருவூத் சித்தர் தவம் செய்த (தஞ்சைக் கொயிலில்) இடம்,அரவிந்தர் சமாதி என்று சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையிலுள்ள பஞ்பூத தலங்கள் ஆறுபடைவீடு அத்தன்சபைகள் என்று பார்த்துவிட்டு தலயத்திரை முடித்து இலங்காபுரியை அடைந்தபின் 2003 புரட்டாதி மாதம் 26ஆம் திகதி அன்று மாளய பட்ச்ஷ அமாவாசை முடிந்து பிதமை ஆரம்பிக்கும் ஆதிகாலை 5.45 மணியளவில் (இலங்கை நேரப்படி) யமதிக்கில் (தென் மூலையில்) வானமும் பூமியும் தெட்டுமளவு சிவன் நின்று ஒளிப்பிளம்பாக மாறி ஆக்ஞா சக்கர வளியாக எனனுள் புகுந்தார் .சிறிது நேரம் எனது உயிரற்ற நிலையில் மயங்கி மீண்டும் புத்துணர்வு பெற்றதை நான் உணர்ந்தேன். இது போன்ற இன்னுமோர் சம்பவம் 2000 ஆண்டும் ஏற்பட்டது. நான் காயத்திரி ஜபம் ஆரம்பித்த காலம் ஆரம்ப காலத்திலே ஜபம் செய்வது தீவிரம். அப்போது காலநேரம் பார்ப்பதில்லை. ஒரு நாள் அதிகாலை ஜபத்தில் தீவிரமாக இறங்கிய போது ஆக்ஞா சக்கரத்திலிருந்து கோடி சூரிய ஒளி வெளிப்பட்டது போல ஏற்பட்டு இது போன்ற நிலை ஏற்பட்டது. அப்போது இதுதொடர்பாக எனக்கு மகாயாகத்தில் தீட்சை தந்த குரு பிம்ம ஸ்ரீசோமஸ்கந்த குருக்களிடம் ( குஞ்சிக் குருக்கள்) கேட்க அவர் நீ கிரகஸ்தன் இப்போது ஜபம் அதிகம் செய்வதை குறைத்து கொள் என்றார். இதன் பின் 2005 புரட்டாதி மாதம் 14ம் திகதி புதன் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அழகி தேவதை பொன்று அம்பிகை தோன்றி எனது காதுக்கருகில் வந்து பிரகாச காயத்திரியை எனக்கு உபதேசித்தாள். விளித்தெழுந்வுடன் இந்தஅடியேன் கண்டகாட்சியை தெலைபேசி மூலம் இலங்கையில் நுவரெலியாவில் இருந்த காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் கூறினேன். அப்போது சுவாமி உதயமான காயத்திரியை கூறுமாறு கூறினார். அதைக் கூற அப்பா ஆதிசத்தியால் உபதேசிக்கப்பட்டுள்ளது. காலம் வரும் போது உன்னால் உபதேசிக்கப்படும் என்றார். சுவாமியை அவருடைய சமாதியடையும் காலத்து முன் நானும் எனது நன்பர் திரு. த. ஈஸ்வரராஜாவும் அம்பாறை மாவட்டத்தில்லுள்ள தம்பிவிலில் சிவகாயத்திரி ஆலய குடமுழுக்கின் போது சந்தித்த போது அங்குள்ளவர்களை போகும்படி கூறிவிட்டு செவ்வாழைப்பழம் இரு வருக்கும் தந்து உண்ணுமாறு கூறி. பல விடயங்களை கூறி விட்டு இவர்களைத் திருத்தமுடியாதுஎன்று கூறி .என்னைப்பார்து உன்வீட்டிலே உன் விடயத்தை தொடர் என்றார்.
பின்னர் சில மாதங்களின் பின் சுவாமி சமாதியாகிவிட்டார் சமாதி இப்போது நுவரெலியாவில் உள்ள இங்காதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது அங்குள்ள லிங்கம் சுவாமி ஸ்ரீ சிவபால யோகீஸ்வரரால் தவ வலிமையினால் நறுமதை நதிலில் எடுக்கப்பட்டு பிதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழிப்பேரலையின் பின் சப்தரிஷி மண்டலம் பிரதேசம் பாதிக்கப்பட்டது. ஆதன் விளைவாக மக்கள் பயத்தின் காரணமாக அங்கு செல்வது குறைவு தற்போது குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. எனினும் பக்தர்களின் அளவு குறைவாகத்தான் இருக்கின்றது. அண்மையில் ஏற்பட்ட அசாதாரனமான காலநிலை காரணமாக இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் மட்டக்களப்பு பெருமளவு பாதிக்கபட்டது. அவ் வேளை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தை கடலுடன் கலக்க வைப்பது முகத்துவாரம்.அது போதமையால் புது முகத்துவாரம் முகத்துவாரம் ஒன்று அமைத்து காலப்போக்கில் அழிந்திருந்தது.அது இப்போது உருவாகி சப்தரிசி மண்டலம் தீவூ போல கட்சியளித்தது. எதிகாலத்தில் மகரிஷிகள் வழிபாட்டுக்குரிய தனிப்பிதேசமாக பருனமித்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாம் அவன் செயல். அவனனின்றி அணுவும் அசையாது .
இரண்டாம் முறை 2008 ஆம்ஆன்டு மீண்டும் எல்லா இடங்களுக்கும் சென்றேன். அதில் விசேடமாக பிரம்மரிஷி மலையில் காகபுஜன்டரின் சீடர் இராஜ்குமார் சுவாமி சந்திப்பு முகியம் பெற்றிருந்தது.
எனது கட்டுரைகளில் எனது அனுபவத்தை பங்கிடுவதன் காரணம் ஆன்மீக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்கும் ஆன்மீகவதிகளுடன் எனது அனுபவத்தை பங்கிட்டு ஆலோசனை பெறம் நோக்கில் தான் அனுபவத்தை எனது கட்டுரைகளில் வெளியிடுகின்றேன். இவைகள் தேவ இரகசியமாக இருந்தாலும் இக் கட்டுரைகளைப் பின் பற்றி ஒருவரவது திருந்தி ஆன்மீக நாட்டம் கொண்டாலே அது எனது முயற்சின் வெற்றிதான் 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'
No comments:
Post a Comment